மீண்டும் ஒரு மாணவன் தற்கொலை.. ஆசிரியர்கள் காரணம்?

மீண்டும் ஒரு மாணவன் தற்கொலை.. ஆசிரியர்கள் காரணம்? - Daily news

சென்னை கொளத்தூர் காமராஜ் நகரை சேர்ந்தவர் முருகன். இவருக்கு 16 வயதில் பிரவீன் என்ற மகன் இருந்துள்ளார். பிரவீன் கொளத்தூரில் ஒரு  தனியார் பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வந்தார். கொரோனா ஊரடங்கு காலம் முடிந்து பள்ளிகள் திறக்கப்பட்ட பிறகு, கடந்த இரண்டு நாட்களாக பள்ளிக்குச் சென்றுள்ளார். ஆனால் இன்று பள்ளிக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார். பெற்றோர்கள் விசாரித்தப்போது வீட்டுப்பாடம் செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார்.


பிரவீனின் அம்மா வீட்டு வேலைக்கு சென்று வீடு திரும்பிய போது, வீட்டில் பிரவீன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதை பார்த்து அதிர்ந்து இருக்கிறார். உடனடியாக பிரவீனை  அருகிலிருந்த தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றப்போது, பிரவீன் உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.


இதனையடுத்து, போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பிரவீனின் உடலை பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். 


தற்கொலை செய்துக்கொண்டதற்கான காரணத்தை போலீஸ் விவசாரிக்கும் போது ,“பொது தேர்வுக்கு 3 மாதங்களே இருப்பதால், தேர்வுக்கு ஆசிரியர்கள் உதவுவார்கள் என நினைத்து பள்ளி சென்றேன். ஆனால் ஆசிரியர்களோ , ஊரடங்கில் நன்றாக படித்திருந்தால் மட்டுமே, இப்போது படிக்க இயலும் என்று கூறிவிட்டார்கள். அதிக மதிப்பெண் பெற்றால் மட்டுமே கல்லூரியில் சேர்ந்து பிகாம் படிக்க முடியும். இனி அது முடியாது போல . அதான் தற்கொலை செய்துக்கொண்டேன் “ என்று கடிதம் எழுதி வைத்துள்ளார் பிரவீன்.

suicide
கொரோனா ஊரடங்கிற்கு பிறகு பள்ளிக்கு செல்லும் மாணவர்கள், இவ்வாறு தற்கொலை செய்துக்கொள்வது அதிகரித்து வருகிறது. 

Leave a Comment