முதலமைச்சர் அலுவலகத்தில் தமிழக இளைஞர்களுக்கு வேலை! இன்று முதல் விண்ணப்பிக்கலாம்..
“முதலமைச்சர் அலுவலகத்தில் தமிழக இளைஞர்களுக்கு வேலை வழங்கும் திட்டத்தில், இன்று முதல் விண்ணப்பிக்கலாம்” என்று, அறிவிக்கப்பட்டு உள்ளது.
கடந்த அதிமுக ஆட்சியில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் தவிர, பிற மொழி பேசுவர்களுக்கு வேலை வாய்ப்பில் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. எனினும், தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, திமுக ஆட்சியை கைப்பற்றியது.
இதனையடுத்து, தமிழ்நாட்டில் தமிழக இளைஞர்களுக்கு அதிக முக்கியத்துவம் தரும் வகையில், புதிய புதிய திட்டங்கள் வகுப்பட்டன.
அதன்படி, வேலை இல்லாத இளைஞர்களுக்கு தமிழகத்தில் புதிய புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கும் வகையில் சில திட்டங்கள் வகுப்பட்டன.
அதன் படி, தமிழக அரசின் சிறப்பு செயலாக்க திட்டத் துறை சார்பில், முதலமைச்சரின் புத்தாய்வு திட்டம் செயல்படுத்தபட இருக்கிறது.
இந்த திட்டத்தின் மூலமாக, தமிழகத்தை சேர்ந்த இளைஞர்களுக்கு தொழில் முறை மற்றும் கல்வி அடிப்படையில் 2 ஆண்டு காலம் ஊக்க ஊதியத்துடன், பயிற்சி வழங்கப்படுகிறது.
இந்த திட்டத்தின் மூலமாக, தேர்வு செய்யப்படும் தமிழக இளைஞர்கள் முதலமைச்சர் அலுவலகம், தமிழக அரசின் முதன்மை திட்டங்களை செயல்படுத்தும் பணியில் ஈடுபடுத்த திட்டமிடப்பட்டு உள்ளது.
அந்த வகையில், இந்த வேலை வாய்ப்பு குறித்து தமிழக அரசின் சிறப்பு திட்டங்கள் செயலாக்கத் துறை செயலாளர் வெளியிட்டிருக்கும் புதிய அறிவிப்பில், “தமிழகத்தில் இளைஞர்களை தேர்ந்தெடுத்து அவர்களின் திறன்களை மேம்படுத்தி பயன்படுத்தும் நோக்கத்திலேயே முதலமைச்சரின் புத்தாய்வு திட்டம் உருவாக்கப்பட்டு உள்ளதாக” தெரிவிக்கப்பட்டு உள்ளது.
“தமிழக அரசுக்கு உதவ இளைஞர்களை தேர்ந்தெடுக்கும் முதலமைச்சரின் இந்த புத்தாய்வு திட்டத்துக்கு, திருச்சி பாரதிதாசன் பல்கலையுடன் தமிழக அரசு ஒப்பந்தம் போட்டு இருப்பதாகவும், இப்படியான முதலமைச்சரின் புத்தாய்வு திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்று, அரசுப் பணிகளில் அமர விரும்பும் இளைஞர்கள் இன்று முதல் விண்ணப்பிக்கலாம்” என்றும், அறிவிக்கப்பட்டு உள்ளது.
அத்துடன், “தேர்வு செய்யப்படும் இளைஞர்கள் அனைவரும் முதலமைச்சர் அலுவலகத்தில் இருந்து தமிழக அரசின் முதன்மை திட்டங்களை செயல்படுத்தும் பணியில் ஈடுபடுத்தப்படுவர் என்றும், முதலமைச்சரின் புத்தாய்வு திட்டத்திற்காக நடப்பாண்டில் 30 இளைஞர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பயிற்சி வழங்கப்பட இருப்பதாகவும்” அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
“தேர்வு செய்யப்படுவோருக்கு, அடுத்த 2 ஆண்டுகளுக்கு பல்வேறு பயிற்சிகளை வழங்கப்படும் என்றும், அவரவர்களின் தொழில் முறை மற்றும் கல்வி அடிப்படையில் இந்த இளைஞர்களுக்கு ஊக்க ஊதியத்துடன் 2 ஆண்டுகள் பயிற்சி வழங்கப்படும்” என்றும், விளக்கம் அளிக்கப்பட்டு உள்ளது.
மேலும், “திறன்மிகு இளைஞர்களின் திறமைகளை பயன்படுத்தி நிர்வாக செயல்முறைகள் மற்றும் சேவை வழங்கலின் செயல்படுத்துதலை மேம்படுத்துவதே இந்த திட்டத்தின் நோக்கம்” என்றும், அதில் தெளிவகா விளக்கப்பட்டு உள்ளது.
இந்த வேலை வாய்ப்பில் ஆர்வமுள்ள இளைஞர்கள், https://www.bim.edu/tncmpf எனும் பாரதிதாசன் பல்கலைக்கழக இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்” என்றும், தெரிவிக்கப்பட்டு உள்ளது.
தமிழக அரசின் இந்த புதிய திட்டத்திற்கு 5.66 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டிருப்பதாக, அரசு கூறியுள்ளது.
இந்த திட்டத்தில் பணியில் சேர வயது வரம்பானது 22 வயது முதல் 30 வயது என்றும், இதில் வயது தளர்வில் எஸ்சி / எஸ்டி பிரிவினருக்கு 35 வயது வரை அளிக்கப்படுகிறது. அதே போல், பிசி / எம்பிசி வகுப்பைச் சேர்ந்தவர்கள் 33 வயது வரை தளர்வுகள் அளிக்கப்பட்டு உள்ளன.
இந்த பணியில் சேர கல்வி தகுதியானது “தொழில்முறை படிப்புகளில் இளங்கலை பட்டப்படிப்பில் முதல் வகுப்பு அல்லது கலை / அறிவியலில் முதுகலைப் பட்டப்படிப்பில் முதல் வகுப்பு என்றும், தமிழ் அறிவு கட்டாயம்” என்றும், அறுவுறுத்தப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.