160 அடியில் முதலவர் எடப்பாடி பழனிசாமிக்கு மணல் சிற்பம்!
Galatta | Feb 12, 2021, 04:22 pm
முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் மணல் சிற்பம் ஒன்று மாமல்லபுரம் கடற்கரை கோயில் உருவாக்கப்பட்டுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் கடற்கரைக் கோயில் அருகே எடப்பாடி பழனிசாமியின் 160 அடி நீள மணல் சிற்பம் உருவாக்கப்பட்டுள்ளது!
இந்த சிற்பம் 50 மணல் சிற்பக் கலைஞர்களால், 10 நாள்களில் 50 டன் மணலைக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. திருக்கழுக்குன்றம் அதிமுக-வினர் ஏற்பாட்டில் சிற்பக் கலைக் கல்லூரி மாணவர்களால் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த பிரமாண்ட மணல் சிற்பம் அருகே மறைந்த முதல்வர் ஜெயலலிதா, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மணல் சிற்பமும் இடம்பெற்றுள்ளது.
இவை ஒரு வாரம் மக்கள் பார்வைக்காக காட்சிப்படுத்தப்பட உள்ளது. தொல்லியல் துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், இந்த மணல் சிற்பத்தை விரைவில் திறந்து வைக்க உள்ளார்.