விராட் கோலிக்கு வந்த சோதனை.. 50 இன்னிங்ஸ் கடந்தும் ஒரு சதம் கூட அடிக்காத சோகம்!
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 50 இன்னிங்ஸ் கடந்தும், கேப்டன் விராட் கோலி இன்னும் ஒரு சதம் கூட அடிக்காதது ரசிகர்களுக்குப் பெருத்த ஏமாற்றமடையச் செய்துள்ளது.
இங்கிலாந்து நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் தற்போது விளையாடி வருகிறது.
இதில் முதல் டெஸ்ட் போட்டியானது டிராவில் முடிந்தது. 2 வது டெஸ்டில் இந்தியா 151 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த நிலையில், இந்தியா - இங்கிலாந்து அணிகள் இடையேயான 3 வது டெஸ்ட் போட்டி லீட்ஸ் ஹெட்டிங்லே மைதானத்தில் நேற்று முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இதில், டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. அதன் படி, இந்திய அணி 40.4 ஒவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து, தட்டுத்தடுமாறி மொத்தமே 78 ரன்களே எடுத்தது.
இந்த போட்டியில், அதிகம் எதிர்பார்க்கப்பட்ட கேப்டன் விராட் கோலி, வெறும் 7 ரன்களில் ஆண்டர்சன் பந்து வீச்சில் ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தார்.
சர்வதேச கிரிக்கெட் போட்டியில் 3 இலக்க ரன்களை எட்ட முடியாமல், அதாவது சதம் அடிக்க முடியாமல் விராட் கோலி தொடர்ச்சியாக விளையாடும் 50 வது போட்டி இதுவாகும்.
அத்துடன், கேப்டன் விராட் கோலி, இது வரை இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் 4 இன்னிங்ஸில் விளையாடி மொத்தமே 69 ரன்களளே சேர்த்திருக்கிறார்.
இதில், அதிகபட்ச அளவாக முதல் இன்னிங்சில் அவர் 42 ரன்கள் அடித்ததே அதிகபட்சமாக உள்ளது.
கடந்த 2019 ஆம் ஆண்டு வங்காளதேசத்திற்கு எதிரான பகல் - இரவு டெஸ்டில் கடைசியாக சதம் அடித்தார். அதன் பிறகு, விராட் கோலி தற்போது வரை 50 இன்னிங்சுகளில் விளையாடி உள்ளார். இதில், அவர் ஒரு சதம் கூட அடிக்கவில்லை. இது விராட் கோலி ரசிகர்களுக்குப் பெரிய ஏமாற்றத்தையே ஏற்படுத்தி உள்ளது.
அதாவது, கடந்த 2 ஆண்டு காலமாக 18 டெஸ்ட் போட்டிகள், 15 ஒரு நாள் போட்டிகள், 17 டி20 போட்டிகளில் விளையாடியிருக்கும் விராட் கோலி, இந்த 50 போட்டிகளில் ஒரு சதம் கூட அடிக்கவில்லை. ஆக மொத்தமாக, விராட் கோலி இந்த 50 போட்டிகளில் ஒரு சதம் கூட அடிக்காமல் விளையாடி வருவது மிகப் பெரிய ஏமாற்றமாக இருக்கிறது.
இதனால், இந்திய அணியில் விராட் கோலி இம்பேக்ட் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டிய சூழலுக்குத் தள்ளப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.