St.பிரிட்டோ அகாடமியின் உலக தரத்திலான Fefdy பாடமுறை குறித்து விவரிக்கும் Dr.விமலா ராணி! வைரல் வீடியோ இதோ

St.பிரிட்டோ அகாடமியின் உலக தரத்திலான Fefdy பாடமுறை குறித்து விவரிக்கும் Dr.விமலா ராணி! வைரல் வீடியோ இதோ - Daily news

இந்தியாவின் மிகச் சிறந்த கல்வி நிறுவனங்களில் ஒன்றாக குழந்தைகளின் நலனை கருத்தில் கொண்டு உலக தரத்தில் பல அட்டகாசமான பாட முறைகளில் கல்வியை வழங்கி வரும் செயின்ட் பிரிட்டோ அகாடமி தற்போது தனது சாதனை பயணத்தில் 25 ஆண்டுகளை வெற்றிகரமாக கடந்திருக்கிறது. மதிப்பிற்குரிய டாக்டர்.விமலா ராணி பிரிட்டோ அவர்கள். தனது கணவரும் தளபதி விஜயின் மாஸ்டர் படத்தின் தயாரிப்பாளரும் கெர்ரி இன்டெவ் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் தலைவருமான சேவியர் பிரிட்டோவுடன் இணைந்து செயின்ட் பிரிட்டோஸ் அகாடமியை நிறுவி தற்போது தலைசிறந்த கல்வி நிறுவனங்களில் ஒன்றாக செயின்ட் பிரிட்டோ அகாடமியை வெற்றிகரமாக வழிநடத்தி வருகிறார் .
 
இந்த நிலையில் நமது கலாட்டா தமிழ் சேனலுக்கு பிரத்யேக பேட்டி கொடுத்த Dr.விமலா ராணி அவர்கள் தங்களது சாதனை பயணத்தின் முக்கிய தகவல்களை பகிர்ந்து கொண்டார். அந்த வகையில் பேசும்போது, “FefDy என்பது எந்த விதத்தில் தன் குழந்தைகளை சிறந்த விதத்தில் உலக தரத்தில் படிக்க வைக்க வேண்டும் என்று நினைக்கும் பெற்றோர்களுக்கு ஒரு நல்ல பாடத்திட்டமாக இருக்கிறது?” எனக் கேட்டபோது, “பெரும்பாலும் உலக அளவில் பாடத்திட்டங்கள் வகைப்படுத்தப்பட்டுள்ளது. ஒரு ஐந்து வயது குழந்தைக்கு இதெல்லாம் தெரிந்திருக்க வேண்டும் ஒரு ஏழு வயது குழந்தைக்கு இதெல்லாம் தெரிந்திருக்க வேண்டும் அறிவியலில் இது தெரிந்திருக்க வேண்டும் கணிதத்தில் இது வேண்டும். ஆங்கிலத்தில் இதெல்லாம் தெரிந்திருக்க வேண்டும் இப்படித்தான் வகைப்படுத்தப்பட்டுள்ளது ஆனால் அதை சொல்லிக் கொடுக்கும் விதம் தான் வேறுபடுகிறது அதுதான் கரிக்குலம் என சொல்லப்படுகிறது. உதாரணத்துக்கு ஒரு ஆறு வயது குழந்தை இருக்கிறது என்றால் அதற்கு கூட்டல், கழித்தல், ஒன்று முதல் 100 வரை இதெல்லாம் தெரிய வேண்டும் இதே போல் தான் ஒவ்வொரு பாடத்திற்கும் வகைப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் அதை எப்படி நாம் சொல்லிக் கொடுக்கிறோம், நன்றாக புரியும் படியாக சொல்லிக் கொடுக்கிறோமா, மற்ற இடங்களில் அதை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதை போல் கற்றுக்கொடுக்கிறோமா… இதில் எல்லாம் தான் பாட வகைப்படுத்துதல் முக்கியமாய் இருக்கிறது. மனித இயல்பே அதுதான் முதலில் பார்ப்பது பிறகு கேட்பது அதன் பிறகு சொல்வதும் பின்பு தான் வடிவமைக்கும் தன்மை வருகிறது. ஆனால் படிப்பதில் மட்டும்தான் முதலில் வடிவமைப்பதை கொண்டு வருகிறார்கள். இந்த வரிசை தலைகீழ் ஆகும் போது அதில் அதற்கான சிரமங்கள் இருக்கும். பிறகு சித்திர வடிவத்தில் நீங்கள் கற்றுக் கொடுக்கும் போது அது எளிதாக மனதில் பதியும். கடந்த பத்து வருடங்களில் நீங்கள் பார்த்தால் மிக அருமையான வளர்ச்சி இருக்கிறது.” என்றார். 

தொடர்ந்து, “உங்கள் FefDy பாட முறைப்படி குழந்தைகள் இயல்பாக பேசிக் கொள்ளும் விதத்தில் நீங்கள் பாடத்திட்டத்தை வடிவமைத்திருக்கிறீர்களா?” எனக் கேட்டபோது, “ஆமாம் அப்படித்தான் நான் இந்த பாடமுறையை வடிவமைத்தேன், எழுத்து முறையையும் வடிவமைத்துள்ளேன்.” என்றார். மேலும் “இந்த பாட முறையை வடிவமைக்க நீங்கள் எவ்வளவு முயற்சித்து இருக்கிறீர்கள்? எவ்வளவு கால அவகாசம் தேவைப்பட்டது?” எனக் கேட்டபோது, “ஏறக்குறைய 10 வருடங்கள் தேவைப்பட்டது. ஏனென்றால் ஒரு பாட முறையை பாடத்திட்டத்தை எளிதாக, எனக்குப் பிடித்திருக்கிறது, எனக்கு எளிதாக இருக்கிறது என்றெல்லாம் வடிவமைக்க முடியாது. தலைமுறை தலைமுறையாக கொண்டு செல்லும் ஒரு விஷயம், அப்படி இருக்கும்போது நான் இதை மிகச் சரியான முறையில் செய்ய வேண்டும் என்று நினைத்தேன். நமக்கு வேண்டும் என்கிறது போல் செய்யக்கூடிய விஷயம் கிடையாது, அப்படி இருக்கும்போது இதற்கு நிறைய அடிப்படை ஆராய்ச்சி தேவைப்பட்டது. ஆராய்ச்சி குழுவில் நிறைய பேர் இருக்கிறார்கள் அவர்களுடன் நானும் சேர்ந்து யூனிசெபில் 2050 இல் என்ன தேவையோ, ஒரு சில வருடங்களுக்கு ஒரு முறை யூனிசெப் குழந்தைகளின் பாடத்திட்ட வகை படுத்துதலில் ஒரு சில விதிகளை தீட்டுவார்கள் அந்த விதிகளை நாங்கள் பின்பற்றி அதை நிறைவு செய்து FefDy எனும் பாட திட்டத்தை உருவாக்கி இருக்கிறோம்.” என பதில் அளித்திருக்கிறார். இன்னும் பல தகவல்களை நம்மோடு பகிர்ந்து கொண்ட Dr.விமலா ராணி அவர்களின் அந்த முழு பேட்டியை கீழே உள்ள லிங்கில் காணலாம்.
 

Leave a Comment