தூக்கமின்மை பிரச்சனை இல்லாதவர்கள் கூட காலையில் கண் விழிக்கையில் 8 மணி நேரம் தூங்கினேன் ஆனால் தூங்கியது போலவே இல்லை, தூங்கிய திருப்தி இல்லை என்பார்கள். தூங்கும் நேரத்தில் அதிகம் நேரம் மொபைல், லேப்டாப், டிவி பார்ப்பது இதற்கு அடிப்படையான காரணமாக இருந்தாலும் கூட, இரவு உணவுக்கு பிறகு டீ மற்றும் காபி போன்ற பானங்கள் அருந்தினால் கூட தூக்கம் பாதிக்கப்படும், உடலை ஆக்டிவாக வைத்திருக்கும்.
இரவில் நல்ல தூக்கம் வருவதற்கு சில உணவுகள் உள்ளன. நல்ல தூக்கத்தை பெற போராடிக் கொண்டு இருப்பவர்கள் அந்த உணவை எடுத்துக்கொள்ளும் போது, தூக்கத்தின் தரம் அதிகரிக்கும்.
சாதம் :
பொதுவாக கார்போஹைட்ரேட்டுகள் நிறைந்த உணவு பொருட்கள் தூக்கத்தைத் தூண்டும். உணவில் அதிக அளவில் கார்போஹைட்ரேட் எடுத்துக்கொள்வதால், படுத்தவுடன் உறங்கலாம் என்கிறது ஆய்வு. தூங்குவதற்கு சரியாக ஒரு மணி நேரத்துக்கு முன்பு சாத வகைகள் சாப்பிட்டால் நல்ல தூக்கம் கேரண்டி. ஆனால் கார்போஹைட்ரேட் உடல் எடையை அதிகரிக்க செய்யும் என்பதையும் மனதில் வைத்துக்கொள்வது அவசியம்.
அசைவ உணவுகள்:
டிரிப்டோபான் என்ற அமிலம் தூக்கத்தை நன்றாக தூண்டும். கோழி, இறைச்சி உணவுகளில் இந்த அமிலம் அதிக அளவில் உள்ளது. அதனால் தான் அவைச உணவு சாப்பிட்ட பிறகு சோர்வாக உணருவோம். அதனால் நன்றாக தூங்க வேண்டும் என்று நினைக்கும் போது நல்ல அவைச உணவுகள் சாப்பிடலாம்.
மஞ்சள் பால்:
வயிறு நிறைவாக இருக்க வேண்டும் என்பதற்காக இரவு நேரத்தில் ஒரு டம்ளர் பால் குடித்துவிட்டு உறங்க செல்வார்கள். ஆனால் வெதுவெதுப்பான பாலில் மஞ்சள் கலந்து சாப்பிட்டால், படுத்தவுடனே உறக்கம் வந்துவிடும். மஞ்சள் பாலில் அமினோ அமிலம், டிரிப்டோபான் போன்றவற்றை உடலில் உற்பத்தி செய்ய தூண்டி ஆழந்த தூக்கத்தை தரும்.