IPL2022: “டெல்லி பேய் ஆட்டம்” கொல்கத்தாவை வீழ்த்தி தட்டி தூக்கிய DC!
#IPL2022 சீசனில் #DC vs #KKR இடையே நடைபெற்ற இன்றைய லீக் போட்டியில், டெல்லி அணி பேய் ஆட்டம் ஆடி ரன்களை வாரி குவித்த நிலையில், கொல்கத்தா அணியால் தாக்கு பிடிக்க முடியாமல் விக்கெட்டுக்களையும் பறிக்கொடுத்து 44 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியையும் தழுவியது.
#IPL2022 சீசனின் 19 வது லீக் போட்டியாது #DC vs #KKR இடையே, முன்னதாக நடைபெற்றது.
இன்றைய 19 வது லீக் ஆட்டத்தில் மோதிய ஸ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான #KKR கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியும் - ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி கேபிடல்ஸ் அணியும் சம பலத்துடன் மோத களம் கண்டனது.
அதன்படி, #DC டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற #KKR கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, முதலில் பந்து வீச்சு தேர்வு செய்தது.
அதன்படி, #DC டெல்லி கேபிடல்ஸ் அணியின் தொடக்க வீரர்களாக டேவிட் வார்னர் - பிரித்வி ஷா ஜோடி களமிறங்கிய நிலையில், இருவருமே, கொல்கத்தா அணியின் பந்து வீச்சை அடித்து நொறுக்கி துவம்சம் செய்தனர்.
அத்துடன், இந்த #IPL2022 சீசனில் “ஃபார்ம் அவுட்” என்று விமர்சிக்கப்பட்ட தனது அதிரடியால் பதில் அளித்தார் வார்னர்.
அந்த வகையில், #KKR பவுலர்களான உமேஷ் யாதவ், பேட் கம்மின்ஸ் என்று அனைவரது பந்திலும், டேவிட் வார்னர் - பிரித்வி ஷா ஜோடி வானவேடிக்கை காட்டிக்கொண்டிருந்தது.
இந்த அடிரடியான வேட்டையால், 6 ஓவர்கள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 68 ரன்களை சேர்த்தது அதன்படி, #DC டெல்லி கேபிடல்ஸ்.
அப்போது, அதிரடியாக விளையாடிய பிரித்வி ஷா 27 பந்துகளில் அரை சதம் அடித்து அசத்திய நிலையில், 51 ரன்களில் ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தார்.
அதன் பிறகு வந்த ரிஷாப் பண்ட், அவரும் தனது பங்கிற்கு அதிரடி காட்ட 27 ரன்களில் ஆட்டமிழந்தார். அதனைத் தொடர்ந்து களமிறங்கிய லலித் யாதவ், ரோவ்மேன் பவெல் ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறினர்.
பின்னர், எதிர் முனையில் வான வேடிக்கை காட்டிக்கொண்டிருந்த வார்னர், அதிகபட்சமாக 61 ரன்கள் எடுத்திருந்த போது அவுட்டானார். கடைசி நேரத்தில் ஷார்துல் தாக்குர் - அக்சர் படேல் ஆகியோர் அதிரடி காட்டினர். இதனால், #DC டெல்லி அணியானது 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு, 215 ரன்களை குவித்தது.
குறிப்பாக, டெல்லி அணி 10 வது ஓவரிலேயே 100 ரன்களை குவித்திருந்த நிலையில், வார்னரின் அதிரடியால் 13 வது ஓவரிலேயே மேலும் 50 ரன்கள் சேர்த்து, மொத்தம் 150 ரன்களை குவித்தது.
இதனையடுத்து, 216 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற பெரிய இலக்கை நோக்கி களமிறங்கிய #KKR கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் தொடக்க வீரர்களாக வெங்கடேஷ் - ரகானே ஜோடி நிதானமாக இன்னிங்சை தொடங்கிய நிலையில், ரகானே 8 ரன்னிலும், வெங்கடேஷ் 18 ரன்னிலும் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தனர்.
பின்னர் களமிறங்கிய கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர், நித்திஸ் ராணாவுடன் ஜோடி சேர்ந்து பொறுப்பை தனது தலையில் சுமந்து பொறுமையாகவும், நிதானமாகவும் விளையாடி ரன் வேட்டையை தொடர்ந்து உயர்த்தினார்.
எனினும், கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர், அதிக பட்சமாக 33 பந்தில் 54 ரன்களும், நித்திஸ் ராணா 30 ரன்களும் எடுத்து, அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.
அதன் தொடர்ச்சியாக, அதிரடி மன்னர்காளன Andre Russell மற்றும் Sam Billings ஆகியோர் களம் கண்ட நிலையில், Sam Billings 15 ரன்னில் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார். பின்னர் வந்த வீரர்கள் அடுத்தடுத்து அவுட்டாக, சிறிது நேரம் தாக்குப் பிடித்து நின்ற Andre Russell 24 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார்.
இதனால், #KKR கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 19.4 ஓவர்களின் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து, 171 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் #KKR அணியை வீழ்த்தி, #DC அணியானது 44 ரன்கள் வித்தியாசத்தில் சூப்பர் வெற்றிப் பெற்றது.
இதனிடையே, தற்போது நடைபெற்று வரும் மற்றொரு ஐபிஎல் போட்டியில், ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில், டாஸ் வென்ற லக்னோ அணி பந்துவீச்சு தேர்வு செய்து விளையாடி வருகிறது.