“சிறையில் ஆபாசப் படங்களைக் காட்டி அதிகாரிகள் என்னை பல முறை பாலியல் பலாத்காரம் செய்தனர்”  பெண் அரசியல் ஆர்வலர் பகிரங்க குற்றச்சாட்டு..

“சிறையில் ஆபாசப் படங்களைக் காட்டி அதிகாரிகள் என்னை பல முறை பாலியல் பலாத்காரம் செய்தனர்”  பெண் அரசியல் ஆர்வலர் பகிரங்க குற்றச்சாட்டு.. - Daily news

“சிறையில் ஆபாசப் படங்கள் பார்க்க வைக்கப்பட்டு, கட்டாயப்படுத்திப் பல அதிகாரிகள் பல முறை என்னை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்” என்று, பெண் அரசியல் ஆர்வலர் லூஜெய்ன் அல் ஹத்லூல், பகிரங்கமாகக் குற்றம்சாட்டி உள்ளார்.

சவூதி அரேபிய நாட்டின் பெண் அரசியல் ஆர்வலர் லூஜெய்ன் அல் ஹத்லூல் தான், இப்படி ஒரு கொடூரமான குற்றச்சாட்டை, அந்நாட்டின் உயர் அதிகாரிகள் மீது சுமத்தி உள்ளார்.

சவூதி அரேபிய நாட்டில், பெண்களுக்கு எதிரான பல்வேறு பிரச்சனைகளுக்காகத் தொடர்ந்து குரல் கொடுத்து வந்தார் அந்நாட்டின் பெண் அரசியல் ஆர்வலரான லூஜெய்ன் அல் ஹத்லூல்.

சவுதி அரேபியாவின் ஆட்சியைப் பெண் அரசியல் ஆர்வலரான லூஜெய்ன் அல் ஹத்லூல், பல முறை தொடர்ச்சியாக விமர்சித்து வந்தார். 

“ஆண் உறவினர் இல்லாமல் பெண்கள் ஏன் சவுதி அரேபியாவில் தனியாகப் பயணம் செய்யக் கூடாது?” என்றும் அவர் கேள்வி எழுப்பு பெண்களின் சுதந்திரத்திற்காகப் போராடினார். 

குறிப்பாக, சவுதி அரேபியாவில் பெண்கள் வாகனம் ஓட்டுவதற்கு உரிமை வேண்டும் என்ற போராட்டத்தை முன்னெடுப்பதில் அளிப்பதில் லூஜெய்ன் அல் ஹத்லூல் முக்கிய பங்கு வகித்தார். 

மிக முக்கியமாக, லூஜைன் அல் ஹத்லால் கடந்த 2014 ஆம் ஆண்டு சவுதி அரேபியாவின் பெண்களுக்கு எதிரான சட்டங்களுக்கு எதிராக முதலில் முதல் ஆளாக குரல் கொடுத்தார். அதன் தொடர்ச்சியாக, அவரே காரை ஓட்டி எடுத்த வீடியோவை நேரடியாக ஒளிபரப்பு செய்தார். 

இதனையடுத்து, அவர் கடந்த 2018 ஆம் அண்டு அதிரடியாகக் கைது செய்யப்பட்டார். பின்னர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட லூஜெய்னுக்கு அந்நாட்டின் நீதிமன்றம் 6 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து உத்தரவிட்டது. 
  
இதனால், அவர் சிறையில் அடைக்கப்பட்டார். ஒரு பெண் போராளி சிறையில் அடைக்கப்பட்டால், எப்படியெல்லாம் அடக்குமுறைக்கு ஆளாக்கப்படுவார் என்பதற்கு, தனக்கு நேர்ந்த கொடூரங்களே சாட்சி என்று, தற்போது அவர் ஒப்புதல் வாக்குமூலம் அளித்து உள்ளார்.

கிட்டத்தட்ட 1001 நாட்களுக்குப் பிறகு சிறையில் இருந்து சவூதி அரேபிய அரசியல் ஆர்வலர் லூஜெய்ன் அல் ஹத்லூல், நேற்றைய முன் தினம் தான் அந்நாட்டின் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார்.

இந்நிலையில், சிறையில் இருந்து வெளியே வந்த அரசியல் ஆர்வலர் லூஜெய்ன் அல் ஹத்லூல், சிறையில் இருந்த காலத்தில் விசாரணை நடத்தும் அதிகாரிகளால் தனக்கு நேர்த மிக கொடூரமான பாலியல் பலாத்காரங்களைப் பற்றி ஒப்புதல் வாக்கு மூலம் அளித்து உள்ளார்.

அதில், “கிட்டத்தட்ட 3 ஆண்டுகளாகச் சிறையில் இருந்த நான் அங்குள்ள அதிகாரிகளால் தொடர்ந்து பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டேன்” என்று, வெளிப்படையாகவே குற்றம்சாட்டி உள்ளார். 

“இங்குள்ள அதிகாரிகள், பலரும் என்னை தொடர்ச்சியாக பாலியல் துஷ்பிரயோகம் செய்தனர்” என்று, பகிரங்கமாகவே குற்றம்சாட்டி உள்ளார்.  

குறிப்பாக, “விசாரணை என்ற பெயரில், அதிகாரிகளுக்கு முத்தமிட என்னைக் கட்டாயப்படுத்தினார்கள் என்றும், இதனால் வேறு வழியின்றி அவர்களின் 
கொடுமைகள் தாங்காமல் நானும் அதிகாரிகளை முத்தமிட்டேன்” என்றும், அவர் ஒப்புக்கொண்டு உள்ளார். 

இவற்றுடன், “சிறையில் இருந்த பலருடன் உடல் ரீதியான உறவு கொள்ளவும் நான் கட்டாயப்படுத்தப்பட்டதாகவும்” அவர் பகிரங்க குற்றச்சாட்டுகளை முன் வைத்து உள்ளார்.

மிக முக்கியமாக, “விசாரணையின் போது, ஆபாசப் படங்களைப் பார்க்கும் படி என்னை கட்டாயப்படுத்தினார்கள் என்றும், அதன் தொடர்ச்சியாக நான் பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாக்கப்பட்டேன் என்றும், சிறையில் இருந்த காலத்தில் அவர்கள் என் மீது பல முறை தாக்குதல் நடத்தியும், மின்சார அதிர்ச்சியும் எனக்கு கொடுத்து, என்னை மிக கடுமையாக கொடுமைப்படுத்தினர்” என்றும்” குற்றம்சாட்டி உள்ளார்.

இது தொடர்பாக அந்நாட்டின் மனித உரிமை வழக்கறிஞர் பரோனஸ் ஹெலினா கென்னடி, எழுதி உள்ள ஒரு கடிதத்தில், “சவுதி அரேபியாவின் சிறையில் லூஜெய்ன் அல் ஹத்லூல், விசாரணையின் போது, பல முறை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார் என்பது தற்போது தெரிய வந்துள்ளது” என்று, குறிப்பிட்டு 
உள்ளார்.

இந்த குற்றச்சாட்டுத் தொடர்பான லூஜெய்ன் அல் ஹத்லூல் தற்போது வெளியிட்டிருக்கும் வீடியோ வெளியாகி, அந்நாட்டு மக்களிடையே கடும் அதிர்ச்சியையும், பீதியையும் ஏற்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment