இளைஞர்களின் ஆதரவு எடப்பாடி பழனிசாமிக்கா?

இளைஞர்களின் ஆதரவு எடப்பாடி பழனிசாமிக்கா? - Daily news

தமிழக சட்டப்பேரவை தேர்தல் நெருங்கும் இந்த தருணத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பல திட்டங்களை அறிவித்து வருகிறார். கடந்த நாட்களில் அவர் அறிவித்த அறிவிப்புகள் அனைத்தும் பெரும்பாலான மக்களை கணிசமாக கவர்ந்துள்ளது. 


கூட்டுறவு வங்கியில் வாங்கியிருந்த விவசாயிகளின் பயிர்கடன்களையும், ஏழை, எளிய மக்களின் நகைக்கடன்களையும் தள்ளுபடி செய்துள்ளார். இது விவசயிகள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. அதைத்தொடர்ந்து கூட்டுறவு வங்கியில் மகளிர் சுயஉதவி குழு வாங்கியிருந்த கடன்களையும் தள்ளுபடி செய்ததாக அறிவித்தார்.  


வேலைக்கு செல்லும் பெண்களுக்கு மானிய விலையில் இருசக்கர வாகனங்கள், திருமணம் ஆகும் பெண்களுக்கு எட்டு கிராம் தங்கம், மகப்பேறு காலத்தில் பெண்களுக்கு ரூ18,000 நிதி உதவி தொகையும், குழந்தை பிறந்த பின் 16 வகையான பொருட்கள் அடங்கிய பரிசு பெட்டகம், வயதானவர்களுக்கு முதியோர் உதவி தொகை  என அனைத்து தரப்பு வயது பெண்களுக்கு பல நலத்திட்டங்களை அறிவித்துள்ளார் முதல்வர். 


இந்த வகையில் நலத்திட்டங்கள் இளைஞர்கள் வட்டாரத்திலும் பெரிதளவில் பயனுள்ளதாக  அமைந்துள்ளது. கொரோனா காலத்தில் மாணவர்கள் முதல் பணிக்கு செல்பவர்கள் வரை நிறைய இடர்களை சந்தித்துள்ளனர். மாணவர்கள் மத்தியில் பள்ளிக்கு செல்ல முடியாத நிலை உருவானது, பாடத்திட்டங்களை வீட்டிலிருந்தபடியே படிக்க, இணையவழி அல்லது தொலைக்காட்சி வழியில் பாடங்களை படிக்க சாத்தியக்கூறுகளை அமைத்து கொடுத்ததோடு மட்டுமல்லாமல், இணையவழி கல்வி பயில கல்லுரி மாணவர்களுக்கு தினமும் 2GB இன்டர்நெட்டையும் இலவசமாக வழங்கினார். இதன் மூலம் மாணாக்கர்கள் ஊரடங்கிலும் கல்வி பயில வழி வகை செய்யப்பட்டுள்ளது. 


ரேஷன் கடைகளில் அரிசி, சர்க்கரை, எண்ணெய் என்ற அத்தியாவசிய பொருட்கள் டிசம்பர் மாதம் வரை இலவசமாக பெற்றுக்கொள்ளலாம் எனவும் அறிவித்தார். மேலும், தற்போது தமிழகத்தில் அநேக தொழில் முதலீடுகளை ஈர்த்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் இளைஞர்கள் அநேகருக்கு அதிகளவில் வேலை வாய்ப்புகள் பெரும் வாய்ப்பினை அமைத்து கொடுத்துள்ளார். இத்தகைய நலத்திட்டங்கள் மூலம் இளைஞர்களின் கவனம் பெரிதளவில் ஈர்க்கப்பட்டுள்ளது என அதிமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

Leave a Comment