கள்ளக் காதலியோடு குடும்பம் நடத்த சதி.. “கொரோனாவால் சாகப்போவதாக” மனைவியிடம் கூறிவிட்டு மாநிலம் விட்டு மாநிலம் ஓடிய கணவன்!
By Aruvi | Galatta | Sep 18, 2020, 03:59 pm
மகாராஷ்டிரா மாநிலத்தில் “கொரோனாவால் நான் சாகப்போகிறேன்” என்று மனைவியிடம் செல்போனில் தகவல் கூறிவிட்டு வீட்டை விட்டு ஓடிய கணவன், மாநிலம் விட்டு மாநிலம் சென்று கள்ளக் காதலியோடு குடும்பம் நடத்தி வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் நேவி மும்பையில் உள்ள தலோஜா என்னும் பகுதியைச் சேர்ந்த 28 வயதான சரவணன் (பெயர் மாற்றப்பட்டு உள்ளது), தன் மனைவி மற்றும் தன் குழந்தைகளுடன் வசித்து வந்துள்ளார்.
அவர்களது வாழ்க்கை மகிழ்ச்சியாகச் சென்ற நிலையில், சரவணனுக்கு, வேறொரு பெண்ணுடன் கள்ளக் காதல் பழக்கம் ஏற்பட்டுள்ளது. ஆனால், அந்த பெண், வேறு மாநிலத்தைச் சேர்ந்தவர் என்றும் கூறப்படுகிறது. அத்துடன், தனது மனைவியைக் கழற்றி விட்டுவிட்டு தனது கள்ளக் காதலியுடன் உல்லாச வாழ்க்கை வாழ சரவணன் முடிவு செய்துள்ளான்.
அது தொடர்பாக திட்டமிட்ட சரவணன், கடந்த ஜூலை மாதம் 24 ஆம் தேதி தன் மனைவிக்கு போன் செய்து பேசிய கணவன் சரவணன், “எனக்கு கொரோனா வைரஸ் பரிசோதனை செய்யப்பட்டது. அதில், எனக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளதாகவும், இதன் காரணமாகக் கூடிய சீக்கிரமே நான் உயிரிழக்கப் போவதாகவும்” கூறி அழுவது போல் நடித்து உள்ளார்.
அத்துடன், வீட்டில் மனைவி மற்றும் தன் பெற்றோர் என யாரிடமும் எதுவும் சொல்லாமல் அவர் தலைமறைவாகி உள்ளார். கணவன் காணாமல் போனதைக் கண்டு கடும் அதிர்ச்சியடைந்த அவர் மனைவி, கணவன் ஒரு சில நாட்களில் வந்து விடுவார் என்று நினைத்துக்கொண்டு இருந்துள்ளார். ஆனால், சில நாட்கள் கடந்த நிலையிலும், கணவன் திரும்பி வரவில்லை. கணவனிடமிருந்து எந்த ஒரு தகவலும் வர வில்லை. அவர் நம்பரும் உபயோகத்தில் இல்லை என்று வந்துள்ளது.
இதனால், அதிர்ச்சியடைந்த அவர் மனைவி, “என் கணவரைக் காணவில்லை எனவும், அவருக்கு கொரோனா உள்ளதாகவும் வாஷி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், அந்த பெண்ணின் கணவனைத் தேடும் முயற்சியில் இறங்கினர்.
அத்துடன், மும்பையில் உள்ள கோவிட் 19 பராமரிப்பு மையங்கள் மற்றும் ஆய்வகங்கள் என அனைத்து இடங்களிலும் அந்த நபரை போலீசார் முழு வீச்சில் தேடி உள்ளனர். ஆனால், எங்குத் தேடியும் அவர் இருக்கும் இடம் கண்டுபிடிக்க முடியவில்லை.
இந்நிலையில், சில நாட்களுக்கு முன்பு அந்த நபரின் செல்போன் எண்ணை போலீசார் ஆய்வு செய்து உள்ளனர். அப்போது, அந்த செல்போன் எண் சிக்னல் மத்தியப் பிரதேசத்தில் உள்ள இந்தூரில் இருப்பதாகக் காட்டியது. இதனையடுத்து, அங்கு விரைந்து சென்ற போலீசார், அந்த இளைஞரை மீட்க முயன்றனர். ஆனால், அந்த இளைஞரோ குறிப்பிட்ட ஒரு வீட்டில் பார்த்த போலீசார் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.
காரணம், ஊரை விட்டுத் தப்பி வந்த அந்த இளைஞர், தன்னுடைய அடையாளம் மற்றும் தன்னைப் பற்றிய எல்லா விபரங்களையும் மாற்றிக்கொண்டு தன்னுடைய கள்ளக் காதலியோடு சந்தோசமாக உல்லாச வாழ்க்கை வாழ்ந்து வந்தது தெரிய வந்தது.
இதனையடுத்து, கடந்த 16 ஆம் தேதி அந்த இளைஞரை மத்தியப் பிரதேசத்தில் உள்ள இந்தூரில் இருந்து மீட்டு நேவி மும்பைக்கு கூட்டி வந்தனர். அதன் தொடர்ச்சியாகக் கணவனை கண்டுபிடித்துத் தரக்கோரிய அவரது மனைவியிடம், அவரது கணவனை ஒப்படைத்தனர்.
இதனிடையே, கள்ளக் காதலியுடன் உல்லாச வாழ்க்கை வாழ, தனக்கு கொரோனா நோய் இருப்பதாகவும், அதான் காரணமாக சாகப் போவதாகவும் கூறிவிட்டு கள்ளக் காதலியுடன் மாநிலம் விட்டு மாநிலம் சென்று உல்லாச வாழ்க்கை வாழ்ந்து வந்த சம்பவம், அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.