கொரோனா கால கட்டுப்பாடுகள் மற்றும் மத்திய அரசின் வழிகாட்டுதல்களுடன் கடந்த மாதம் 13ம் தேதி நீட் தேர்வு நடைபெற்றது. நாடு முழுவதும் 15 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் இத்தேர்வை எழுதினார்கள். ஆனால், கொரோனாவால் பாதிக்கப்பட்ட மற்றும் நோய்க் கட்டுப்பாட்டு பகுதிகளைச் சேர்ந்த பல மாணவர்களுக்கு நீட் தேர்வை எழுத முடியாத நிலை இருந்தது. இதையடுத்து இந்நிலையில், கொரோனாவால் நீட் தேர்வை தவறவிட்ட மாணவர்களுக்கு கடந்த 14ம் தேதி தேர்வு நடத்த அனுமதி அளித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் தேர்வு முடிவுகளை அக்.16-ம் தேதி தேசிய தேர்வு முகமை வெளியிட வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியது.

இதன்படி நீட் தேர்வு மீண்டும் 14ம் தேதி நடைபெற்றது ஏற்கனவே தவறவிட்டவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி எழுதலாம் என அறிவிக்கப்பட்டது. தேர்வை தவறவிட்ட மாணவ மாணவியர் கடந்த 14ம் தேதி பிற்பகல் 2 மணி முதல் 5 மணி வரை நடந்த தேர்வை எழுதினர். சுமார் 1 லட்சத்து 60 ஆயிரம் பேர் எழுதினர். இதையடுத்து இரண்டு கட்டமாக நடந்த நீட் தேர்வுகளுக்கான முடிவுகள் நேற்று மாலை வெளியானது. தேசிய தேர்வு முகமையின் இணைய தளமான https://www.nta.ac.in/ மற்றும், http://ntaneet.nic.in/ ஆகிய இணையதளங்களில் மாணவர்கள் தங்கள் தேர்வு எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளிட்ட விவரங்களை பதிவு செய்து தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம். இந்த தகவலை தேர்வு முகமை தெரிவித்தது.

பல்வேறு தடங்கல்களுக்குப் பின் வெளியான இந்த தேர்வு முடிவில், ஒடிசாவை சேர்ந்த மாணவர் சோயப் அப்தாப் மற்றும் டெல்லியைச் சேர்ந்த மாணவி அகான்ஷா சிங் ஆகியோர் 720-க்கு720 மதிப்பெண் எடுத்து தேசிய அளவில் முதலிடம் பிடித்தனர். 

நீட் தேர்வு வரலாற்றில் இதுவரை எந்த மாணவரும் முழு மதிப்பெண் பெற்றதில்லை. இரண்டு பேர் 100% மதிப்பெண் எடுத்து தேர்ச்சி பெற்றதையடுத்து டை-பிரேக் கொள்கைகளின் படி சோயப் அப்தாப் சீனியர் மாணவர் என்பதால் அவருக்கு முதலிடம் வழங்கப்பட்டது. 

முதலிடம் பிடித்துள்ள சோயப் அப்தாப், டெல்லி எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து படிக்க விருப்பம் தெரிவித்துள்ளார். மாணவி அகான்ஷா சிங், நரம்பியல் அறுவை சிகிச்சை ஆராய்ச்சியாளராக வேண்டும் என விருப்பம் தெரிவித்துள்ளார்.

இதேபோல, தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே ஏ.வாடிப்பட்டியைச் சேர்ந்த தட்சிணாமூர்த்தி - மகேஸ்வரி தம்பதியின் மூத்த மகன் ஜீவித்குமார், பெரியகுளம் அருகே உள்ள சில்வர்பட்டி அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் 12ம் வகுப்பு படித்துள்ளார். இந்தாண்டு நடைபெற்ற நீட் தேர்வில் பங்கேற்ற அவர் 720-க்கு 664 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளார். இதன் மூலம் தமிழக அரசுப் பள்ளிகள் அளவில் முதலிடமும், இந்திய அளவில் தரவரிசைப் பட்டியலில் 1823 வது இடமும் பிடித்துள்ளார். ஜீவித்குமார் தனியார் பயிற்சி மையத்தில் பயின்றுள்ளார் என்பதும்,  இரண்டாவது முறையாக தேர்வெழுதி இம்முறை தேர்ச்சி பெற்றுள்ளார் என்பதும் குறிப்பிடதக்கது.

இந்த நிலையில் திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவில் பகுதியை சேர்ந்த மாணவர் ஸ்ரீஜன் நீட் தேர்வில் 720-க்கு 710 மதிப்பெண்கள் பெற்று தமிழக அளவில் முதலிடம் பிடித்துள்ளார். நாமக்கல்லைச் சேர்ந்த மோகனபிரபா 705 மதிப்பெண்கள் எடுத்து இரண்டாம் இடம் பிடித்துள்ளார். இருவரும் ஒரே பயிற்சி மையத்தில் படித்துள்ளனர்

இவர்களுக்கு அடுத்தபடியாக, தமிழகத்தில் Marvel Educare என்ற கோச்சிங்க் சென்டர் வழியாக பயின்ற மாணவி  எஸ்.சஞ்சனா 680 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளார். 

நீட் வெற்றி குறித்து மாணவி சஞ்சனா தெரிவிக்கையில்,
 
``நீட் தேர்வில் முன்னிலையில் இருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. மருத்துவம் படிக்க வேண்டும் என்ற கனவு இதன் மூலம் நிறைவேறியுள்ளது. கே.கே நகர் PSBB பள்ளியில் படிக்கும் போதே அதற்கான திட்டமிடலுடன் படித்தேன். அதற்கேற்ப Marvel Educare-ன் நீட் ரேங்க் பூஸ்டர் ப்ரோகிராம் மூலம் படித்தேன். அங்கு எனக்கு கொடுத்த சரியான பயிற்சி எனக்கான வெற்றியை தேடி தந்துள்ளது. இதற்கு பெரிதும் உதவியதோடு மட்டுமில்லாமல், திறமையை நம்பி பயிற்சியளித்த அகிலன் சாருக்கு நன்றி” என கூறினார். 

``சஞ்சனா ஆர்வமாக படிக்கக் கூடியவர். மருத்துவக்கனவை நோக்கிய அவரது முயற்சிக்கு கிடைத்த வெற்றி இது. நீட் தேர்வை எதிர்கொள்ள கொடுத்த எல்லா பயிற்சி வகுப்புகளிலும் ஆர்வமாக கலந்து கொண்டு, தேர்வு நடைமுறைகளை பற்றி தெரிந்துக் கொண்டார். தொடர்ச்சியாக தேர்வு எழுதி பழகியதன் மூலம், நீட் தேர்வில் நிச்சயம் வெல்வார் என நினைத்திருந்தேன். அதன்படி இப்போது வெற்றி பெற்றுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. இந்த வெற்றி, தமிழக மாணவர்களின் எதிர்காலத்திற்கு சரியான பாதையை அமைத்து கொடுக்கும் முயற்சிக்கு மேலும் உற்சாகத்தை அளித்துள்ளதாக”, கோச்சிங் சென்டரின் நிறுவனர் CP அகிலன் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

மேலும் பேசிய அவர், “கடந்த ஆறு வருடங்களாக சிபிஎஸ்இ தேர்வில் 490 மற்றும் அதற்கும் அதிகமான மதிப்பெண்களை அகிலன் இன்ஸ்டிட்யூட் மாணவர்கள் பெற்று சாதனை புரிந்து வருகின்றனர். பல பயிற்சி வகுப்புகளில் அதிகப்படியான கட்டணம் காரணமாக, திறமையான மாணவர்களுக்கு சரியான பயிற்சி என்பது எட்டாக் கனியாக உள்ளது. ஆனால், நம் அகிலன் இன்ஸ்டிட்யூட், திறமையான ஏழை மாணவர்களுக்கு உதவிக்கரம் நீட்டும் நற்செயலையும் செய்து வருகிறது. 

இதன்முலம், 1500 க்கும் மேற்பட்ட ஏழை மாணவர்கள் குறைந்த கட்டணத்தில் படித்து பயன் பெற்று இருக்கிறார்கள். இந்நிலையில், மருத்துவம் பயிலும் கனவுக்கு பெரும் அச்சுறுத்தலாக நீட் தேர்வு உருவெடுத்துள்ளது. அந்த அச்ச உணர்வில் இருந்து மாணவர்களை வெளிக் கொண்டு வந்து, அவர்களை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் செல்லும் நோக்கில் நம் அகிலன் இன்ஸ்டிட்யூட் நிறுவனம் 2018 ஆம் ஆண்டு Marvel Educare என்னும் பயிற்சி நிறுவனத்தை ஆரம்பித்து இருக்கிறது. இங்கு நீட் மற்றும் ஜேஇஇ தேர்வுக்கான பயிற்சி சிறப்பான முறையில் வழங்கப்பட்டு வருகிறது. முதலாமாண்டு பயிற்சி பெற்ற அனைத்து மாணவர்களும், நீட் தேர்வில் வெற்றி பெற்று ஸ்டான்லி உள்ளிட்ட தரமான மருத்துவமனையில் மருத்துவ படிப்பை தொடங்கியுள்ளனர்” எனவும் அகிலன்  கூறினார்.