குடியரசு நாள் கொண்டாடலாம், ஜெயலலிதா விழா நடத்தலாம், கிராம சபை மட்டும் கூடாதா?
By Abinaya | Galatta | Jan 26, 2021, 11:16 am
தமிழக அரசு சார்பில் மாநிலம் முழுவதும் ஆண்டுதோறும் ஜனவரி 26, மே 1, ஆகஸ்ட் 15, அக்டோபர் 2 ஆகிய நான்கு நாட்கள் கிராம சபைக் கூட்டம் நடைப்பெறும். தமிழகத்தில் உள்ள அனைத்துக் கிராம பஞ்சாயத்துகளிலும் ஒரே நாளில் இந்த கிராம சபைக் கூட்டம் நடத்தப்படும். ஆனால் கடந்த ஆண்டும் 2020ல் கொரோனா பரவல் காரணமாக, மே 1ம் தேதி, ஆகஸ்ட் 15ம் தேதி மற்றும் அக்டோபர் 2ம் தேதி அன்று கிராம சபைக் கூட்டம் தமிழக அரசால் ரத்து செய்யப்பட்டது.
இந்நிலையில் தற்போது மாநிலம் முழுவதும் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளதால், குடியரசுத் தினத்தன்று கிராம சபைக்கூட்டம் நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இன்று ஜனவரி 26ம் தேதியும், கொரோனா பரவல் காரணமாக , கிராம சபைக் கூட்டம் தமிழக அரசால் ரத்து செய்யப்பட்டு இருக்கிறது.
இதற்கு திமுக தலைவர் ஸ்டாலின் , மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் உள்ளிட்ட தலைவர்கள் கடும் கண்டனங்களை தெரிவித்து இருக்கிறார்கள். கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில், "குடியரசு நாள் கொண்டாடலாம், ஜெயலலிதா விழா நடத்தலாம், கிராம சபை மட்டும் கூடாதா? உண்மையில் இந்த அரசு யாருக்கு பயப்படுகிறது?" என்று பதிவிட்டுள்ளார்.