“கிரிகெட் உலக விவாகரத்து கதைகள்!” ஷிகர் தவான் முதல் தினேஷ் கார்த்திக் வரை..
இந்திய கிரிக்கெட் உலகில் மிகவும் பிரபலமாக அறியப்பட்ட ஷிகர் தவான் முதல், தினேஷ் கார்த்திக் வரை சொந்த வாழ்க்கையில் விவாகரத்தான வீரர்களின் கதைகளைப் பற்றி தற்போது பார்க்கலாம்.
பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் ஷிகார் தவான் விவாகரத்து வழக்கு தான், ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகின் தற்போதைய ஹாட் டாப்பிக்காக பேசப்பட்டு வருகிறது.
இந்திய அணியின் கிரிக்கெட் நட்சத்திரங்களுள் ஒருவராகத் திகழும் 35 வயதான ஷிகர் தவான், தனது மனைவி ஆயிஷா முகர்ஜியை தற்போது விவாகரத்து செய்து உள்ளார்.
இதனால், அவர்களது கடந்த 10 ஆண்டுகளாகத் திருமண வாழ்க்கை தற்போது முறிந்துபோய் முடிவுக்கு வந்துள்ளது.
கிரிக்கெட் வீரர் ஷிகார் தவான் விவாகரத்து செய்து 2 குழந்தைகளுக்குத் தாயாக இருந்த ஆயிஷா முகர்ஜியை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
முக்கியமாக, ஷிகார் தவானை விட ஆயிஷா முகர்ஜி 10 வயது மூத்தவர் என்றே கூறப்படுகிறது.
ஷிகார் தவான் ஆயிஷா உடனான காதல் மிகவும் சுவாரஸ்யமாக அரங்கேறிய ஒரு நிகழ்வாகும்.
அதாவது, ஆயிஷா முகர்ஜி ஏற்கனவே திருமணமாகி விவகாரத்து பெற்று, தனியாக வாழ்ந்து வந்தார். அப்போது, ஆயிஷாவின் மனதிற்குள் ஷிகார் தவான், ஃபேஸ்புக் மூலமாக உள்ளே நுழைந்திருக்கிறார்.
அத்துடன், ஆயிஷாவின் குடும்பம் ஆஸ்திரேலியாவில் முழுவதுமாக குடியேறிய நிலையில், அவரும் அங்கேயே பிறந்து வளர்ந்தார். இதனால், ஆயிஷா ஆஸ்திரேலியாவை சேர்ந்த தொழிலதிபரைக் காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில், 2 பெண் குழந்தைகளுக்கும் தாய் ஆனார். இதனையடுத்து, அவர்களுக்குக்கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் விவாகரத்து பெற்றுப் பிரிந்து போனார்கள்.
அதன் பிறகு, தனியாக வசித்து வந்த ஆயிஷா, ஷிகார் தவானுக்கு ஃபேஸ்புக் மூலமாக அறிமுகம் ஆகி உள்ளார். இதைத் தொடர்ந்து ஃபேஸ்புக்கில் இருவரும் பழகத் தொடங்கிய நிலையில், இவர்களது நட்பு பிறகு காதலாக மாறிய நிலையில், இருவரும் திருமணமும் செய்துகொண்டனர்.
பின்னர், கடந்த 2012 ஆம் ஆண்டு ஆயிஷாவை திருமணம் செய்து கொண்டார் தவான்.
இந்த நிலையில் தான், கடந்த 10 ஆண்டுகளாக இணைந்து வாழ்ந்த இந்த நட்சத்திர தம்பதியின் வாழ்க்கை, தற்போது விவகாரத்து பெற்று முடிவுக்கு வந்துள்ளது.
இந்த தகவலை, ஆயிஷா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வருத்தமாகப் பதிவிட்டுள்ளார்.
அதே போல், இந்திய கிரிக்கெட் உலகில் மிகவும் புகழ்பெற்றுத் திகழும் தமிழ்நாட்டைச் சேர்ந்த தினேஷ் கார்த்திக், நிகித வஞ்சரா என்ற பெண்iண முதல் திருமணம் செய்துகொண்டார். இதனையடுத்து, அவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்ட, அவர்கள் விவாகரத்து பெற்று பிரிந்து சென்றனர். இதனையடுத்து, தினேஷ் கார்த்திக், ஸ்குவாஷ் சாம்பியன் தீபிகா பல்லிக்கலை 2 வதாக திருமணம் செய்துகொண்டார்.
அதே போ்ல, ஒரு காலத்தில் கிரிக்கெட் உலகில் கொடிக்கட்டி பறந்த விநோத் காம்ப்ளியை கிரிக்கெட் ரசிகர்கள் அவ்வளவு சீக்கிரத்தில் மறந்துவிட மாட்டார்கள். அப்படியான வினோத் காம்ப்ளி, கடந்த 1998 ஆம் ஆண்டு தனது சிறுபிராய தோழி நொயெல்லா லூயிஸை திருமணம் செய்து கொண்டார். ஆனால், அடுத்த சில ஆண்டுகளில் அவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, அவரை பிரிந்து விவாகரத்து செய்து விட்டு, முன்னாள் மாடல் அழகி ஆண்ட்ரிய ஹீவிட்டை 2 வதாக அவர் திருமணம் செய்துகொண்டார்.
குறிப்பாக, முன்னாள் இந்திய கேப்டன் முகமது அசாருதீன், தனது முதல் மனைவி நவ்ரீனைப் பிரிந்து விவாகரத்து பெற்றார். அதன் பிறகு, அவர் சங்கீதா பிஜ்லானியை 2 வதாக திருமணம் செய்துகொண்டார்.
இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீநாத், தன் முதல் மனைவி ஜ்யோத்சனாவை விவாகரத்து செய்தார். அதன் பிறகு பத்திரிகையாளர் மாதவி பட்ரவலி என்பவரை அவர் 2 வதாக திருமணம் செய்துகொண்டார்.
இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் யோக் ராஜ் சிங், தன் முதல் மனைவி ஷப்மனை திருமணம் செய்து, சில ஆண்டுகளில் விவாகரத்து பெற்றுப் பிரிந்தார். அதன் தொடர்ச்சியாக, சத்வீர் கவுர் என்ற பெண்ணை, அவர் 2 வதாக திருமணம் செய்தார். இதில், முதல் மனைவிக்குப் பிறந்தவர் தான் இந்திய அணியின் முன்னாள் வீரர் யுவராஜ் சிங் என்பது குறிப்பிடத்தக்கது.