ரஜினியை சாதாரண ஒரு ஆளாக நினைத்துவிட கூடாது! - ஹெச்.ராஜா
By Abinaya | Galatta | Dec 11, 2020, 05:47 pm
மதுரையில் செய்தியாளர்களை சந்திப்பில் பேசிய ஹெச்.ராஜா, ரஜினியின் அரசியல் கட்சி துவக்க அறிவிப்பு உள்ளிட்ட பல விசயங்களுக்கு கருத்து தெரிவித்தார். ‘’ 1996ஆம் ஆண்டில் ரஜினிகாந்த் திமுகவுக்கு குரல் கொடுத்தவர். ஜெயலலிதா மீண்டும் ஆட்சிக்கு வந்தால் ஆண்டவனால் கூட தமிழகத்தை காப்பாற்ற முடியாது என கூறினார். ரஜினிகாந்த் கட்சியால் சட்டமன்ற தேர்தலில் திமுகவுக்குதான் ஆபத்து. 2ஜி தீர்ப்பு விரைவில் வர உள்ளது. ஆ.ராசா ஜனவரி 31 வரைதான் பேச முடியும்.
அமித் ஷா வருகையால் ரஜினி கட்சி தொடங்கவில்லை. சுயமாக சிந்தித்து கட்சி தொடங்குவதாக தெரிவித்துள்ளார். ரஜினியை சாதாரண ஒரு ஆளாக நினைத்துவிட கூடாது. திமுக தமிழகத்தில் குழப்பம் ஏற்படுத்த நினைக்கிறது.
ஒரு யூனிட் மின்சாரத்துக்கு ஒரு பைசா குறைக்கச்சொல்லி போராடிய விவசாயிகளைச் சுட்டுக் கொன்ற தி.மு.க-தான் தற்போது நீலிக்கண்ணீர் வடிக்கிறது.மூன்று வேளாண் சட்டங்களும் விவசாயிகளைக் காப்பற்றக் கொண்டுவரப்பட்டவை.
வட மாநிலங்கள் போல் தமிழ்நாட்டிலும் ஒப்பந்த பண்ணை முறை நடைமுறையில் உள்ளது. வேளாண் சட்டங்களின் நன்மைகள் குறித்து தெரியாமல் பேசுபவர்கள் முட்டாள்கள். வேளாண் சட்டங்களின் நன்மைகள் குறித்து தெரிந்தும் பேசுபவர்கள் அயோக்கியர்கள். திமுக விவசாயிகள் கொலை செய்துள்ளது. திமுக வேளாண் சட்டங்கள் குறித்து தொடர்ந்து தவறாக பிரச்சாரம் செய்து வருகிறது” என்றார்