உலகையே அஞ்சி நடுங்க வைக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பால், கடந்த 2 நாட்களில் ஒரு லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இதுவரை 24 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர்.. 

சீனாவிலிருந்து உலகம் முழுக்க பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ், நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கிட்டத்தட்ட 200 நாடுகளுக்கு கொரோனா வைரஸ் பரவி உள்ளதால், உலகம் முழுவதும் சுமார் 300 கோடிக்கும் மேற்பட்டவர்கள் வீடுகளில் முடங்கி உள்ளனர்.

Corona death count crosses 24 thousand worldwide

இதனால், உலகின் மிகப் பிரபலமான சாலைகள் மற்றும் வீதிகள் யாரும் மக்கள் நடமாட்டம் மின்றி வெறிச்சோடி காணப்படுகின்றன. ஆனாலும் கொரோனா என்னும் அரக்கனை உலக நாடுகளால் கட்டுப்படுத்த முடியவில்லை.

கடந்த 2 நாட்களில் மட்டும் உலகம் முழுவதும் சுமார் ஒரு லட்சம் பேர், கொரோனா வைரசால் பாதிப்புக்கு ஆளாகி சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால், உலக நாடுகள் யாவம் கடும் அச்சத்தில் உரைந்துபோய் உள்ளன.

Corona death count crosses 24 thousand worldwide

தற்போது, ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் வழங்கிய புள்ளி விவரங்களின்படி, கடந்த 2 நாட்களில் ஒரு லட்சம் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது. உலகம் முழுவதும் 5 லட்சத்து 31 அயிரத்து 860 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  

குறிப்பாக, உலகம் முழுவதும் கொரோனா என்னும் அரக்கனால் சுமார் 24 ஆயிரத்து 57 பேர் உயிரிழந்துள்ளனர். 

கொரோனா பாதிப்பில் தற்போது அமெரிக்கா, சீனாவை முந்தியுள்ளது. இத்தாலியில் கொரோனாவால் ஏற்பட்ட உயிரிழப்புகள் 8 ஆயிரத்து 215 ஆகவும், ஐரோப்பிய நாடுகளில் மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 80 ஆயிரத்து 589 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், அமெரிக்காவில் 85,653 பேரும், சீனாவில் 81,782 பேரும் இத்தாலியில் 80,589 பேரும், ஸ்பெயினில் 57,786 பேரும், ஜெர்மனியில் 43,938 பேரும், பிரான்ஸ் நாட்டில் 29,566 பேரும், ஈரான் நாட்டில் 29,406 பேரும், இங்கிலாந்தில் 11,812 பெரும், சுவிட்சர்லாந்தில் 11,811 பேரும், தென் கொரியாவில் 9,241 பேரும் கொரோனா வைரசால் கடுமையாகப் பாதிக்கு ஆளாகி உள்ளனர்.