நிறைமாத கர்ப்பிணி, கொரோனா பாதிப்பு, கோமா நிலை.. கெல்சியின் கதை!

நிறைமாத கர்ப்பிணி, கொரோனா பாதிப்பு, கோமா நிலை.. கெல்சியின் கதை! - Daily news

அமெரிக்காவில் விஸ்கான்சின் பகுதியை சேர்ந்த கெல்சி டவுன்செண்ட்  என்ற பெண் நிறைமாத கர்ப்பிணியாக இருந்தப்போது, கடந்த ஆண்டு  கொரோனாவால் பாதிக்கப்பட்டார். கொரோனாவின் தாக்கம் அதிகம் இருந்ததால், கோமா நிலைக்கு சென்றார்.


நிறைமாத கர்ப்பிணி, கொரோனா பாதிப்பு, கோமா நிலை என்று கெல்சி தீவிர சிகிச்சை பிரிவில் உச்சபட்ச சிகிச்சை பெற்று வந்தார். கோமா பாதிப்பில் இருந்ததால் நவம்பர் மாதம் அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பெற்றெடுத்தார்.


பிறகு ஒரு வழியாக கொரோனா பாதிப்பு குறைந்து, கோமாவில் இருந்து மீண்டு வீடு திரும்பியிருக்கிறார் கெல்சி. கெல்சிக்கு இது 4 வது குழந்தை. குழந்தை பெற்றெடுத்து 3 மாதங்களுக்கு பிறகு வீடு திரும்பியவர், குழந்தையை பார்த்தவுடனே கண்ணீர் மல்க கொஞ்சியுள்ளார். 


கெல்சிக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் கூறியது, ‘’ கெல்சிக்கு ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டு இருந்தது, உடலின் அனைத்து முக்கிய உறுப்புகளும் பாதிக்கும் நிலையில் இருந்தார். மேலும் இரண்டு நுரையீரல் மாற்றம் செய்ய வேண்டிய நிலையும் இருந்தது. இதனால் குழந்தையை உடனடியாக பெற்றெடுக்க வேண்டிய சூழலில் இருந்தது. மரணத்தின் வாசலுக்கு பலமுறை சென்று வந்துள்ளார்.

சிகிச்சை அளித்த மருத்துவர்கள் நாங்களும் பல இரவுகள் தூங்காமல் சிகிச்சை குறித்து பேசியிருக்கிறோம். இப்போது கெல்சி நலமுடன் வீடு திரும்பி திருப்பது எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது.” என்றுள்ளனர். இந்த செய்தி சமூக வளைதளங்களில் டிரெண்டாகி வருகிறது. 

 

Leave a Comment