IPL2022: CSK க்கு விசிலா? சங்கா? “இன்னைக்காவது ஜெயிச்சிறுவிங்களா சிங்கங்களே..?”
#IPL2022 சீசனில் இன்றைய போட்டியில், #CSK சென்னை சூப்பர் கிங்ஸ் - #RCB ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோத உள்ளது, சென்னை ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
#IPL2021 ஆம் ஆண்டின் நடப்பு சாம்பியனான #CSK சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, தனது முதல் 4 லீக் போட்டிகளிலும் தொடர்ந்து தோல்வியை தழுவி உள்ளது.
அதன் படி கொல்கத்தா, லக்னோ, பஞ்சாப், ஐதராபாத் அணிகளிடம் #CSK அணியானது அடுத்தடுத்து தொடர்ந்து தோல்வியை தழுவி, மூழ்கும் கப்பலைப் போல் தத்தளித்துக்கொண்டு இருக்கிறது.
இதில், கடைசியாக நடந்த எதிர்கொண்ட ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில், #CSK அணியானது 8 விக்கெட் வித்தியாசத்தில் மிக மோசமான தோல்வியை எதிர்கொண்டது.
இந்த #IPL2022 சீசனில் #CSK அணியின் தொடக்க வீரரான ருதுராஜ் கெய்க்வாட், தொடர்ந்து மோசமாக விளையாடி வருகிறார்.
இதனால், சென்னை அணியானது, இனி வரும் எஞ்சி உள்ள போட்டிகளில் அனைத்திலும் வெற்றி பெற்றால் மட்டுமே, பிளே ஆப் சுற்றுக்கு சிக்கல் இன்றி தகுதி பெற முடியும் என்கிற கடைசி நேர நெருக்கடி நிலையும் #CSK சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு தற்போது வந்து உள்ளது.
#CSK சென்னை அணியானது, இதுவரையிலான 4 போட்டிகளில் எந்த வகையிலும் பாசிட்டிவ்வான தொடக்கம் கொடுத்ததே இல்லை.
இதனால், பெங்களூருவிற்கு எதிரான போட்டியிலாவது ருத்துராஜ் ஃபார்முக்கு திரும்புவாரா?” என்கிற கேள்வியும் எழுந்து உள்ளது.
#CSK அணிக்கு, பேட்டிங் பவர் ப்ளேயை விடவும், பவுலிங் பவர்ப்ளே இன்னும் படு மோசமாகவும் இருக்கிறது.
#CSK அணியில் ருத்துராஜ் சரியான தொடக்கத்தை ஏற்படுத்திக்கொடுக்கவில்லை. பவர் ப்ளேயில் விக்கெட் சரியாக எடுக்கவில்லை. அதெல்லாம் பிரச்சனைதான் என்றாலும், பெங்களூருவிற்கு எதிரான இன்றைய 5 வது போட்டியிலும், பழைய நிலையெ தொடர்ந்தால் #CSK வுக்கு சென்னை ரசிகர்கள் விசில் போடுவார்களா என்று தெரியாது. ஆனால், #IPL2022 சீசனில் #CSK அணிக்கு சங்கு ஊதப்படும் என்பது மட்டும் நிஜம்.
இதனால், இந்த போட்டியில் கடும் போராட்டம் நடத்தியாவது வெற்றி பெற வேண்டிய கட்டயாத்திற்கு #CSK தற்போது தள்ளப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் தான், ஏற்கனவே காயம் அடைந்து பெங்களூருவில் பயிற்சியில் ஈடுபட்ட தீபக் சஹாருக்கு, தற்போது முதுகில் மற்றொரு பிரச்சினை ஏற்பட்டு உள்ளது. இதனால், தீபக் சஹார் இந்த #IPL தொடரில் இருந்து விலகுவார் என்று தகவல் வெளியாகி உள்ளது.
இதன் காரணமாக, தீபக் சஹாரை நம்பக்கூடாது என்று, தனது கடைசி ஆயுதத்தை தோனி தற்போது கையில் எடுத்து உள்ளார் என்றும், தகவல்கள் வெளியாகி உள்ளன.
அதன் படி, #CSK அணியின் கடைசி ஆயுதமாக U 19 இளம் புயல் ராஜ்வர்தன் ஹங்கர்கேகரை, தோனி இன்றைய போட்டியில் களமிறக்க உள்ளார் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதனால், துஷார் ஏற்கனவே அணியில் ஓரங்கப்பட்ட நிலையில். இன்றைய போட்டியில் ராஜ்வர்தன் ஹங்கர்கேகரை உள்ளே இறக்குவதற்காக ஷிவம் தூபே, முகேஷ் சௌத்ரி ஆகிய இருவரில் ஒருவரை இன்றைய போட்டியில் ஓரங்கப்பட்டப்பட அதிக வாய்ப்புகள் உள்ளதாகவும் கூறப்படுகிறது.
அதே போல், #CSK அணியின் அசைக்க முடியாத தூணாக திகழ்ந்த டூப்ளசிஸ் தான், இன்றைய போட்டியில் எதிர் அணியின் கேப்டனாக களம் காண்கிறார்.
அதே போல், #CSK அணியின் பவுலிங் தூணாக இருந்த ஜோஸ் ஹாசல்வுட், இன்றைய போட்டியில் #RCB அணிக்கா களமிறங்குகிறார்.
அதே போல், தோனியை குரு போன்று நினைக்கும் விராட் கோலி, இன்றைய போட்டியில் எதிர் அணியில் ஆட உள்ளதால் இந்த போட்டியின் மீதான எதிர்பார்ப்பு ஏக வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.