ஆந்திராவில்  ஸ்ரீகாகுளம் மாவட்டத்தைச் சேர்ந்த அதிவிக்கொத்துரு என்ற கிராமத்தில், வயல் வெளியில் முதியவர் ஒருவர் இறந்து கிடந்துள்ளார். இந்த தகவலை அறிந்த எஸ்.ஐ சிரிஷா சம்பவ இடத்துக்கு சென்றுள்ளார். வயல் பகுதி என்பதால், சாலை வசதி இல்லை. அதனால்  2 கிமீ தொலைவிற்கு முன்பு வாகனத்தை நிறுத்திவிட்டு, சம்பவ இடத்துக்கு நடந்து சென்றுள்ளார். 


அங்கு சென்று விசாரணை நடத்திய போது, அந்த முதியவர் யாசகர் என்று தெரிய வந்துள்ளது. இறந்த முதியவரின் உடல் அழுகி துர்நாற்றம் வீசியதால், சடலத்தை எடுக்க ஊர் மக்கள் யாரும் முன்வரவில்லை. இதனால் தனியார் தொண்டு நிறுவனத்தை சேர்ந்த ஒருவரின் உதவியுடன், அந்த சடலத்தை தோளில் சுமந்து வயல்பகுதியிலிருந்து சாலைக்கு எடுத்து வந்துள்ளார் சிரிஷா. அதன்பின்பு, தன் சொந்த செலவில் அந்த முதியவரின் இறுதி சடங்கையும் செய்துள்ளார். 


வயல் பகுதியிலிருந்து சாலை பகுதிக்கு 2 கிமீ தூரத்துக்கு முதியவரின் சடலத்தை தூக்கி வந்த எஸ்.ஐ சிரிஷாவுக்கு அனைத்து தரப்பினரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.