பெண் போலீசின் மன்மத லீலை! கணவன் என்று ரகசிய காதலனை தன்னுடன் தங்க வைத்து ரொமன்ஸ்..
By Aruvi | Galatta | Jul 17, 2020, 11:40 am
கணவர் என்று கூறி ரகசிய காதலனை பெண் போலீஸ் ஒருவர், கொரோனா முகாமில் தன்னுடன் தங்க வைத்து ரொமன்ஸ் செய்து வந்த சம்பவம், பரபரப்பை
ஏற்படுத்தி உள்ளது.
மஹாராட்சிரா மாநிலம் நாக்பூரில் உள்ள காவல் நிலையத்தில் பணியாற்றும் பெண் போலீஸ் ஒருவர், கடந்த 3 மாதங்களாக கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டு இருந்தார். இதனையடுத்து, அவருக்கு தற்போது கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதனைத்தொடர்ந்து, அந்த காவல் நிலையத்தில் பணிபுரிந்து வந்த அனைத்து போலீசாரும் கொரோனா தடுப்பு முகாமில் தனிமைப் படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதில், சில போலீசார் அவர்களது குடும்பத்தினருடன், கொரோனா தடுப்பு மையத்தில் தனிமைப் படுத்தப்பட்டனர். அந்த தனிமைப்படுத்தும் பணியின் போது, அந்த காவல் நிலையத்தில் பணியாற்றும் பெண் போலீஸ் ஒருவர், “எனது கணவருக்கும் கொரோனா இருக்கலாம் என்ற சந்தேகப்படுகிறேன். அதனால், அவரையும் என்னுடன் சேர்த்துத் தனிமைப்படுத்த வேண்டும் என்று மருத்துவமனை ஊழியர்களிடம் கேட்டுக்கொண்டார்.
குறிப்பிட்ட அந்த பெண் போலீஸ் தந்த தகவலின் அடிப்படையில், மும்பையில் உள்ள தபால் துறையில் பணியாற்றும் ஒருவரை அந்த மாநில சுகாதாரத்துறை ஊழியர்கள், போலீசார் தங்கியிருக்கும் கொரோனா தடுப்பு மையத்திற்கு அழைத்து வந்தனர். அங்கு, குறிப்பிட்ட அந்த பெண் போலீசாருடன், அவரையும் தனிமையில் தங்க வைத்தனர்.
அந்த கொரோனா தடுப்பு மையத்தில் அந்த பெண் போலீசும், அந்த ஆணும் தொடர்ந்து காதல் பொங்கப் பொங்க ரொமன்ஸ் செய்துகொண்டே இருந்துள்ளனர். அவர்கள் இருவரும் கணவன் - மனைவி தானே என்று பலரும் நினைத்துக்கொண்டிருந்தனர்.
இந்த தகவல், அந்த பெண் போலீசின் ரகசிய காதலனின் மனைவிக்குத் தெரிய வந்தது. இதனால், அதிர்ச்சி அடைந்த அவர், குறிப்பிட்ட அந்த கொரோனா முகாமிற்குச் சென்றுள்ளார். ஆனால், அவரை மருத்துவமனை ஊழியர்கள் உள்ளே அனுமதிக்கவில்லை. இதனால், அவர் இன்னும் கோபமடைந்தார்.
இதனையடுத்து, அங்குள்ள பஜாஜ் நகரில் உள்ள காவல் நிலையத்திற்கு வந்த பெண் ஒருவர் தனது கணவருக்கு கொரோனா உள்ளது எனக் கூறி மருத்துவமனை ஊழியர்கள் அழைத்துச் சென்று உள்ளனர். ஆனால், அவர் பெண் போலீஸ் ஒருவருடன் கொரோனா தடுப்பு முகாமில் உள்ளார் எனவும், அவரை உடனடியாக மீட்டுத்தர வேண்டும் என்றும், அவர் புகார் மனு கொடுத்துள்ளார். இதனால், அதிர்ச்சி அடைந்த மும்பை பஜாஜ் நகர் போலீசார், விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், கொரோனா தடுப்பு முகாமில் அனுமதிக்கப்பட்ட பெண் போலீசுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை என்பதைக் கண்டு பிடித்தனர். அத்துடன், கொரோனா முகாமில் அனுமதிக்கப்பட்ட பெண் போலீசுடன் உள்ள நபருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி இருப்பதையும், போலீசார் உறுதி செய்தனர்.
குறிப்பாக, அவர்கள் இருவரும் வீட்டிற்குத் தெரியாமல் காதலித்து ஒன்றாக குடும்பம் நடத்தி வந்ததும் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது.
மேலும், கடந்த ஆண்டு மும்பையில் நடைபெற்ற ஒரு அரசு நிகழ்ச்சியில், அந்த பெண் போலீசுக்கும் குறிப்பிட்ட அந்த தபால் துறை ஊழியரும் அறிமுகமாகி உள்ளன். அப்போது, அவர்கள் இருவருக்குள்ளும் ரகசிய காதல் ஏற்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாகவே, அவர்கள் இருவரும் தங்கள் வீட்டிற்குத் தெரியாமல், ரகசியமாக குடும்பம் நடத்தி வந்துள்ளனர்.
இதனையடுத்து, அந்த பெண் போலீசுடன் கொரோனா தடுப்பு முகாமில் அடைக்கப்பட்ட அந்த ரகசிய காதலனைப் பிரித்து, வேற ஒரு கொரோனா தடுப்பு முகாமிற்கு போலீசார் அனுப்பி வைத்தனர். மேலும், அந்த போலீசாரின் சட்ட விரோத வாழ்க்கை குறித்தும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனால், மும்பை காவல் துறையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.