ஐ.பி.எல். கிரிக்கெட்... பெங்களூரை தோற்கடித்து முதல் வெற்றியை பதித்த சென்னை அணி!
நேற்று நடைபெற்ற ஐ.பி.எல் 2022 தொடரின் 22வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரூ அணிகள் மோதி. இந்த போட்டியில் சென்னை அணி 23 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஐபிஎல் தொடரில் இந்த போட்டி சென்னை அணி விளையாடிய 200-வது போட்டியாகும். இந்த சீசனில் முதல் வெற்றியையும், 200-வது போட்டியில் வெற்றியும் பெற்றதால் சென்னை அணி ரசிகர்கள் உறுற்சாகமடைந்துள்ளனர். அதாவது நேற்று நடைபெற்ற ஐ.பி.எல் 2022 தொடரின் 22-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரூ அணிகள் மோதின.
இந்நிலையில் போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற பெங்களூரு அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. அதன்படி சென்னை அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்கத்தில் சென்னை அணியின் ருதுராஜ் கெய்க்வாட் ,மொயீன் அலி ஆகியோர்ஆட்டமிழந்தனர் .இதன் பின்னர் உத்தப்பா, ஷிவம் துபே இருவரும் நிலைத்து நின்று ஆடினர்.ஒரு புறம் உத்தப்பா ,மறுபுறம் ஷிவம் துபே பந்துகளை பவுண்டரி, சிக்சருக்கு பறக்க விட்டனர் .
அதனைத்தொடர்ந்து அதிரடியாக விளையாடி ரன்களை சேர்த்த இருவரும் அரை சதம் அடித்து அசத்தினர். அரைசதம் கடந்த பிறகு உத்தப்பா, ஷிவம் துபே இருவரும் ,பெங்களூரு அணியின் பந்துவீச்சை துவம்சம் செய்தனர். இதனால் இறுதியில் சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 216 ரன்கள் எடுத்தது .உத்தப்பா 50 பந்துகளில் 4 பவுண்டரி, 9 சிக்ஸர் என 88 ரன்களும், ஷிவம் துபே 46 பந்துகளில் 5 பவுண்டரி, 8 சிக்ஸர் என 95 ரன்களும் எடுத்தனர்.
ஆனாலும் அதனைத் தொடர்ந்து 217 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பெங்களூரு அணி தொடக்கத்தில் விக்கெட்டுகளை இழந்தது. 50 ரன்களுக்கு 4 விக்கெட்டுக்களை இழந்து அந்த அணி தடுமாறியது. மேலும் அதன் பின்னர் வந்த ஷாபாஸ் அகமது ,சுயாஷ் பிரபுதேசாய் நிலைத்து நின்று ஆடி ரன்களை சேர்த்தனர் .இதனை தொடர்ந்து ஷாபாஸ் அகமது 41 ரன்களிலும், சுயாஷ் பிரபுதேசாய் 34 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். பின்னர் வந்த தினேஷ் கார்த்திக் கடைசி நேரத்தில் அதிரடி காட்டினார் .14 பந்துகளில் 34 ரன்கள் எடுத்து அவர் ஆட்டமிழந்தார் .
இந்நிலையில் தொடர்ந்து இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு பெங்களூரு அணி 193 ரன்கள் எடுத்தது .இதனால் சென்னை அணி 23 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது .சென்னை அணி சார்பில் மகேஷ் தீக்சனா 4 விக்கெட்டுக்களை வீழ்த்தினார். தொடர்ந்து கடைசி இரண்டு ஓவர்கள் ஜோர்டன் மற்றும் பிராவோ சிறப்பாக பந்துவீச, சென்னை அணி 23 ரன்கள் வித்தியாசத்தில் ஐபிஎல் 2022 தொடரில் தனது முதல் வெற்றியை பதிவு செய்தது.