சென்னை மெட்ரோ ரயில் கட்டணம் குறைக்கப்படுவதாகவும், இது வரும் 22ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது என முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக முதல்வர் பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில், ‘’ மெட்ரோ ரயில் சேவையை , அதிக மக்கள் பயன்படுத்தும் வண்ணம், அதன் கட்டணம் குறைக்கப்பட வேண்டும் என்று பொது மக்களிடம் பெறப்பட்ட கோரிக்கைகளை ஏற்று சென்னை மெட்ரோ ரயில் கட்டணம் குறைக்கப்படுகிறது.

அதன் விபரம்,

chennai metro


கியூ.ஆர். கோடு மற்றும் சென்னை மெட்ரோ ரயில் நியமனத்தின் தொடுதல் இல்லா மதிப்பு கூட்டு பயண அட்டை மூலம் பயணிப்பவர்களுக்கு மேலும் கூடுதலாக அனைத்து பயணச்சீட்டுகளுக்கும் அடிப்படை கட்டணத்தில் இருந்து 20 சதவீதம் தள்ளுபடி செய்யப்படும். 

ஒரு நாள் வரையறுக்கப்படாத மெட்ரோ பயணம் தற்போதுள்ள கட்டம் 1 ன் 45 கி.மீ., வழித்தடப்பகுதிகளுக்கான கட்டணம் ரூ.100 ஆகும். தற்போது துவக்கப்பட்ட வண்ணாரப்பேட்டை முதல் விம்கோ நகர் வரையிலான 9 கி.மீ., நீள கூடுதல் வழித்தடத்திற்கும் சேர்த்து மொத்தம் 54 கி.மீ., வழித்தடத்திற்கும் அதே ரூ.100 ஆக இருக்கும்.

ஒரு மாத வரையறுக்கப்படாத மெட்ரோ பயணம், தற்போதுள்ள கட்டம் 1 ன் 45 கி.மீ., வழித்தடப்பகுதிகளுக்கான கட்டணம் ரூ.2,500 ஆகும். தற்போது துவக்கப்பட்டுள்ள வண்ணாரப்பேட்டை முதல் விம்கோ நகர் வரையிலா 9 கி.மீ., நீள கூடுதல் வழித்தடத்திற்கும் சேர்த்து மொத்தம் 54 கி.மீ., வழித்தடத்திற்கும் அதே ரூ.2,500 கட்டணம் தான். 

ஞாயிற்றுக்கிழமை மற்றும் பொது விடுமுறை நாட்களில் கட்டணத்தில் இருந்து 50 சதவீத தள்ளுபடி. “ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.