NEETக்கு மாற்று SEET?
Galatta | Mar 19, 2021, 06:55 pm
மக்கள் நீதி மய்யத்தின் அறிக்கையில் இருக்கும் முக்கிய அம்சங்களை அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ளார். அதில் இட ஒதுக்கீடு பெறுவோரின் வாழ்வாதாரம் உயரும் வரை, இட ஒதுக்கீடு தொடர்ந்து வழங்கப்படும் என்றும், நதி நீர் இணைப்பு, அதி திறன் நீர் வழிச்சாலை, சுத்தமான நீர் ஆகியவை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
மேலும் தமிழ்நாட்டு மருத்துவக் கல்லூரிகளுக்கு தமிழ்நாட்டு பாடத்திட்டத்தில் MBBS படிப்பிற்கு SEET தேர்வு நடத்தப்படும் என்றும், உயர்கல்வியில் சமூக நீதி நிலைநாட்டப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில் ” NEET தேர்வுக்கு குறித்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. மாநில அரசின் மருத்துவ கல்லூரிகளுக்கு நீட் நடத்தலாம் என்ற விதிமுறையே இல்லை. மத்திய அரசு நடத்தும் கல்லூரிகளுக்கு மட்டுமே நீட் அவசியம் என சட்டம் சொல்கிறது.
நீட் தேர்வின் சட்டத்தில் எந்த இடத்திலும் சிபிஎஸ்இ பாடதிட்ட முறைப்படிதான் நீட் தேர்வு நடத்தவேண்டும் என்ற எந்த ஒரு விதிமுறையும் இல்லை. மாநில அரசிற்கு என்று சில உரிமைகள் இருக்கிறது.
மத்திய அரசுக்கு என்று சில உரிமைகள் இருக்கின்றன. STATE ENTRANCE ELEGIBILITY TEST என்ற தேர்வு மூலம் ஸ்டேட் போர்டு பாடத்திட்டங்கள் மட்டுமே இடம்பெறும். ” என்று மக்கள் நீதி மய்யம் விளக்கம் அளித்துள்ளனர்.