IPL2022: தொடரில் இருந்து முழுவதுமாக விலகினார் CSK வீரர் ரவீந்திர ஜடேஜா!
“ப்ளே ஆஃப் வாயப்பு இன்னும் இருக்கு” என்கிற நம்பிக்கையில் #CSK இருக்கும் நிலையில், ரிவென்ஜ் மோடில் உள்ள #MI மும்பை இந்தியன்ஸ் உடன் இன்று மோதுகிறது. ஆனால், காயம் காரணமா #IPL2022 15 வது சீசன் முழுவதிலிருந்தும் ரவீந்திர ஜடேஜா முழுமையாக விலகி உள்ளது, சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்களை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.
#IPL2022 15 வது சீசன் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்றுக்கொண்டிருக்கும் நிலையில், இன்றைய தினம் நடைபெறும் 59 வது லீக் போட்டியில் #CSK - #MI அணிகள் மோதி விளையாடுகின்றன.
#CSK அணியானது இந்த சீசனில் இது வரை விளையாடி உள்ள 11 போட்டிகளில் 4 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்று உள்ளது. அதே நேரத்தில், #CSK அணியானது அதுவரை 7 தோல்விகளை பெற்று புள்ளி பட்டிலியலில் 8 புள்ளிகள் மட்டுமே பெற்று, 9 ஆம் இடத்தில் நீடிக்கிறது.
இதனால், ப்ளே ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பை தக்க வைத்துக் கொள்ள இனி எஞ்சி இருக்கும் 3 போட்டிகளிலும் நல்ல ரன் ரேட்டில் அடிப்படையில் வெற்றி பெற வேண்டியது கட்டாயத்தில் #CSK இருக்கிறது.
அதே நேரத்தில், மற்ற சில அணிகளின் வெற்றி மற்றும் தோல்வியை சார்ந்தே #CSK சென்னை அணியின் ப்ளே ஆஃப் வாய்ப்பு இருக்கிறது என்கிற ஒரு கருத்தும் இருக்கிறது.
ஆனால், #MI அணியானது #IPL2022 15 வது சீசனின் ப்ளே ஆஃப் வாயப்பை இழந்து உள்ளது.
இதனால், “இன்றைய தினம் #CSK - #MI வீழ்த்தி 5 வது வெற்றியை பெறுமா?” என்கிற எதிர்பார்ப்பில் #CSK சென்னை ரசிகர்கள் எதிர்பார்த்து காத்து உள்ளனர்.
குறிப்பாக, #CSK - #MI ஆகிய இந்த இரு அணிகளும் இந்த சீசனில் ஏற்கனவே மோதிய லீக் ஆட்டத்தில், #CSK அணியானது 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனால், இன்றைய போட்டியானது சென்னை ரசிகர்கள் இடையே மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
குறிப்பாக, #CSK கடைசியாக டெல்லி அணியுடன் மோதி, கிட்டதட்ட 91 ரன்கள் வித்தியாசத்தில் சூப்பரான ஒரு வெற்றியை பதிவு செய்திருந்தது.
முக்கியமாக, #CSK அணியில் தொடக்க வீரர்களான ருதுராஜ் கெய்க்வாட் - கான்வே ஜோடி நல்ல ஃபார்முக்கு திரும்பி உள்ளனர்.
ஆனால், ஒரு சோகமான செய்தி என்னவென்றால், ஆல் ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா காயம் காரணமாக இந்த #IPL 15 வது சீசனில் மீதமுள்ள போட்டிகளில் இருந்து முழுவதுமாக விலகி உள்ளார். இது, சென்னை அணிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது.
அதாவது, பெங்களூருக்கு எதிரான போட்டியின் போது ஜடேஜாவுக்கு விலா பகுதியில் காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால், அதனை ரவீந்திர ஜடேஜா பெரிதுபடுத்தாமல் தொடர்ந்து விளையாடினார் என்றும், இதனால் பாதிப்பு சற்று அதிகரித்த நிலையில், டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் விளையாட முடியாமல் போனது என்றும், இந்த நிலையில் தான் அந்த காயம் இன்னும் அதிகரித்த காரணத்தால், இந்த நடப்பு சீசனில் எஞ்சி உள்ள போட்டிகளில் ஜடேஜா விளையாட மாட்டார் என்றும், #CSK நிர்வாகம் தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளது.
இதனிடையே, காயம் காரணமாக நடப்பு #IPL தொடரிலிருந்து சென்னை சூப்பர் அணியின் முன்னாள் கேப்டன் ரவீந்திர ஜடேஜா விலகியிருப்பதாக தகவல் வெளியாகி இருப்பது, #CSK ரசிகர்கள் இடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
அதே நேரத்தில், #CSK அணி நிர்வாகத்தின் மீது ஜடேஜா அதிருப்தியில் உள்ளதாகவும் செய்திகள் ஒவ்வொன்றாக வெளியாகி வருகின்றன. இதனால், பல #CSK ரசிகர்களும், #CSK நிர்வாகம் மீது எதிர்மறையான கருத்துக்களை இணையத்தில் கூறி வருவது குறிப்பிடத்தக்கது.