வாவ்.. 4 டிராகன்கள் கட்டிப்புரண்டு சண்டையிட்ட வீடியோ காட்சிகள்!
By Aruvi | Galatta | 05:20 PM
இந்தோனேசியாவில் 4 கொமேடோ டிராகன்கள் கட்டிப்புரண்டு சண்டையிட்ட காட்சிகள் தற்போது வைரலாகி வருகிறது.
இந்த நூற்றாண்டில் டிராகன்கள் வாழ்கிறது என்பதே மிகப் பெரிய ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது. அதுவும், அந்த டிராகன்கள் ஒன்றோடு ஒன்று சண்டை போட்டு, யார் பெரியவன் என்று நிரூபிக்கும் காட்சிகள் எல்லாம் கண்பது என்பது சினிமாவில் மட்டுமே சாத்தியம். நேரில் காண்பது என்பது மிக அறிது. அப்படிப்பட்ட அரிதான ஒரு காட்சி தான், தற்போது இந்தோனேசியாவில் நிகழ்ந்துள்ளது.
உலகின் மிகப்பெரிய பல்லி இனமான கொமேடோ டிராகன்கள், இந்தோனேசியத் தீவுகளில் மட்டுமே இருப்பதாகக் கூறப்படுகிறது.
இந்த வகையான கொமேடோ டிராகன்கள் 10 அடி நீளமும், குறைந்த பட்சம் 80 கிலோ எடை வரை இருக்கும் என்றும் கூறப்படுகிறது. இந்த டிராகன்களின் எச்சில், மிகக் கடுமையான விஷத்தன்மை கொண்டவை என்றும் கூறப்படுகின்றன.
இதனிடையே, இந்தோனேசியாவில் உள்ள கொமேடோ தேசியப் பூங்காவில் வழக்கம் போல், வனத்துறை ஊழியர்கள் பராமரிப்புப் பணிக்குச் சென்றுள்ளனர்.
அப்போது, அந்த வனப்பகுதியில் 2 கொமேடோ டிராகன்கள், ஒன்றோடு ஒன்று மாறி மாறி சண்டை போட்டுக்கொண்டதைப் பார்த்துள்ளார்.
இதனைப் பார்த்துப் பதறிப்போன அந்த ஊழியர், உயிர் பயத்தில் அங்கேயே மறைந்து நின்றுள்ளார். இதனையடுத்து, தனது செல்போனில் அவற்றை வீடியோவாகவும் எடுத்துள்ளார்.
அப்போது, மேலும் 2 டிராகன்கள் வந்துள்ளது. இதனையடுத்து, 4 டிராகன்களும் ஒன்றோடு ஒன்று மோதிக்கொண்டு, யார் பெரியவன் என்று சண்டைபோட்டுக்கொண்டது. குறிப்பாக, அந்த டிராகன்கள் சுமார் 8 அடி உயரத்திற்கு எழும்பி நின்று, ஒன்றோடு ஒன்று சண்டையிட்டுள்ளன.
இதனைப் பார்த்து மிரண்டுபோன அந்த ஊழியர், இந்த காட்சிகளை அப்படியே தத்ரூபமாகப் படம் பிடித்துள்ளார். தற்போது, இந்த காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.