IPL2022: அதிரடி காட்டும் பஞ்சாப்.. எழுச்சி பெறும் முனைப்பில் கொல்கத்தா இன்று மோதல்!
IPL2022 லீக் சுற்றில், அதிரடி காட்டும் PBKS பஞ்சாப் அணியும் - எழுச்சி பெறும் முனைப்பில் KKR கொல்கத்தா அணியும் இன்று மோதுகிறது.
#IPL2022 கிரிக்கெட் தொடரின் 15 வது சீசன் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், இன்றைய தினம் 8 வது லீக் போட்டிகள் நடைபெறுகிறது. இதில், #PBKS பஞ்சாப் கிங்ஸ் அணியும் - #KKR கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் களம் இறங்குகிறது.
அத்துடன், இந்த #IPL2022 15 வது சீசனில் இதுவரை 2 போட்டிகளில் விளையாடி இருக்கும் #KKR கொல்கத்தா அணி, முதல் போட்டியில் சென்னையை வீழ்த்தி முதல் வெற்றியும், 2 வது போட்டியில் பெங்களளூருக்கு எதிராக தோல்வியையும் சந்தித்து இருக்கிறது.
அதே போல், #PBKS பஞ்சாப் அணி தனது முதல் போட்டியில், பெங்களூரு அணியை வீழ்த்தி முதல் வெற்றியை பதிவு செய்திருந்தது.
இதனால், தோல்வியில் இருந்து மீள கொல்கத்தா அணியும், தொடர்ச்சியான அதிரடி வெற்றியை பதிவு செய்ய பஞ்சாப் அணியும் இன்றைய போட்டியில் தீவிரம் காட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், இன்றைய போட்டியில் துளியும் விறுவிறுப்புக்கு பஞ்சமிருக்காது என்றே கூறப்படுவதால், இன்றைய போட்டி எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளளது. இந்த போட்டியாது, மும்பையில் இன்று இரவு 7.30 மணிக்கு தொடங்க உள்ளது.
இந்த இரு அணிகளும் நேருக்கு நேர் இது வரை 29 முறை மோதி உள்ள நிலையில், இதில் கொல்கத்தாவின் கையே இதுவரை ஓங்கியிருந்து உள்ளது. அந்த வகையில் 19 முறை பஞ்சாபை வீழ்த்தி கொல்கத்தா, அசத்தல் வெற்றி பெற்று உள்ளது. அதே போல், பஞ்சாப் அணியும் 10 முறை மட்டுமே கொல்கத்தாவை வென்று இருக்கிறது.
#PBKS பஞ்சாப் அணி
- மயங்க் அகர்வால் தலைமையிலான பஞ்சாப் அணி, பெங்களூருவுக்கு எதிராக 206 ரன்களை துரத்திப்பிடித்து மிரமிக்க வைக்கும் வெற்றியை ருசித்தது.
- பானுகா ராஜபக்சே, தவான், ஷாருக்கான், ஒடியன் சுமித் ஆகியோர் பேட்டிங்கில் மிரட்டி வருவதுடன், நல்ல ஃபார்மில் உள்ளனர்.
- வேகப்பந்து வீச்சாளர் காஜிசோ ரபடா இன்றைய ஆட்டத்தில் களம் இறங்குவது, அந்த அணிக்கும் இன்னும் கூடுதல் பலம்.
- இன்றைய போட்டியில் ஷிகர் தவான், மயங்க் அகர்வால், பானுகா ராஜபக்சே, லியாம் லிவிங்ஸ்டோன், ஷாருக் கான், ராஜ் அங்கத் பாவா, ஒடியன் ஸ்மித், ஹர்ப்ரீத் பிரார், ரபாடா, அர்ஷ்தீப் சிங், சந்தீப் சர்மா அல்லது ராகுல் சாஹர் ஆகியோர் விளையாட உள்ளனர்.
#KKR கொல்கத்தா அணி
- ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா அணி பேட்டி, பவுளிங் என இரண்டிலுமே நல்ல வலுவான நிலையிலேயே உள்ளது.
- பந்து வீச்சில் உமேஷ் யாதவ், டிம் சவுதி அச்தி வருகின்றனர்.
- சுழற்பந்து வீச்சாளர்கள் சுனில் நரின், வருண் சக்ரவர்த்தி கலக்கி வருகிறார்கள்.
இன்றைய போட்டியில் அஜிங்க்யா ரஹானே, வெங்கடேஷ் ஐயர், நிதிஷ் ராணா, ஸ்ரேயாஸ் ஐயர் சாம் பில்லிங்ஸ், ஷெல்டன் ஜாக்சன்ஆண்ட்ரே ரஸ்ஸல், சுனில் நரைன், டிம் சவுத்தி, உமேஷ் யாதவ், வருண் சக்கரவர்த்தி ஆகியோர் களம் இறங்குவார் என்று கூறப்படுகிறது.
இப்படியாக, இரு அணிகளுமே சம பலத்துடன் திகழ்வதால், இன்றைய போட்டியில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது என்றே எதிர்பார்க்கப்படுகிறது.