காதலுக்காக குடும்பத்தினர் 7 பேரை கொன்ற பெண் தூக்கிலிடப்படும் வழக்கு.. தாயாரின் மரண தண்டனையை குறைக்க மகன் வேண்டுகோள்..!
By Aruvi | Galatta | Feb 20, 2021, 12:25 pm
காதலுக்காக குடும்பத்தினர் 7 பேரை கொன்ற பெண் தூக்கிலிடப்படும் வழக்கில், “எனது தாயாரின் மரண தண்டனையை குறைக்க வேண்டும்” அவருடைய மகன் வேண்டுகோள் விடுத்து உள்ளார்.
சுதந்திர இந்தியாவில் பெண் ஒருவர் முதன் முதலாகத் தூக்கு மேடை ஏற போகும் சம்பவம், கடந்த சில நாட்களாக நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
உத்தரப் பிரதேசம் மாநிலத்தில் ராம்பூர் பகுதியில் உள்ள அம்ரோஹா பகுதியைச் சேர்ந் ஷப்னம் என்ற பெண், கடந்த 2008 ஆம் ஆண்டு தனது குடும்பத்தினர் 7 பேரைக் கொலை செய்த குற்றத்திற்காக அதிரடியாகக் கைது செய்யப்பட்டார்.
அதாவது, குற்றவாளியான ஷப்னம், தனது காதல் திருமணத்திற்கு குடும்பத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால், காதலர் சலீமுடன் சேர்ந்து தனது ஒட்டு மொத்த குடும்பத்தினர் 7 பேரையும் அவர் மிக கொடூரமான முறையில் கொலை செய்தார்.
அதன் பின்னர், அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினார்கள். விசாரணைக்குப் பிறகு நீதிமன்றத்தில் இவருக்குத் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது. இந்த தண்டனையைத் தவிர்க்க கோரி, கருணை மனு ஒன்றை எழுதி குடியரசுத் தலைவருக்கு அவர் அனுப்பி இருந்தார். இவரது கருணை மனுவையும் குடியரசுத் தலைவர் முற்றிலுமாக நிராகரித்து உள்ளார்.
இதனால், இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு சுந்திர மண்ணில் தூக்கு மேடைக்கு செல்லவிருக்கும் இந்தியாவின் முதல் பெண்ணாக இவர் பார்க்கப்படுகிறார்.
இருக்கிறார். அதே நேரத்தில், அவருக்குத் தூக்குத் தண்டனை நிறைவேற்றப்படும் நாள் தற்போது நெருங்கிக்கொண்டே வருவதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்த வழக்கின் தீர்ப்பில், உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பையே டெல்லி உச்ச நீதிமன்றமும் உறுதி செய்தது. தற்போது, ஷப்னத்தை தூக்கிலிடுவதற்கான நடைமுறைகள் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருவதாகச் சிறைத் துறை வட்டாரங்கள் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இதனால், கொலை குற்றவாளி ஷப்னம், இந்தியா சுதந்திரம் அடைந்ததற்குப் பின்னர் தூக்கு மேடைக்கு செல்லவிருக்கும் முதல் பெண்ணாக இருக்கிறார்.
இந்நிலையில், “சொந்த குடும்பத்தினர் 7 பேரை கொன்ற வழக்கில் தாயாரின் மரண தண்டனையைக் குறைக்கும்படி” அவரது மகன் முகமது தாஜ், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு வேண்டுகோள் விடுத்து உள்ளார்.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் அவரது மகன் முகமது தாஜ், “எனது தாயாரை நான் நேசிக்கிறேன்” என்று, குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், “குடியரசுத் தலைவருக்கு நான் ஒரு வேண்டுகோள் வைக்கிறேன்” என்று கூறிய முகமது தாஜ், “எனது தாயாரின் மரண தண்டனை குறைக்கப்பட வேண்டும்” என்றும், அவர் வலியுறுத்திக் கேட்டுக்கொண்டார்.
மேலும், “எனது தாயாருக்கு மன்னிப்பு வழங்க வேண்டும் என்றும், குடியரசுத் தலைவர் மன்னிப்பு வழங்குவது என்பது அவரது முடிவு. ஆனால், எனக்காக அவர் என் தாய்க்கு தண்டனையைக் குறைத்து வழங்குவார் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது” என்றும், முகமது தாஜ் தெரிவித்தார்.
உத்தரப் பிரதேசத்தின் புலந்த்சாகரில் உஸ்மான் சைபி என்பவரது பாதுகாப்பில் வசித்து வரும் முகமது தாஜ், “எனது தாயாரின் மரண தண்டனையைக் குறைக்க வேண்டும்” என்று, உத்தரப் பிரதேச மாநில ஆளுநருக்கு கருணை மனு ஒன்றை அனுப்பி வைத்து உள்ளார். இதனால், இந்த வழக்கு தொடர்பான செய்தி, நாடு முழுவதும் மீண்டும் வைரலாகி வருகிறது.