ஃபேஸ்புக்கில் காதல்.. காதலனை தேடிச் சென்ற காதலி பாலியல் பலாத்காரம்! நகை பணம் பறிப்பு..
By Aruvi | Galatta | Apr 22, 2021, 05:23 pm
ஃபேஸ்புக்கில் மலர்ந்த காதலால், காதலனை தேடிச் சென்ற காதலி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த இளம் பெண்தான், ஃபேஸ்புக் காதலனை தேடிச் சென்று ஏமார்ந்து போய் இருக்கிறார்.
ஒரு பெண் ஃபேஸ்புக்கில் சந்தித்த காதலனிடம் நகை மற்றும் கற்பை பறிகொடுத்ததால், அந்த காதலன் கைது செய்யப்பட்டார்
ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள கோடா மாவட்டத்தைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர், எந்த நேரமும் சமூக வலைத்தளங்களிலேயே மூழ்கி கிடந்து உள்ளார்.
குறிப்பாக, அந்த பெண் அதிக நேரம் ஃபேஸ்புக்கில் தனது நேரத்தைப் போக்கி வந்தார். அப்போது, ஃபேஸ்புக் மூலமாக பாட்னாவைச் சேர்ந்த அபிஷேக் தாக்கூர் என்ற இளைஞர், அந்த பெண்ணிற்கு அறிமுகம் ஆகி உள்ளார்.
அதன் தொடர்ச்சியாக, அவர்கள் இருவரும் ஃபேஸ்புக்கிலேயே அதிக அன்பை மாறி மாறி பொழிந்துகொண்டனர். இருவரும் நண்பர்களாகப் பழகி வந்த நிலையில், போக போக அவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் காதலிக்க ஆரம்பித்து உள்ளனர். இதனையடுத்து, அவர்கள் இருவரம் ஃபேஸ்புக்கில்லேயே, மணி கணக்கில் பேசிக்கொண்டு, தங்களது காதலை வளர்த்து வந்தனர்.
இப்படியான நிலையில், அந்த இளம் பெண்ணுக்கு மும்பையில் வேலை கிடைத்து, அங்குள்ள ஒரு குறிப்பிட்ட நிறுவனத்தில் பணிக்கு நேர்ந்தார். அங்கு வேலைக்கு சேர்ந்தது முதலா், தனது சம்பாத்தியத்திலேயே நகைகள் மற்றும் இருசக்கர வாகனம் என்று ஒவ்வொன்றாக வாங்கி, அது பற்றி தனது ஃபேஸ்புக்கில் பதிவிட்டு வந்தார்.
இவற்றையெல்லாம் கவனித்துக்கொண்டு வந்த ஃபேஸ்புக் மூலமாக அறிமுகமான பாட்னாவைச் சேர்ந்த அபிஷேக் தாக்கூர் என்ற காதலன், “நான் உன்னை உடனே கல்யாணம் செய்துகொள்கிறேன்” என்று நம்பிக்கை அளித்துள்ளான்.
இதனை நம்பிய அந்த இளம் பெண், காதலன் சொல் படி கேட்டு நடந்து உள்ளார். அதன்படி, அந்த காதலன், மும்பையில் இருந்து தனது சொந்த ஊரான பாட்னாவிற்கு அந்த காதலியை நேரில் வரவழைத்து இருக்கிறான்.
அதனை நம்பி அந்த பெண்ணும் சென்றிருக்கிறார். அப்போது, தனது உறவினர்கள் சிலரிடம் அந்த பெண்ணை அவன் அறிமுகம் செய்து வைத்திருக்கிறான். அதன் தொடர்ச்சியாக, “நாம் இங்கேயே திருமணம் செய்துகொண்டு, இங்கேயே வாழ்க்கை நடத்தலாம்” என்றும், அவன் ஆசை வார்த்தைகளைக் கூறியிருக்கிறான்.
இதனை உண்மை என்று நம்பிய அந்த பெண், காதலனை நம்பி தனது வேலைகளை விட்டுவிட்டு, தான் சேமித்து வைத்திருந்த பணம் மற்றும் நகைகளுடன், பாட்னாவிற்கு மீண்டும் வந்திருக்கிறார். அப்போது, காதலன் அபிஷேக் தாக்கூர், அந்த இளம் பெண்ணை தனது பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் அழைத்துச் செல்லாமல், அங்குள்ள ஒரு ஹோட்டலில் அந்த பெண்ணை தங்க வைத்திருக்கிறார்.
அதன் தொடர்ச்சியாக, அந்த இளம் பெண்ணை அங்கு வைத்து பல முறை பாலியல் பலாத்காரம் செய்து விட்டு, அந்த பெண் கொண்டு வந்திருந்த 1.50 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்க நகைகள் மற்றும் அவர் கொண்டு வந்த பணத்தை எடுத்துக்கொண்டு, அந்த காதலன் அங்கிருந்து தலை மறைவாகி உள்ளார்.
இதனையடுத்து, தனது பணம், நகைகள் மற்றும் காதலனை காணாததால் கடும் அதிர்ச்சியடைந்த அந்த பெண், தான் ஏமாற்றப்பட்டதை நன்கு உணர்ந்திருக்கிறார். இதனையடுத்து, காதலனை தொடர்பு கொள்ள முயன்றபோது, அவரது செல்போன் எண் அனைத்து வைக்கப்பட்டு இருந்திருக்கிறது.
இதனால், தான் ஏமாற்றப்பட்டதை நன்கு புரிந்துகொண்ட அந்த இளம் பெண், அங்குள்ள காவல் நிலையத்தில் தனது ஃபேஸ்புக் காதலன் மீது புகார் அளித்திருக்கிறார். இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், அந்த இளம் பெண்ணை ஏமாற்றிய காதலன் அபிஷேக்கை, தேடி கண்டுபிடித்து அதிரடியாகக் கைது செய்தனர்.
அத்துடன், கைது செய்யப்பட்ட அந்த நபரிடம் இருந்த நகைகளை போலீசார் மீட்டனர். இது தொடர்பாக அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இதனிடையே, சமூக வலைத்தளங்களில் அறிமுகம் ஆகும் நபர்களிடம் அனைவரும் உஷாராக இருக்க வேண்டும் என்று, போலீசார் பல்வேறு விழிப்புணர்வை ஏற்படுத்தி வந்தாலும், அவ்வப்போது முகம் தெரியாத ஃபேஸ்புக் நண்பர்களை நம்பி, வாழ்க்கை இழக்கும் வழக்குகள் நாளுக்கு நான் தொடர்ந்து உயர்ந்துகொண்டே வருவது குறிப்பிடத்தக்கது.