IPL 2021.. நடராஜனுக்கு கொரோனா! ஐபிஎல் நடக்குமா? என்ன ஆகும்?
ஐதராபாத் அணி வீரர் நடராஜனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால், அவருடன் தொடர்பில் இருந்த 6 வீரர்கள் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்.
கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக, ஏற்கனவே ஒத்திவைக்கப்பட்ட ஐபிஎல் போட்டிகள், மீண்டும் ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்த 19 ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.
ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள அபுதாபி, சார்ஜா, துபாய் என 3 மைதானங்கள் நடைபெறும் இந்த தொடரில் இது வரை மொத்தம் 3 போட்டிகள் நடந்து முடிந்து உள்ளன.
அந்த வகையில், இன்று நடைபெறும் போட்டியில் ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணியும் - டெல்லி கேபிடல்ஸ் அணியும் மோதுகின்றன.
இப்படி, கடந்த முறை மாதிரி எந்த வீரருக்கும் கொரோனா தாக்காமல் இருக்க வீரர்கள் யாவரும், தொடர்ந்து தனிமைப்படுத்தப்பட்டு வந்த நிலையில், தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டும் வந்தனர்.
இந்த நிலையில் தான், ஐதராபாத் அணியின் வேகப்பட்டு வீச்சாளர் நடராஜனுக்கு கொரோனா வைரஸ் தொற்று தற்போது உறுதி செய்யப்பட்டு உள்ளது.
இதனால், நடராஜன் தற்போது தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சையில் பெற்று வருகிறார்.
அத்துடன், நடராஜனுடன் தொடர்பில் இருந்த 6 வீரர்களும் தற்போது தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். இதனால், இன்றைய ஐபிஎல் போட்டி திட்டமிட்டபடி நடைபெறுமா? என்ற கேள்வி எழுந்தது.
இந்த சூழலில், “ஐபிஎல் போட்டி திட்டமிட்ட படி நடைபெறும்” என்று, ஐபிஎல் நிர்வாகம் தெரிவித்து உள்ளது.
மேலும், “ஐதராபாத் அணியின் எஞ்சிய வீரர்களுக்கு கொரோனா தொற்று பாதிப்பு இல்லை” என்றும், ஐபிஎல் நிர்வாகம் தற்போது கூறியுள்ளது.
அதாவது, பிசிசிஐன் விதி முறைகளின் படி, ஒவ்வொரு போட்டிக்கு முன்னதாகவும், போட்டி முடிந்த பிறகும் வீரர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அந்த வகையில், இன்று காலை 6 மணி அளவில் ஐதராபாத் அணி வீரர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் தான், நடராஜனுக்கு கொரோனா இருப்பது தற்போது உறுதி செய்யப்பட்டு உள்ளது.
இதனையடுத்து, அனைத்து வீரர்களும் தனிமைப்படுத்தப்பட்டு மீண்டும் பரிசோதனை செய்யப்பட்டு வருவது குறிப்பிட்டதக்கது.
முக்கியமாக, ஐதராபாத் அணிக்கும் - டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கும் இடையே போட்டி நடைபெறுவது தொடர்பான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.