76 ஆண்டுகளுக்கு பிறகு சென்னைக்கு புதிய குடிநீர் நீர்தேக்கம்!
By Aruvi | Galatta | Nov 20, 2020, 03:50 pm
கண்ணங்கோட்டை - தெரோவி காண்டிகாய் நீர்த்தேக்கம் சனிக்கிழமையன்று திறக்கப்பட இருக்கிறது. இது சென்னைக்கு குடிநீர் விநியோகத்திற்காக அமைய பெறும் பிரத்யேக நீர்த்தேக்கம். இந்த கண்ணங்கோட்டை நீர்த்தேக்கம், சென்னையில் இருந்து சுமார் 50 கி.மீ தொலைவில் அமைந்துள்ள. ஆந்திராவிலிருந்து வரும் கிருஷ்ணா நீரை ஆதாரமாக கொண்டுயிருக்கிறது.
இது கண்டலேரு-பூண்டி கால்வாயிலிருந்து 8.6 கி.மீ இணைப்பு கால்வாய் வழியாக கொடுக்கப்படும். இதனால் ஒரு வருடத்தில் ஆயிரம் மில்லியன் கன அடி சேமிக்க முடியும். ஒரு நாளைக்கு சென்னைக்கு 66 மில்லியன் லிட்டர் நீர் விநியோகிக்கலாம். மேலும் 700 ஏக்கர் நீர்ப்பாசனம் செய்வதற்கும் பயன்படும் எனவும் இதற்காக சுமார் 380 கோடி டாலர் செலவும் மற்றும் 1,485 ஏக்கர் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டது எனவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பூண்டி, சோளவரம், சிவப்பு மலை மற்றும் செம்பரம்பாக்கம் நீர்த்தேக்கங்களின் ஒருங்கிணைந்த கொள்ளளவு 11.25 டி.எம்.சி அடி. புதிய இந்த நீர்தேக்கமுடன் சேர்த்து 11.75 டி.எம்.சி அடி வரை செல்லும்.
ஜனவரியில் இந்த ஐந்து நீர்த்தேக்கங்களும் நிரம்பியிருந்தால், சென்னைக்கு ஒரு மாதத்திற்கு 1 டி.எம்.சி அடி தேவைப்படும் தண்ணீரை பூர்த்தி செய்ய உதவியாக இருக்கும்.நிலத்தடி நீர் ஆதாரங்களைத் தவிர, வீணம் மற்றும் 100 எம்.எல்.டி இரண்டு உப்புநீக்கும் ஆலைகளிடம் மீதி தேவையை எளிதாக பூர்த்தி செய்துக்கொள்ள முடியும்.
வியாழக்கிழமை காலை நிலவரப்படி பழைய நான்கு நீர்த்தேக்கங்களிலும் 7.097 டி.எம்.சி அடி மற்றும் கண்ணன்கோட்டை-தெரோவி காண்டிகாயில் 138 மில்லியன் கன அடி இருந்தன. மேலும் இந்த ஆண்டு ஆந்திராவில் இருந்து சுமார் 3 டி.எம்.சி அடி கிருஷ்ணா நீரை பெற்றுயிருக்கிறோம். புதிய நீர்த்தேக்கத்தை திறப்பதற்கு நீர் ஆர்வலர் மற்றும் பொறியியலாளருமான என்.மீனாட்சி சுந்தரம் வரவேற்கப்பட்டுயிருக்கிறார்.
இதுப்பற்றி மீனாட்சி சுந்தரம் கூறுகையில், “இதேபோல் 1983 ஆம் ஆண்டு ராமஞ்சேரி மற்றும் திருக்கண்டலம் பகுதியில் கிருஷ்ணா நீர் வழங்கல் திட்டத்தின் கீழ் நீர்தேக்கம் கட்டும் பணிகள் மேற்கொள்ளப்பட்டது. அதை மீண்டும் உயிர்ப்பித்து மேலும் இரண்டு நீர்த்தேக்கங்களை கட்ட அரசாங்கம் மற்றொரு முயற்சியை மேற்கொள்ள வேண்டும்” என்றார்.
- கே. அபிநயா