சாப்பிட உணவுக்கு பணம் கேட்டதால், துப்பாக்கி முனையில் கைது!
Galatta | Mar 24, 2021, 03:17 pm
இரண்டு காவலர்கள் குடிபோதையில் ஒரு கடைக்குச் சாப்பிட்ட சென்றுள்ளனர். சாப்பிட பிறகு உணவுக்குப் பணம் கொடுக்க மறுத்ததோடு உணவகத்தின் உரிமையாளர்கள் இருவர் உட்பட பத்து பேர் மீது பொய் வழக்குப் போட்டு கைது செய்துள்ளனர்.
உத்தரப்பிரதேச மாநிலம் ஏட்டா மாவட்டத்தில் காவலர்கள் இருவர் ஒரு உணவகம் ஒன்றிக்குச் சென்றுள்ளனர். உணவு சாப்பிட்ட பிறகு உரிமையாளர் சாப்பிட உணவுக்குப் பணம் கேட்டுள்ளார். பணத்தைக் கொடுக்க மறுத்த காவலர்கள், உரிமையாளருடன் வாக்குவாதத்தில் ஈட்டுப்பட்டுள்ளனர். இதன் பின்பு, கட்டணம் தர மறுத்த காவலர்களிடம், அங்கு உணவருந்த வந்த சிலரும் பணத்தைக் கட்ட சொல்லியுள்ளனர். ஆனால் காவல்துறையினர் பணத்தைக் கொடுக்க மறுத்து, தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈட்டுப்பட்டுள்ளனர்.
அந்த சம்பவத்தின் போது, 15க்கும் மேற்பட்ட காவலர்கள் அங்கு வந்துள்ளனர். வந்த காவலர்கள் துப்பாக்கி முனையில் உரிமையாளர்கள் இருவர் உட்பட பத்து பேரைக் கைது செய்துள்ளனர். மேலும், அவர்கள் மீது ஆயுதம் மற்றும் கள்ளச்சாராயம் வைத்திருந்ததாகப் பொய் வழக்குகளைப் பதிந்து சிறையில் அடைத்துள்ளனர்.
இந்த வழக்குகள் நீதிமன்றத்துக்கு விசாரணைக்கு வந்தபோது, அனைத்து வழக்குகளும் பொய்யாகப் பதியப்பட்டது என்றும் காவல்துறையினரால் ஜோடிக்கப்பட்டது என்றும் நிருப்பிக்கப்பட்டத்தையொடி போலீசார் இருவரும் பணியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.