பிரதமர் மோடி தனது நாடாளுமன்ற உரையின் போது அந்தோலன் ஜீவி என்ற வார்த்தையை பயன்படுத்தியிருந்தார். இந்த வார்த்தையை எதிர்க்கட்சிகள் கடுமையாக கண்டித்தனர்.

 

இதுகுறித்து இன்றைய நாடாளுமன்றத்தில், ” உழைக்கும் மக்களுக்கு எதிராக பிரதமர் பேசியுள்ளார். இந்த அரசு மக்களுக்கானது இல்லை. கார்ப்பரேட்களுக்கானதாக உள்ளது. இரண்டரை மாதங்களாக விவசாயிகளின் போராட்டம் நடந்துகொண்டு இருக்கிறது. இந்நிலையில் போராடும் விவசாயிகளை கொச்சைப்படுத்தும் விதமாக, அவர்கள் அந்தோலன் ஜீவி என்று குறிப்பிடுகிறார் பிரதமர். போராடும் விவசாயிகள் அந்தோலன் ஜீவி என்றால் நானும் அந்தோலன் ஜீவிதான் தான்” என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் , எம்.பி திருமாவளவன் கூறியுள்ளார். 


மேலும் எம்.பி சு.வெங்கடேசன் , ‘’ விவசாயிகளை போராடி பிழைப்பவர்கள் என சொல்லி பிரதமர் நரேந்திர மோடி கொச்சைப்படுத்தலாமா? என்று கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் விவசாயிகள் ஏர்கலப்பைகளை தோள்களில் சுமப்பவர்கள். இந்த அரசாங்கத்தை போல் கார்ப்பரேட்களுக்கு பல்லாக்கு சுமப்பவர்கள் இல்லை. இந்த குடியரத் தலைவரின் உரை வெந்த புண்ணில் வேலை பாய்ச்சுவது போல இருக்கிறது” என்றார்.