வடிவேலு பாணியில் 25 வது திருட்டில் ஈடுபட்டு போலீசாரிடம் சிக்கிய “கூட்டாஞ்சோறு கொள்ளையர்கள்”!
நடிகர் வடிவேலு பாணியில் 25 வது திருட்டை வெற்றிகரமாக நடத்திவிட்டு, போலீசாரிடம் கூட்டாஞ்சோறு கொள்ளையர்கள்” வசமாக சிக்கிக்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சென்னையில் தான் இப்படி ஒரு சுவாரஸ்சிய சம்பவம் அரங்கேறி இருக்கிறது.
வடிவேலு 100 வது திருட்டு விழா வெற்றிபெற வாழ்த்துகிறோம் செம்ம காமெடி. 9 views9 views
“நகரம்” படத்தில் திருடனாக நடித்திருந்த நடிகர் வடிவேலு, “தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து 100 வது திருட்டை வெற்றிகரமாக நடத்துவதற்காக, அந்த வீட்டின் கதவை திறப்பார். அப்போது, அந்த வீட்டின் உள்ளே இருந்த போலீசார் துப்பாக்கியோடு நிற்பார்” செம்ம காமெடியான, இந்த சம்பவம் போலவே, நிஜத்தில் இது போன்ற சம்பவம் நடந்திருப்பது அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுவதிருக்கிறது.
சென்னை திருவல்லிக்கேணி பகுதியில் கடந்த மாதம் 18 ஆம் தேதி அன்று பெண் போலீசார் அணிந்திருந்த 9 சவரன் தங்க நகைகளை பறித்துக்கொண்டு, இருசக்கர வாகனத்தில் வந்த 3 பேர் கொண்ட மர்ம கும்பல் ஓடிவிட்டனர்.
அடுத்த நாள் அண்ணா நகர் பகுதியில் சாந்தி என்ற பெண் அணிந்திருந்த 4 சரவன் தங்க நகைகளை பறித்துக்கொண்டு, அதே போன்ற 3 பேர் கொண்ட கும்பல் அங்கிருந்து ஓட்டம் பிடித்து உள்ளது.
இப்படியாக, அடுத்தடுத்த நாட்களில் எழும்பூர், சிந்தாதிரிப்பேட்டை, திருவல்லிக்கேணி உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ச்சியாக வழி சம்பவங்கள் நடந்து உள்ளன.
இது தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் விசாரணை இறங்கிய போலீசார், சம்பவம் நடைபெற்ற இடங்களில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது, இந்த எல்லா திருட்டு சம்பவங்களிலும், வெள்ளை செருப்பு அணிந்திருப்பது போலீசாருக்கு தெரிய வந்தது.
இதனையடுத்து, அந்த திருடர்களைப் பிடிப்பதற்காக, திருட்டு நடந்த இடத்தில் இருந்து சுமார் 300 க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது, இருசக்கர வாகனத்தை திருடி, அதன் மூலமாக அவர்கள் திருட்டில் ஈடுபட்டு வந்ததும், கொள்ளை சம்பவம் முடிந்த பிறகு திருடப்பட்ட இருசக்கர வாகனத்தை அதே இடத்தில் விட்டுச் செல்வதையும் அவர்கள் வாடிக்கையாக வைத்திருந்ததும் தெரிய வந்தது.
அத்துடன், தாங்கள் திருடும் நகைகளை அந்த கும்பல் தனித் தனியாக பிரித்து வேறு வேறு இடங்களில் விற்று பணமாக மாற்றி வந்துள்ளனர்.
அப்போது தான், குமரன் நகர் காவல் நிலையத்தில் வேறொரு வழக்கல் கைதான 17 வயதான சிறுவன், அந்த திருட்டு கும்பலைச் சேர்ந்தவன் என்பதை போலீசார் கண்டுபிடித்தனர்.
பின்னர் அவனிடம் போலீசார் நடத்திய தீவிர விசாரணையில், சென்னை அத்திப்பட்டு பகுதியில் உள்ள கூவத்தின் நடுவில் வீடு ஒன்றில் தங்கியிருந்த 3 பேரை போலீசார் சுற்றி வளைத்து அதிரடியாகக் கைது செய்தனர்.
இந்த திருடர்கள் குழுவாகவும், தனித்தனியாகவும் பிரிந்துசென்று திருடிக்கொண்டு வரும் பொருட்களை எல்லாம், இங்கே சேர்ந்து வைத்து பின்னர் சமமாக பிரிக்கொள்வதும் விசாரணையில் தெரிய வந்தது. இதனால், இந்த கொள்ளையர்களை போலீசார் “கூட்டாஞ்சோறு கொள்ளையர்கள்” என்றும் குறிப்பிட்டு உள்ளனர்.
இப்படி, கொள்ளையடிக்கும் பணத்தில் இவர்கள் சொகுசாக வாழ்ந்து வருவதும் தெரிய வந்தது.
மேலும், இவர்களிடம் இருந்து 16 சவரன் நகைகைள் மற்றும் 5 விலை உயர்ந்த இருசக்கர வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்து உள்ளனர். இது குறித்து, அந்த 4 பேரிடமும் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.