இந்தியாவில் கேரளா, ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், இமாச்சல், ஹரியானா, குஜராத் ஆகிய 6 மாநிலங்களில் பறவைக் காய்ச்சல் பரவியுள்ளதாக மத்திய அரசு அறிவித்து இருக்கிறது. இதனால் இந்தியாவில் இருந்து கோழி உள்ளிட்ட பறவைகள் இறைச்சியை இறக்குமதி செய்ய நேபாள அரசு இடைக்காலத் தடை விதித்துள்ளது. இதே போல், கேரளாவில் இருந்து தமிழகத்துக்கு வரும் முட்டை, கோழி தீவனம் ஆகியவற்றை  முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழக அரசு தடைசெய்து உள்ளது. 


இந்நிலையில் தமிழகத்தில் முட்டை மற்றும் கறிக்கோழியின் விலை  சரிந்துள்ளது. மேலும் நாமக்கல் மாவட்டத்தில் இருந்து கேரளாவிற்கு, அனுப்பப்படும் முட்டை தடைப்பட்டு உள்ளதால், 2 கோடி முட்டைகளுக்கு மேல் பண்னைகளில் முட்டை தேங்கியிருக்கிறது. மேலும் வரும் நாட்களில் இந்த எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கும் என சொல்லப்படுகிறது. இதனால் முட்டையின் விலை 50 காசுகள் குறைந்துள்ளது. 


கறிக்கோழி வாங்குவதையும் மக்கள் தவிர்த்து வருவதால், இதேபோல் கறிக்கோழியின் விலையும் கணிசமாக குறைந்துள்ளது. ஆனால் கறிக்கோழி மற்றும் முட்டையின் வழியாக பறவைக் காய்ச்சல் பரவுவது ஆதாரப் பூர்வமாக நிரூப்பிக்கபடவில்லை என்கிறார்கள் மருத்துவர்கள்.