பிராய்லர் சிக்கன் சாப்பிடுவதால் நமக்கு உடலுக்கு பல பிரச்சனைகள் வருகிறது எனவும் அவற்றை முற்றிலும் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டாம் எனவும் சில ஆண்டுகளமாய் தொடர்ந்து பல மருத்துவ உலகம் எச்சரித்து வருகிறது. ஆனால் கூடவே தந்தூரி சிக்கன் , கிரில் சிக்கன் , ஷவர்மா மோகம் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது.
கோழிகள் பெரிய அளவில் வளர்வதற்காக போடப்படும் வேதிபொருட்கள் மற்றும் ஹார்மோன்கள், ஆண்களின் இனப்பெருக்க சக்தியை அதிகமாக பாதிக்கின்றது எனவும் இதில் சேர்க்கப்படும் வளர்ச்சி ஹார்மோன், பெண் குழந்தைகளை 12 வயதுக்குள் பூப்படைய செய்கிறது எனவும் கோழிகள் வளரும் பருவத்தில் அவற்றின் வளர்ச்சிக்காக சேர்க்கப்படும் கெமிக்கல் பெண்களை விரைவில் முதுமையடைய செய்துவிடுகிறது என கண்டறியப்பட்டுள்ளது.
பிராய்லர் கோழியில் அதிக அளவு கெட்ட கொழுப்புகளே இருக்கிறது. பிராய்லர் சிக்கன் சாப்பிட்டு வந்தால் இதய கோளாறு , உடல் பருமன் ஏற்படுவதோடு புற்றுநோய் ஏற்பட காரணமாக அமைகிறது என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. பிராய்லர் சிக்கனை தவிர்த்து விட்டு, அதற்கு பதிலாக நாட்டு கோழி சாப்பிடுவது தான் உடலுக்கு மிகவும் நல்லது என்கிறார்கள் மருத்துவர்கள்.