“லிவ்வீங் டூ கெதரில் இருந்தால் பாலியல் குற்றமாகுமா?!” என்று, இளம் பெண்ணைப் பார்த்து உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது.
அதாவது, உத்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த வினய் பிரதாப் சிங் என்ற நபருடன், அந்த மாநிலத்தைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர், திருமணம் செய்துகொள்ளாமல், தாலி கட்டிக்கொள்ளாமல் மேல் நாட்டு கலாச்சாரமான லிவ்விங் டூ கெதரில் வாழ்ந்து வந்திருக்கிறார்.
இப்படியாகவே, சமூகத்தால் அங்கீகரிக்கப்படாத ஒரு உல்லாச வாழ்க்கையை அந்த இளம் பெண்ணும், வினய் பிரதாப் சிங்கும் வாழ்ந்து வந்திருக்கிறார்கள்.
இவர்களது இந்த உல்லாச வாழ்க்கையான சமார் 2 ஆண்டுகளாகத் தொடர்ந்துகொண்டு இருந்திருக்கிறது. இப்படியான சூழ்நிலையில், அவர்களுக்குள் சின்ன சின்ன கருத்து வேறுபாடுகள் வந்ததாக கூறப்படுகிறது.
இப்படியான சூழ்நிலையில், காதலன் வினய் பிரதாப் சிங், திடீரென்று வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இதனைக் கேள்விப்பட்டு கடும் அதிர்ச்சியடைந்த லிவ்விங் டூ கெதரில் இருந்த அந்த இளம் பெண், காதலன் வினய் பிரதாப் சிங் சண்டைக்குச் சென்று உள்ளார். காதலனிடம் அவர் விளக்கம் கேட்டுள்ளார். அப்போது, காதலன் தனது தரப்பு நியாயத்தை கூறியதாகத் தெரிகிறது.
இதனால், இன்னும் அதிர்ச்சியடைந்த அந்த இளம் பெண், “காதலன் வினய் பிரதாப் சிங், என்னை பாலியல் பலாத்காரம் செய்துவிட்டதாக” வழக்கு தொடர்ந்தார்.
கடந்த 2019 ஆம் ஆண்டு இந்த வழக்குப் பதிவு செய்யப்பட்ட நிலையில், இது தொடர்பான விசாரணை தொடர்ச்சியாக நடைபெற்று வந்தது. இது தொடர்பான அனைத்து தரப்பு சாட்சிகளும் விசாரிக்கப்பட்ட நிலையில், இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பாப்டே, “கடந்த 2 ஆண்டுகளாக நீங்கள் 2 பேரும் ஒற்றுமையுடன் தான் வாழ்ந்து வந்திருக்கிறீர்கள்” என்று, குறிப்பிட்டார்.
அத்துடன், “காதலன் வினய் பிரதாப் சிங், உங்களை பாலியல் பலாத்காரம் செய்தது உண்மை என்றால், அவர் உங்களுடன் இருக்கும் போதே நீங்கள் இந்த புகாரைப் பதிவு செய்யாதிருக்கலாம்” என்று, கேள்வி எழுப்பினார்.
தொடர்ந்து பேசிய நீதிபதி, “நீங்கள் ஏன் வேறு ஒரு பெண்ணை அவர் திருமணம் செய்து கொண்டதற்குப் பிறகு, இந்த புகாரைக் கொடுத்தீர்கள்?” என்றும், சரமாரியாகக் கேள்வி எழுப்பினார்.
இதற்கு, பாதிக்கப்பட்ட அந்த இளம் பெண், “காதலன் வினய் பிரதாப் சிங், எனக்குப் பொய்யான வாக்குறுதி அளித்து, திருமணம் செய்யாமல் என்னுடன் உடலுறவில் ஈடுபட மாட்டேன் என்று என்னிடம் பொய் சொல்லிவி0ட்டு, மணலி பகுதியில் உள்ள ஒரு கோயிலுக்கு அழைத்துச் சென்று போலியாக என்னைத் திருமணம் செய்து கொண்டு அவர் நாடகமாடினார்” என்றும், அந்த பெண் குற்றஞ்சாட்டினார்.
மேலும், “இப்படியான இந்த நாடக திருமணத்திற்குப் பிறகு தான், அவர் என்னிடம் உடலுறவு கொண்டார் என்றும், அதன் பிறகே அவர் என்னை தாக்கினார்” என்றும், அந்த பெண் குற்றம்சாட்டினார்.
இதனைக் கேட்ட நீதிபதி பாப்டே, “இப்போது இவ்வளவு விசயங்களைக் கூறும் நீங்கள், வினய் உடன் இருக்கும் போதே அந்த 2 ஆண்டுகளிலேயே அவரை பற்றித் தெரிந்த உடனேயே, அவரால் தாக்குதலுக்கு ஆளாகும் போதே ஏன் இந்த புகாரை கொடுத்திருக்கலாமே?” என்று மீண்டும் கேள்வி கேட்டார்.
குறிப்பாக, “நீங்கள் இருவரும் மனம் உவந்து ஈடுபட்ட உடலுறவை பாலியல் வன்கொடுமை என்று சொல்ல முடியாது” என்றும், நீதிபதி குறிப்பிட்டார். இந்த செய்தி இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.