“பிரதமர் மோடியின் புகழ் 66 சதவீதத்திலிருந்து 24 சதவீதமாக சரிந்துள்ளதாக” இந்தியா டுடே நடத்திய கருத்து கணிப்பின் மூலம் தெரிய வந்திருக்கிறது.

இந்தியா டுடே சார்பில் “இந்தியாவில் மக்கள் மனம் கவர்ந்த முதலமைச்சர்கள், அரசியல் தலைவர்கள் யார்? யார்? என்றும், பிரதமரின் செல்வாக்கு” பற்றியம் கருத்துக் கணிப்பு ஒன்றை நடத்தியது.

இந்த கருத்துக் கணிப்புகள் அனைத்தும் இந்தியா முழுவதும் உள்ள அனைத்து மாநில முதலமைச்சர்களின் திறன் மற்றும் செயல்பாடு குறித்தும், பிரதமர் மோடி, காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி உள்ளிட்ட முக்கிய அரசியல் கட்சியின்  தலைவர்களின் செல்வாக்கு பற்றியும், அந்தந்த மாநில மக்களிடம் கருத்துக்  கணிப்புகள்  நடத்தப்பட்டது. 

இந்த கருத்துக் கணிப்பின் முடிவில், பல்வேறு தகவல்கள் தெரிய வந்திருக்கிறது.

அதன் படி, பிரதமர் மோடியின் புகழ் கடந்த ஆண்டு 66 சதவீதத்தில் இருந்து தற்போது 24 சதவீதம் அளவுக்கு சரிந்து உள்ளதாக” இந்தியா டுடே தெரிவித்து உள்ளது. 

அதற்கு முக்கிய காரணமாக, “விலைவாசி உயர்வையும், பணவீக்கத்தையும் கட்டுப்படுத்த தவறியது பிரதமர் மோடியின் மிகப் பெரிய தோல்வி என்று, அதிக அளவாக 29 சதவீதம் பேர் கருத்து தெரிவித்து உள்ளனர். 

அதற்கு அடுத்தபடியாக, “வேலையின்மை பிரதான பிரச்சனையாக உருவெடுத்து உள்ளதாக 23 சதவீதம் பேர்” கருத்து கூறியிருக்கிறார்கள்.

குறிப்பாக, “கொரோனாவால் உயிரிழந்தவர்கள் என்று மத்திய அரசு கூறிய எண்ணிக்கையை காட்டிலும், மிக அதிகமானோர் உயிரிழந்திருப்பதாக 71 சதவீதம் பேர்” கருத்து தெரிவித்து உள்ளனர்.

மிக முக்கிய பிரச்சனைாயக, “கொரோனா தொற்று மற்றும் அது தொடர்பாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் தங்களது அன்றாட வருவாய் முற்றிலுமாக குறைந்து
உள்ளதாக 69 சதவீதம் பேர்” கருத்து தெரிவித்துள்ளனர்.

அதே போல், “கடந்த ஆண்டு 8 சதவீதமாக இருந்த காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியின் செல்வாக்கு, தற்போது 10 சதவீதமாக உயர்ந்திருப்பதாகவும்” இந்தியா டுடே கருத்து கணிப்பில் தெரியவந்திருக்கிறது.

முன்னதாக, நேற்றைய தினம் வெளியிடப்பட்ட இந்தியா டுடேயின் கருத்து கணிப்பில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், மக்கள் மனம் கவர்ந்த முதலமைச்சர்களின் பட்டியலில், 42 சதவீத ஆதரவுடன் முதலிடம் பிடித்திருக்கிறார். 

இதன் மூலமாக, “தன்னுடைய தனிப்பட்ட திறன் மற்றும் செயல்பட்டால் பொது மக்களிடம் மு.க. ஸ்டாலின் நன்மதிப்பு பெற்று இருப்பது” தற்போது உறுதியாகி
இருக்கிறது.

அத்துடன், “ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் 38 சதவீத ஆதரவுடன் 2 ஆம் இடத்தையும், கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் 35 சதவீத ஆதரவுடன் 3 ஆம் இடத்தையும், மராட்டிய முதலமைச்சர் உத்தவ் தாக்கரே 4 ஆம் இடத்தையும்”  பிடித்துள்ளனர். 

“மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பேனர்ஜி 5 ஆம் இடமும்” பிடிதி்திருக்கிறார்.

இந்தியா டுடே வெளியிட்டுள்ள மிகச் சிறந்த முதல்வர்களின் பட்டியலில், “முதல் 5 இடத்தில் இந்திய அளவில் பாஜக கட்சியைச் சேர்ந்த எந்த முதல்வர்களோ,
பாஜகவுடன் கூட்டணியில் உள்ள எந்த மாநில முதல்வர்களோ அதில் இடம் பெறவில்லை” என்கிற அதிர்ச்சி தரும் தகவலும் இடம் பெற்றுள்ளது. 

குறிப்பாக, பாஜக ஆளும் மாநிலமான உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தின் செல்வாக்கு தற்போது முற்றிலுமாக சரிந்து, 7 ஆம் இடத்திற்கு அவர்
வந்திருக்கிறார்.