அரசியலுக்கு வரும் பங்காரு அடிகளார் குடும்பம்! ஏன்? என்னாச்சு??
ஆன்மிகத்தில் பெயர் பெற்றுத் திகழும் பங்காரு அடிகளார் குடும்பத்தினர் அரசியலுக்கு வர உள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.
“மேல்மருவத்தூர்” என்ற பெயரைக் கேட்டலே, “ஆதிபராசக்தி” என்ற பெயரைத் தாண்டி, அனைவருக்கும் “பங்காரு அடிகளார்” தான் நினைவுக்கு வந்து நிற்பார்.
ஆதிபராசக்தி அம்மன் வணங்க வர ஒட்டு மொத்த கூட்டமும், “பங்காரு அடிகளாரையும் வணங்கிவிட்டுத் தான், அங்கிருந்து வீடு திரும்புவார்கள். அந்த அளவிற்குப் புகழ் பெற்ற ஆன்மிக மத தலைவர்களில் ஒருவராக வலம் வருகிறார் பங்காரு அடிகளார்.
அத்துடன், மேல்மருவத்தூரில் எங்கு பார்த்தாலும் பங்காரு அடிகளாருக்கு சொந்தமான நிலங்கள் தான் காணப்படுகின்றன. அந்த அளவிற்கு பங்காரு அடிகளார் பெயரில் நிறைய கல்வி நிறுவனங்களும் செயல்பட்டு வருகின்றன.
தற்போது, மேலும் ஆச்சரியமூட்டும் வகையில் பங்காரு அடிகளார் மனைவி லட்சுமியின் சொத்து மதிப்பும் வெளியாகி இருக்கிறது.
பங்காரு அடிகளாரின் மனைவி லட்சுமியின் பெயரில் மட்டும் கிட்டதட்ட 253 கோடி ரூபாய் சொத்து இருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளன. இந்த தகவல் தற்போது வெளியாகி தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அதாவது, தமிழ்நாட்டில் அடுத்த மாதம் 6 மற்றும் 9 ஆம் தேதிகளில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது.
காஞ்சிபுரம் உள்பட மொத்தம் 9 மாவட்டங்களில் இந்தத் தேர்தல் நடத்தப்பட்டு வருகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 15 ஆம் தேதி அன்றே துவங்கிய
நிலையில் வரும் செப்டம்பர் 22 ஆம் தேதியோடு நிறைவடைகிறது.
அந்த வகையில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் தற்போது பலரும் தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்து வருகின்றனர்.
அதன் படி, பங்காரு அடிகளாரின் மனைவி லட்சுமியும் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். அவர் தாக்குதல் செய்த வேட்புமனு தான், தற்போது தமிழகத்தின் பலரின் கவனத்தையும் பெற்று உள்ளது.
அதுவும், பங்காரு அடிகளாரின் மனைவி லட்சுமி, மேல்மருவத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு தற்போது 3 வது முறையாகப் போட்டியிடப் போகிறார்.
அதே போல், பங்காரு அடிகளாரின் மனைவி லட்சுமிக்கு மாற்று வேட்பாளராகப் பங்காரு அடிகளாரின் மகன் செந்தில் குமார் போட்டியிடுகிறார்.
அதுவும், இடைப்பட்ட 10 ஆண்டுகளில் இந்த ஊராட்சி பட்டியலினத்திற்கு மாற்றப்பட்டதால், இவரால் போட்டியிட முடியவில்லை. தற்போது தான் அவர் மீண்டும் போட்டியிடுகிறார்.
அரசியல் கட்சிகளின் சார்பில்லாமல் சுயேச்சையாக அவர் இந்த முறை களம் காண்கிறார்.
குறிப்பாக, பங்காரு அடிகளாரின் மனைவி லட்சுமி தாக்கல் செய்துள்ள வேட்புமனுவில், “சொத்துமதிப்பு சுமார் 250 கோடி ரூபாய்” என்று, அவர் குறிப்பிடப்பட்டு உள்ளதாகத் தகவல்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன.
இப்படியாக, அரசியலில் வேட்பாளராக களமிறங்கும் பங்காரு அடிகளார் மனைவியின் சொத்து மதிப்பு 250 கோடியாக உள்ளது, அனைவரின் புருவத்தையும் உயரச் செய்து உள்ளது.
மேலும், லட்சுமியின் சொத்து மதிப்பானது அசையும் சொத்து 7 கோடி ரூபாயாகவும், அசையா சொத்து 16 கோடி ரூபாயாகவும் இருக்கிறது என்றும், கூறப்படுகிறது. இவை இரண்டையும் கூட்டி 23 கோடி ரூபாய் என்று போடுவதற்குப் பதில் 253 கோடி ரூபாய் என்று பிழையாக அந்த வேட்பு மனுவில் சுட்டிக்காட்டப்பட்டு உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி பொது மக்களைக் குழப்பத்தில் ஆழ்த்தி உள்ளது.