சொத்துவரியுடன் சேர்த்து குப்பை வரி- சென்னை மாநகராட்சி

சொத்துவரியுடன் சேர்த்து குப்பை வரி- சென்னை மாநகராட்சி - Daily news

சென்னை மாநகராட்சி புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு இருக்கிறது. வரும் ஜனவரி முதல் சொத்துவரியுடன் குப்பைக்கான கட்டணத்தையும் செலுத்த வேண்டும். சென்னையில் சேரும் 5, 000 மெட்ரிக் டன்னுக்கு மேலான குப்பைகள் பெறப்பட்டு மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பை என தரம் பிரிக்கப்பட்டு பெருங்குடி மற்றும் கொடுங்கையூர் பகுதிகளில் தான் கொட்டப்பட்டு வருகிறது. 


திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தில் சில மாற்றங்களை கொண்டு வரப்பட்டு இருக்கிறது. மாநகராட்சிக்குட்பட்ட 7  மண்டலங்களிலும் தூய்மைப் பணிகளை மேற்கொள்ள எட்டு ஆண்டு காலத்திற்கு M/s Urbaser SA  and Sumeet Facilities limited என்ற நிறுவனத்திற்கு பணி ஆணை வழங்கப்பட்டு இருக்கிறது.

இதன் மூலம் , வீடுகளுக்கு 10 ரூபாய் முதல் 100 ரூபாய் வரையும், திருமண மண்டபங்களுக்கு 1000 ரூபாய் முதல் 10  ஆயிரம் ரூபாய் வரையும், அலுவலகங்களுக்கு 300 ரூபாய் முதல் 3 ஆயிரம் ரூபாய் வரையும், உணவு கூடங்களுக்கு 300 ரூபாய் முதல் 5 ஆயிரம் ரூபாய் வரையும், மருத்துவமனை, விழாக்கள், கடைகளுக்கென தனித்தனியே ஒரு கட்டணம் வசூலிக்கப்பட்டு என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. புத்தாண்டு முதல் சொத்து வரியுடன் இதை செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. 

Leave a Comment