இந்தியாவில் அடுத்த நிதியாண்டு எப்படி இருக்கும்? உலக வங்கி சொல்வது என்ன?
By Madhalai Aron | Galatta | Oct 08, 2020, 06:22 pm
``கொரோனா தொற்றால் பொருளாதாரத்தில் ஏற்பட்ட திடீர் மற்றும் செங்குத்தான தாக்கத்தை சீரமைக்க இந்தியா முக்கியமான சீர்திருத்தங்களைத் தொடர வேண்டும்" என்று உலக வங்கி ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
ஒரு பிராந்தியமாக தெற்காசியா கடந்த ஐந்து ஆண்டுகளில் ஆண்டுதோறும் 6 சதவீதமாக முதலிடம் பிடித்தது. 2020 ஆம் ஆண்டில் 7.7 சதவீதமாக அது சுருங்கி மிக மோசமான மந்தநிலை சரிவு ஏற்படும் எதிர்பார்க்கப்படுகிறது. பிராந்தியத்தின் மிகப்பெரிய நாடான இந்திய பொருளாதாரம் 2021 மார்ச்சில் தொடங்கிய நிதியாண்டில் 9.6 சதவிகிதம் சுருங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உலக வங்கி கூறுகையில், இந்தியாவின் வளர்ச்சி நிதியாண்டில் 5.4 சதவீதமாக உயரும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
உலக வங்கி இந்தியாவில் 2021 ஆம் நிதி ஆண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் கூர்மையான சரிவு ஏற்படும் என கணித்து உள்ளது. 9.6 சதவீதம் சுருக்கத்தை கணித்துள்ளது, இது ஜூன் மாதத்தில் மதிப்பிடப்பட்ட 3.2% ஐ விட செங்குத்தானது ஆகும். உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் பலவீனமான செயல்பாடு இந்திய இறக்குமதி மற்றும் ஏற்றுமதி இரண்டையும் குறைக்கும்.
உலக வங்கி மதிப்பீட்டின்படி, வளர்ச்சி 2022 நிதி ஆண்டில் 5.4% ஆக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இது கொரோனா தொடர்பான கட்டுப்பாடுகள் முற்றிலுமாக நீக்கப்படும் என கருதுகிறது, ஆனால் பெரும்பாலும் அடிப்படை விளைவுகளை பிரதிபலிக்கிறது. தெற்காசியாவின் உலக வங்கியின் தலைமை பொருளாதார நிபுணர் ஹான்ஸ் டிம்மர் கூறுகையில், “இந்தியாவில் நிலைமை நாம் முன்பு கண்டதை விட மிகவும் மோசமாக உள்ளது.
இந்திய பொருளாதாரம் மந்தமடைந்து, நிதித்துறை பலவீனம் அதிகரிக்கும் போது கொரோனா தாக்கியதாக உலக வங்கி தெரிவித்துள்ளது, இருப்பினும், ஒரு “விரைவான மற்றும் விரிவான” நடவடிக்கை, வறுமைக்கு எதிராக கடுமையாக போராடி வென்று வெற்றிகளைப் பாதுகாக்க நாட்டிற்கு உதவும் என கூறினார்
இந்திய பொருளாதாரத்தில், வேளாண் சட்டங்கள் மிக மோசமான தாக்கத்தை ஏற்படுத்தலாம் என கணிக்கப்பட்டு வருகின்றது. ஆனால் மத்திய அரசு கொண்டு வந்துள்ளபுதிய வேளாண் சட்ட மசோதாவால் விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்படாது என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று விஜயவாடாவில் தெரிவித்தார். மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று ஆந்திர மாநிலம், கிருஷ்ணா மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது அவர் ஜெக்கன நெக்கலம் கிராமத்தில் உள்ள விவசாய கிடங்கை ஆய்வுசெய்து, அங்குள்ள விவசாயிகளிடம் வேளாண் சட்ட மசோதா குறித்து விளக்கங்களை அளித்தார்.
சிலரிடம் விவசாய உற்பத்தி, அதன் மூலம் வரும் வருவாய், மார்க்கெட்டிங் போன்றவை குறித்து கேட்டறிந்தார். அதன் பின்னர் அவர் விஜயவாடாவில் செய்தியாளர்களிடம் பேசிய தாவது:
``புதிய வேளாண் சட்ட மசோதா அமல் படுத்தப்பட்டதால், இனிவிவசாயிகள் தங்களது உற்பத்தி பொருட்களை எங்கு வேண்டுமானாலும் கொண்டு சென்று விற்கலாம். இதற்காக எந்தவொரு வரியும் செலுத்த தேவையில்லை. மார்க்கெட் யார்டு, இடைத் தரகர்கள் என இவர்கள் மூலம் விற்கும் பொருட்களுக்கு விவசாயிக்கு சுமார் 8 சதவீதம் வரை இதுவரை வரி செலவு இருந்தது. இனி இது இருக்காது. இடைத்தரகர்கள் இல்லாத புதிய வேளாண் சட் டத்தை இந்த அரசு அமல் படுத்தி உள்ளது.
இதுவரை நெல், கோதுமைக்கு மட்டுமே ஆதரவு விலை நிர்ணயிக்கப்பட்டிருந்தது. தற்போது மத்திய அரசு 22 பொருட்களுக்கு ஆதரவு விலை நிர்ணயித்துள்ளது. காய்கறிக்கு ஆதரவு விலை நிர்ணயிக்காத காரணத்தால், இதுவரை போதிய விலை போகாத காய்கறிகளை சாலையிலேயே கொட்டி விட்டு செல்லும் அவலம் இருந்தது. இனி அதுபோல் நடக்காது. உணவு உற்பத்தி பொருட்கள் தயாரிப்புக்கும் மத்திய அரசு ஊக்கம் அளிக்கிறது.
தொழிலாளர் நல சட்டத்திலும் சில மாற்றங்களை மத்திய அரசு கொண்டு வரும். கரோனா தொற்று மீது போராடிக் கொண்டே நாட்டின் வளர்ச்சிப் பணியிலும் நாங்கள் கவனம் செலுத்தி வருகிறோம். இவ்வாறு மத்திய நிதி அமைச்சர் பேசினார்.
முன்னதாக அவர் விவசாயிகளிடம் வேளாண் சட்டமசோதா குறித்து நேரில் விளக்கினார். அப்போது, ஆந்திராவின் தலைநகரம் அமராவதியாகவே இருக்க வேண்டுமென அப்பகுதியை சேர்ந்த சில பெண்கள் அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் மனு அளித்தனர். இது குறித்து ஆலோசிக்கப்படுமென அப்போது அவர் தெரிவித்தார்.
தமிழகத்தை பொறுத்தவரை, இன்னும் தேர்தலுக்கு 7 மாதங்கள் உள்ள நிலையில் கட்சிக்குள் அதிருப்தி ஏற்படாமல் அரவணைத்து செல்ல வேண்டியது ஒருபுறம் எனில், திமுகவின் பிரச்சாரங்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் அடுத்த 7 மாதத்தில் நிறைய வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்த வேண்டிய சவால் அதிமுக சார்பில் எடப்பாடிக்கு உள்ளது. ஆனால் அதற்கு உரிய நிதி ஆதாரங்கள் இல்லை என்பதால் அதில் உள்ள சவால்களை களைத்து வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் தமிழக அரசு உள்ளது.
நடப்பவற்றை கணிப்பதைவிட, பொறுத்திருந்து பார்ப்போமே!