“அடிக்கடி சானிடைசர் அதிகம் பயன்படுத்தும் நபர்கள், எந்த அளவில்? எப்போதெல்லாம் பயன்படுத்த வேண்டும்?” என்று அறிவுரை வழங்கப்பட்டு உள்ளது.
நாட்டில் கொரோனா வைரஸின் தாக்கம் 2 வது அலையாக மிகத் தீவிரமாகப் பரவி வருகிறது. இதனால், யாரும் தேவையின்றி வெளியே செல்ல வேண்டாம் என்றும், அப்படி அவசிய தேவை இருப்பின் அவர்கள் சென்று வரும் போது அவர்கள் கட்டாயம் சானிடைசர் பயன்படுத்த வேண்டும்” என்று, மருத்துவர்களும், மத்திய - மாநில அரசுகளும் தொடர்ந்து அறிவுறுத்தி வருகின்றன.
அதே நேரத்தில், கொரோனா வைரஸ் தொற்றை ஒழிப்பதில், சானிடைசர்களுக்கும் முக்கிய பங்கு வகிக்கின்றன.
அத்துடன், நாட்டில் பெரும்பாலான மக்களுக்கு சானிடைசரை பயன்படுத்தி தடவிக்கொண்டால், கொரோனாவிலிருந்து தப்பித்துவிட்டோம் என்கிற நினைப்பும் பொது மக்கள் பலரிடம் இருக்கிறது.
இந்த நிலையில், “சானிடைசரை எப்படி? எப்போது? பயன்படுத்த வேண்டும்? சானிடைசரை பயன்படுத்தி என்ன செய்ய வேண்டும்? என்ன செய்யக்கூடாது?” உள்ளிட்ட பல அறிவுறுத்தல்களை உலக சுகாதார அமைப்பு வழங்கி உள்ளது.
அதன் படி, “சானிடைசர் எவ்வளவு அளவு கொண்டு தடவ வேண்டும்?” என்கிற கேள்விக்கு பதில் அளித்துள்ள உலக சுகாதார அமைப்பு, “சானிடைசர் உள்ளங்கையில் வைத்து கை முழுவதும் தேய்த்து தடவ வேண்டும் என்றும். சுமார் 20, 30 நொடிகள் தேய்க்க வேண்டும் என்றும், சானிடைசர் காய்ந்து போகும் வரை தேய்க்க வேண்டும்” என்றும், உலக சுகாதார அமைப்பு விளக்கம் அளித்து உள்ளது.
அதே போல், “ஆல்கஹால் அடங்கிய சானிடைசர் பாதுகாப்பானதா?” என்கிற கேள்விக்கு விளக்கம் அளித்துள்ள உலக சுகாதார அமைப்பு, “ஆல்கஹால் அடங்கிய சானிடைசர் எந்தவித பக்க விளைவுகளையும் ஏற்படுத்தாது” உலக சுகாதார அமைப்பு கூறி உள்ளது.
“இதில், குறைந்த அளவு ஆல்கஹாலே பயன்படுத்தப்படுகிறது என்றும், பெரும்பாலான பொருட்கள் எமொலியன்ட் அதிகம் கொண்டுள்ளது என்றும், இது சரும வறட்சியை தடுக்க உதவும்” என்றும், உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது.
மேலும், “எத்தனை தடவைக்கு ஒரு முறை சானிடைசர் தடவலாம்?” என்கிற கேள்விக்கும், “ஆல்கஹால் அடிப்படையிலான சானிடைசர் ஆண்டிபயாடிக் எதிர்ப்பை உருவாக்காது என்றும், பிற கிருமி நாசினிகள் மற்றும் நுண்ணுயிர் எதிர்ப்புகளைப் போல் இல்லாமல், நோய்க்கிருமிகள் தீங்கு விளைவிக்கும் கிருமிகள், ஆல்கஹால் சார்ந்த சானிடைசர்களுக்கு எதிர்ப்பை வளர்ப்பதாகத் தெரியவில்லை” என்றும், விளக்கம் அளித்து உள்ளது.
“இதனால், ஹேண்ட் சானிடிசர்களை அடிக்கடி பயன்படுத்துவது மிகுந்த பாதுகாப்பானது” என்றும், உலக சுகாதார அமைப்பு தெரிவித்து உள்ளது.
அதே போல், “பொது வெளியில் வைத்திருக்கும் சானிடைசர்களை பயன்படுத்துவதால் தொற்று வருமா?” என்கிற கேள்விக்கு பதில் அளித்துள்ள உலக சுகாதார அமைப்பு, “இல்லை” என்று, பதில் அளித்து உள்ளது.
அத்துடன், “நீங்கள் உங்கள் கைகளை சுத்தப்படுத்திய பிறகு, பாட்டிலில் இருந்திருக்கக்கூடிய எந்த கிருமிகளையும் அழிக்கிறீர்கள் என்றும், எல்லோரும் ஒரு பொது இடத்தில் சானிடைசரைப் பயன்படுத்தினால், அங்குள்ள பொருட்களில் கிருமிகளின் ஆபத்து குறைவாக இருக்கும் என்றும், அனைவரையும் பாதுகாப்பாக வைத்திருக்கும் என்றும், அந்த இடமும் பாதுகாப்பானதாக இருக்கும்” என்றும், உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது.