IPL2022: தோல்விகளிலிருந்து மீண்ட கொல்கத்தா! IPL வரலாற்றில் அம்பயரிங் சர்ச்சை.. வைட் பாலுக்கு DRS கேட்ட சஞ்சு சாம்சனின் போராட்டம்..
#IPL2022 சீசனில் தொடர் தோல்விகளிலிருந்து மீண்ட #KKR அணி, 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் #RR அணியை வீழ்த்தி வெற்றிப் பெற்றுள்ளது.
#IPL2022 15 வது சீசன் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்றுக்கொண்டிருக்கும் நிலையில், நேற்றைய தினம் நடைபெற்ற 47 வது லீக் போட்டியில் #KKR v #RR அணிகள் மோதின. இதில், டாஸ் வென்ற #KKR கொல்கத்தா அணியின் கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர், முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி, #RR ராஜஸ்தான் அணியின் சார்பில் தொடக்க வீரராக களமிறங்கிய படிக்கல் 2 ரன்களில் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார்.
அத்துடன், மற்றொரு தொடக்க வீரர் பட்லர் உடன் ஜோடி சேர்ந்த #RR அணியின் கேப்டன் சாம்சன், பொறுப்புடன் விளையாடி ரன்களை குவித்தார்.
எனினும், ஜாஸ் பட்லரும் 25 பந்தில் 3 பவுண்டரி உட்பட தொத்தம் 22 ரன்கள் எடுத்து அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார். அதன் தொடர்ச்சியாக, சாம்சன் 38 பந்தில் அரை சதம் அடித்து அசத்திய நிலையில், 49 பந்துகளில் 54 ரன்கள் எடுத்து அவுட்டானார்.
பின்னர் வந்த ஹெட்மெயர் 13 பந்துகளில் 27 ரன்களும் அடித்து வானவேடிக்கை காட்டிய நிலையில், மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் அடுத்தடுத்து அவுட்டாகி அதிர்ச்சி அளித்தனர். இதனால், 20 ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் அணி 5 விக்கெட்கள் இழப்புக்கு 152 ரன்கள் மட்டுமே எடுத்தது.
இதனால், 153 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய #KKR கொல்கத்தா அணியிலும், தொடக்கமே அதிர்ச்சி காத்திருந்தது. #KKR அணியின் தொடக்க வீரர்களான ஆரோன் ஃபிஞ்ச் 4 ரன்களுக்கும், இந்திரஜித் 15 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர். இதனால், #KKR அணி 32 ரன்களுக்கு 2 விக்கெட்களை இழந்து தடுமாறியது.
பின்னர் #KKR அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் 34 ரன்களை எடுத்து ரன் வேகத்தை உயர்த்தி ஆட்டமிழந்தார். அதன் தொடர்ச்சியாக வந்த நிதிஷ் ராணா - ரிங்கு சிங் ஜோடி சிறப்பாகவும், பொறுப்பாக விளையாடினர்.
இதனால், கடைசி 3 ஓவரில் #KKR வெற்றிக்கு 31 ரன்கள் தேவைப்பட்டது. 18 வது ஓவரை சஹால் வீசிய நிலையில், முதல் 2 பந்துகளை ரிங்கு சிங் பவுண்டரியாக மாற்றினார். அந்த ஓவரில், 13 ரன்கள் வரவே, கடைசி 2 ஓவரில் 18 ரன்கள் தேவைப்பட்டது. இதனால், இறுதியில் 19. 1 ஓவர்களில் 158 ரன்கள் எடுத்து கொல்கத்தா அணி, 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.
இந்த வெற்றியின் மூலம், தொடர்ந்து 5 போட்டிகளில் தோல்வி அடைந்து இருந்த கொல்கத்தா அணியானது, தற்போது வெற்றி பாதைக்கு மீண்டும் திரும்பி உள்ளது.
குறிப்பாக, இந்த போட்டியின் போது, 19 வது ஓவரை #RR வீரர் பிரஷித் கிருஷ்ணா வீசினார். அப்போது, அந்த ஓவரின் 3 வது பந்து வைடாக சென்றது. இதற்கு மாற்றாக போடப்பட்ட பந்தில், பவுண்டரி சென்றதால் ராஜஸ்தான் கேப்டன் சஞ்சு சாம்சன் கடுப்பில் இருந்தார்.
அதன் தொடர்ச்சியாக, 4 வது பந்தையும் பிரஷித் கிருஷ்ணா அவுட் சைட் ஆஃப் ஸ்டம்பாக வீச, அதனை பேட்ஸ்மேன் ரிங்கு சிங் அடிப்பதற்காக வைட் லைன் வரை சென்று விளையாடினார். ஆனால், அம்பயர் அதற்கு “வைட்” என்று, சிக்னல் காட்டினார்.
இதனால், கடும் ஆத்திரமடைந்த #RR கேப்டன் சஞ்சு சாம்சன், அம்பயரின் முடிவை எதிர்த்து சட்டென்று DRS கேட்டார்.
“வைட் பால்” என்று, கூறப்பட்ட ஒரு பந்துக்கு 3 வது நடுவரின் முடிவு கேட்டது கிரிக்கெட் ரசிகர்களுக்கு பெரும் ஆச்சரியமாக இருந்தது.
அந்த நேரத்தில், #RR கேப்டன் சஞ்சு சாம்சன், செம கடுப்பில் நின்றிருந்தது பெரும் போட்டியின் அம்பயர்க்கு எதிராக பெரும் போராட்டமே நடத்துவது போன்று இருந்தது. என்றாலும், களத்தில் நின்ற அம்பயரின் வைட் முடிவுகளை, DRS மூலம் பெரிதும் மாற்ற முடியாது என்பதால், அது வைடாகவே கருதப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டது.
மேலும், அந்த ஓவரின் கடைசி பந்தையும் அவுட் சைட் ஆஃப் ஸ்டம்பாக பிரஷித் கிருஷ்ணா வீச, அதனை நிதிஷ் ராணா ஏறி சென்று அடிக்கப் பார்த்தார். அப்போது, நடுவர் அதற்கு “வைட்” என்று, கொடுக்க, இன்னும் கடும் அதிர்ச்சி அடைந்த #RR கேப்டன் சஞ்சு சாம்சன், உடனடியாக நேராக அம்பயரிடம் சென்று, “ஏன் இப்படி எல்லாவற்றுக்கும் வைட் கொடுக்கிறிங்க” என்பது போல் பேசினார்.
அதே நேரத்தில், அந்த ஒரு ஓவரில் அம்பயரின் முடிவு சரியாக இருந்திருந்தால், இந்த போட்டியானது #RR பக்கம் திரும்பி இருக்கும் என்கிற விமர்சனங்களும் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
இதனிடையே, IPL வரலாற்றில் வைட் பாலுக்கு DRS கேட்பது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.
இன்றைய போட்டியில், குஜராத் டைட்டன்ஸ் அணியும் - பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோத உள்ளன.