இந்த ஸ்நாக்ஸ் எல்லாம் டீ’யுடன் சேர்த்து சாப்பிட்டால் நிச்சயம் ஆபத்து தான்!
Galatta | Dec 08, 2020, 03:57 pm
பெரும்பாலும் காலை நேரங்களில் தேநீருடன் சேர்த்து அதிகபட்சமாக பிஸ்கட், பிரட் துண்டுகளுடன் நாம் முடித்துக்கொள்வோம். ஆனால் மாலை நேரத்து டீ அப்படி இருப்பதில்லை. டீ’யுடன் பஜ்ஜி, போண்டா, சமோசா, கல்லெட் என பட்லியல் நீண்டுக்கொண்டே போகும். தேநீர் எடுத்துக்கொள்வது உடலுக்கு ஆரோக்கியமனது என்று இதுவரை எந்த மருத்துவரும் சொன்னதில்லை. தேநீர் அருந்துவதை குறைத்துக்கொள்ள தான் அறிவுறுத்தி வருகிறார்கள்.
தேநீருடன் சில ஸ்நாக்ஸ் வகைகள் சேர்த்து உட்கொள்வது நாளடைவில் ஆபத்தில் கொண்டுச் சென்று விடும் என்கிறார்கள் மருத்துவ நிறுபுணர்கள்.
நாம் எடுத்துக்கொள்ளும் எல்லா ஸ்நாக்ஸிலும் உப்பு கலந்து இருக்கும். இதை தனியாக சாப்பிடும் போது பிரச்சனைகள் இல்லை. ஆனால் தேநீருடன் உப்பு கலந்த உணவு பொருட்கள் சேர்த்துக்கொள்வதால் தோல் நோய்கள், முடி உதிர்தல் பிரச்சனைகள் ஏற்படும். வெள்ளை முடி வருவதற்கு இது ஒரு முக்கிய காரணம். முடி உதிர்தலுக்கு என்ன காரணமாக இருக்கும் என பல காரணங்கள் யோசிப்போம். ஆனால் இதை அறிந்திருக்க மாட்டோம்.
அப்போது தேநீருடன் இனிப்பான ஸ்நாக்ஸ் எடுத்துக்கொள்ளலாமா என நீங்கள் கேட்டால்.. அதுவும் கூடாது. காரணம், தேநீரில் இருக்கும் சர்க்கரை மற்றும் ஸ்நாக்ஸில் கலந்து இருக்கும் சர்க்கரையை சேர்த்து எடுத்துக்கொள்ளும் போது உடலில் சர்க்கரையின் அளவை அதிகரிக்கும். உடல் எடையும் அதிகரித்து, இன்சுலின் அளவும் அதிகரிக்கிறது. சுகர் வருவதற்கு இதுவும் ஒரு காரணியாக அமைகிறது.
தேநீரில் தேன் கலந்து சிலர் குடிப்பார்கள். ஏன் என்று கேட்டால்.., சர்க்கரை உடலுக்கு நல்லது இல்லை என்பார்கள். ஆனால் இதுவும் ஆபத்து தான். தேநீரில் தேன் சேர்க்கும் போது நமது உடலின் வெப்பம் வேகமாக அதிகரிக்கிறது. இதனால் பதட்டம், டென்சன் அதிகமாகும்.
இதெல்லாம் விட பெரிய ஆபத்தான பழக்கம் ஒன்று இருக்கிறது. அது, தேநீர் குடித்த பிறகு புகைப்பது. இந்த பழக்கம் உள்ளவர்களுக்கு உணவுக்குழாயில் புற்றுநோய் ஏற்படும் ஆபத்து ஐந்து மடங்கு அதிகம்.
அன்றாடம் நாம் செய்யும் இந்த தவறுகளால் உடலின் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்துக்கொண்டே இருக்கிறது. எல்லா வித நோய்களுக்கும் வர முதல் காரணமாய் இந்த சின்ன தவறு அமைகிறது. உடலில் பிரச்சனைகள் வந்த பிறகு கஷ்டப்பட்டு உணவு கட்டுப்பாடு செய்வதற்கு பதிலாக இதுப்போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது அவசியம். அப்போ காபியுடன் சாப்பிடால் இதுப்போன்ற பிரச்சனை இல்லையா என்று கேட்காதீர்கள். அதுவும் உடலுக்கு நல்லது இல்லை. டீ, காபி குடிக்கும் போது வேறு எதையும் ஸ்நாக்ஸாக எடுத்துக்கொள்ளாதீர்கள். டீ, காபிக்கு அடியாகி இருந்தால், விரைவில் இந்த பழக்கத்தில் இருந்து வெளியே வாருங்கள்.