தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3,756 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று கடந்த சில நாட்களை ஒப்பிடும் போது, சற்ற குறைந்து இருக்கிறது என்றே தெரிகிறது. ஆனாலும், கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக ஏற்படும் உயிர் இழப்புகள் தற்போது அதிகரித்துக் காணப்படுகிறது.

அதன்படி, தமிழகத்தில் 3 வது நாளாக இன்று 4 ஆயிரத்திற்கும் கீழான கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு பதிவாகி உள்ளது. அதன்படி, இன்று ஒரே நாளில் 3,756 பேருக்கு கொரோனா ரைவஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாகத் தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதனால், தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,22,350 ஆக உயர்ந்து உள்ளது. 

இதில், சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில் 1,261 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனால், சென்னையில் கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 72,500 ஆக உயர்ந்துள்ளது. அத்துடன், சென்னையில் மட்டும் கொரோனா தொற்று காரணமாக இன்று 26 பேர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்து உள்ளனர்.

மேலும், திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று மட்டும் 300 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மதுரையில் இன்று அதிக அளவாக 379 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதனால், மதுரையில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 5,057 ஆக உயர்ந்துள்ளது. மதுரையில், இது வரை 86 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்து உள்ளனர். மதுரையில், கொரோனாவால் பாதிக்கப்பட்டு 1,160 பேர் குணமடைந்துள்ள நிலையில், அங்கு 3,811 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். 

தேனி மாவட்டத்தில் இன்று மேலும் 75 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதனால், அந்த மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,293 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை அந்த மாவட்டத்தில், 455 பேர் குணமடைந்துள்ளனர். அங்கு 11 பேர் வரை, கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர்.

அதே போல், தமிழகத்தில் மாவட்டம் வாரியாக இன்று கொரோனா பாதிப்பு நிலவரத்தைப் பார்க்கும் போது.. 

சென்னை -1261
மதுரை - 379
திருவள்ளூர் - 300
வேலூர் - 160
செங்கல்பட்டு - 273
தூத்துக்குடி - 141
காஞ்சிபுரம் -133
குமரி - 115
விழுப்புரம் -106
தேனி - 75
கடலூர் -71 
விருதுநகர் -70
சேலம் - 68
ராமநாதபுரம் - 65
தி.மலை - 55
தென்காசி - 27
அரியலூர் - 12
கோவை - 87
தர்மபுரி - 32
திண்டுக்கல் -10
க.குறிச்சி -13
கரூர் -7
கிருண்ணகிரி -14
நாகை -19
நாமக்கல் -12
நீலகிரி-10
பெரம்பலூர் -3
புதுக்கோட்டை - 31
ரா.பேட்டை - 16
சிவகங்கை - 34
தஞ்சை - 15
திருப்பத்தூர் -10
திருவாரூர் -38
நெல்லை -6
திருப்பூர் -26
திருச்சி -21

என்ற அளவில் கொரோனா பாதிப்பு இன்று பதிவாகி உள்ளது.

மேலும், தமிழகத்தில் கொரோனாவால் ஏற்பட்ட உயிரிழப்புகளை மாவட்டம் வாரியாக பார்க்கும் போது...

மாவட்டம் வாரியாக இன்று கொரோனா உயிரிழப்புகள்!

சென்னை- 26
மதுரை- 9
திருவள்ளூர்- 6
ராணிப்பேட்டை - 5
தேனி - 4
செங்கல்பட்டு- 2
காஞ்சிபுரம் - 2
சிவகங்கை - 2
திருச்சி - 1
தஞ்சை -  1
சேலம் - 1
கிருஷ்ணகிரி - 1
திண்டுக்கல் - 1
புதுக்கோட்டை - 1
ராமநாதபுரம்- 1
கோவை - 1

என்கிற அளவில் இறப்பு விகதம் பதிவாகி உள்ளது.

தமிழகத்தில் இன்று கொரோனா பரிசோதிக்கப்பட்ட மாதிரிகளின் எண்ணிக்கை 35,979 ஆக உள்ளது. இது வரை மாநிலத்தில் மொத்தம் 14,49,414 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டு உள்ளதாகவும், தமிழக சுகாதாரத்துறை கூறி உள்ளது.

மேலும், தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து இன்று 3,051 பேர் குணம் அடைந்துள்ளனர். இது வரை தமிழகம் முழுவதும் 74,167 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து குணம் அடைந்துள்ளதாகவும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. அத்துடன், தமிழகம் முழுவதும் தற்போது 46,480 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் என்றும், தமிழக சுகாதாரத்துறை கூறி உள்ளது.

அதே போல், இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து குணமடைந்தோர் விகிதமானது 61.53 சதவீதமாக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தற்போது தெரிவித்துள்ளது.

அதாவது, நேற்று இதன் விகிதம் 61.13 சதவீதம் என்ற அளவிலிருந்த நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் 16 ஆயிரத்து 883 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர். இதன் காரணமாக, கொரோனாவிலிருந்து நாடு முழுவதும் குணமடைந்தோர் எண்ணிக்கையானது 4 லட்சத்து 56 ஆயிரத்து 830 ஆக அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் கூறி உள்ளது.