சென்னை வாசிகள் கவனத்திற்கு.. கொரோனா அறிகுறி இருந்தால் நீங்கள் செய்யவேண்டியது இதுதான்..!
By Aruvi | Galatta | Jun 11, 2020, 09:51 am
கொரோனா அறிகுறி இருந்தால் சென்னை வாசிகள் தொடர்புகொள்ளவேண்டிய தொலைப்பேசி எண்களை சென்னை மாநகராட்சி மண்டலம் வாரியாக வெளியிட்டுள்ளது.
சென்னையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால், கொரோனா கட்டுப்படுத்த தமிழக அரசு தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
அத்துடன், பொதுமக்களுக்கு கொரோனா பற்றிய நிறைய சந்தேகங்கள் இன்னும் இருந்து வருகிறது. இதனால், கொரோனா நோய் தொற்று பாதித்தவர்கள், தொடர்பிலிருந்தவர்கள் தங்களுக்குத் தேவையான சிகிச்சை உதவிகளை சென்னை மாநகராட்சி அலுவலகம் மூலம் கேட்டுத் தெரிந்துகொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், சென்னையில் உள்ள அனைத்து மக்களின் சந்தேகங்களைப் போக்கும் வகையிலும், பொதுமக்கள் பயன்பெறும் வகையிலும் மண்டலம் வாரியாக கட்டுப்பாட்டு அறை எண்களை சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.
அதன்படி, திருவொற்றியூர் மண்டலம் - 044 46556301, மணலி - 044 46556302, மாதவரம் - 044 46556303, தண்டையார்பேட்டை - 044 46556304, ராயபுரம் - 044 46556305, திரு.வி.க. நகர் - 044 46556306, அம்பத்தூர் - 044 46556307, அண்ணாநகர் - 044 46556308, தேனாம்பேட்டை - 044 46556309, கோடம்பாக்கம் - 044 46556310, வளசரவாக்கம் - 044 46556311, ஆலந்தூர் - 044 46556312, அடையாறு - 044 46556313, பெருங்குடி - 044 46556314, சோழிங்கநல்லூர் - 044 46556315.
இந்த தொலைப்பேசி எண்கள் தவிர சென்னை மாநகராட்சி தலைமை அலுவலகத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறையையும் 044 - 46122300 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்றும் சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
மேற்கண்ட இந்த தொலைப்பேசி எண்களில் தொடர்பு கொண்டு சந்தேகங்களைக் கேட்டால், மண்டலம் வாரியாக நியமிக்கப்பட்டு உள்ள சிறப்பு அதிகாரிகள் அறிவுறுத்தலின் அடிப்படையில் சந்தேகங்கள் மற்றும் பொதுமக்களின் தேவைகளை உடனடியாக தீர்க்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சென்னை மாநகராட்சி தெரிவிக்கப்பட்டுள்ளது.