நிர்பயா போல் 12 வயது சிறுமி பலாத்காரம் செய்து தாக்கப்பட்ட வழக்கு.. போலீசார் ஒத்துழைக்க மறுப்பு! மகளிர் ஆணையம் குற்றச்சாட்டு..
By Aruvi | Galatta | Aug 13, 2020, 11:08 am
டெல்லி மீண்டும் நிர்பயா போல் 12 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்து தாக்கப்பட்ட வழக்கில், போலீசார் ஒத்துழைக்க மறுப்பாக. மகளிர் ஆணையம்
குற்றச்சாட்டி உள்ளது.
இந்தியாவின் தலைநகர் டெல்லியில் கடந்த 2012 ஆம் ஆண்டு நாட்டையே நடு நடுங்க வைத்த நிர்பயா பாலியல் பலாத்கார வழக்கை யாரும் அவ்வளவு
எளிதாக மறந்துவிட முடியாது. அந்த அளவுக்கு, நிர்பயா வழக்கைப் பற்றித் தெரிந்தவர்களுக்கு, அதில் உள்ள மிக மோசமான கற்பனைக்கும் எட்டாத மிகவும்
பயங்கரமான.. நினைத்தாலே ரணத்தை உண்டாக்கும் மிகக் கொடிய சம்பவம் நினைவுக்கு வரும்.
அதே போல் தான், டெல்லியில் கடந்த ஆகஸ்ட் 6 ஆம் தேதி அன்று சிலரால், வெறும் 12 வயது சிறுமியும் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, மிகக் கடுமையாகப் பிறப்பு உறுப்பில் தாக்கப்பட்டு நினைவை இழந்துள்ளார். இந்த கொரோனா ஊரடங்கு காலத்தில் தான், இப்படிப்பட்ட இந்த கொடூர சம்பவமும் நிகழ்ந்துள்ளது.
மேற்கு டெல்லியில் உள்ள பாசிம் விஹாரின் பீரா காரி பகுதியில் கடந்த 6 ஆம் தேதி அன்று, தனது பெற்றோர் வேலைக்குச் சென்று விட்ட நிலையில், 12
வயது சிறுமி ஒருவர், விட்டில் தனியாக இருந்து உள்ளார். அப்போது, பல கிரிமினல் வழக்குகளில் சிறைக்குச் சென்று வந்த ஒரு நபர், நிதானம் இல்லாத போதையில் அங்கு வந்துள்ளார். அப்போது, சிறுமி மட்டும் வீட்டில் தனியாக இருப்பதைக் கவனித்த அந்த நபர், கடும் போதையில் சிறுமியை மிக கடுமையாகத் தாக்கி பலவந்தமாக பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
மிருகத் தனமாக வெறித் தீர சிறுமியைப் பலாத்காரம் செய்து விட்டு, அந்த தடயத்தை அழிக்கும் விதமாக, அந்த வீட்டில் இருந்த கத்தரிக்கோலால், அந்த சிறுமியின் பிறப்பு உறுப்பில் கடுமையாகத் தாக்கி, அந்த தடயத்தை அழிக்கும் விதமாகக் குத்தி கிழித்துள்ளார். அதிலும், அவன் வெறி அடங்காத நிலையில், அந்த சிறுமியின் உடல் பகுதியிலும், சில உறுப்புகளிலும் அந்த கத்தரிக்கோலால் வெறித் தீர குத்தி கிழித்துள்ளான். இந்த தாக்குதலில், அந்த சிறுமியின் தலை மற்றும் குடல் பகுதியிலும் பலத்த காயம் ஏற்பட்டது.
இதில், ரத்த வெள்ளத்தில் அந்த சிறுமி மயங்கி விடவே, நினைவை இழக்கும் வரை அந்த சிறுமி அந்த வெறிபிடித்த காமுகனிடம் போராடி மயங்கி உள்ளார். அதன் பிறகு, அந்த காடூகன் அங்கிருந்து தப்பி ஓடி உள்ளான். இதனையடுத்து, அக்கம் பக்கத்தினர் அந்த சிறுமியை அடையாளம் கண்டு, அங்குள்ள போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இது குறித்து விரைந்து வந்த போலீசார், சுய நினைவு கூட இல்லாமல் மயங்கிக் கிடந்த சிறுமியை மீட்டு அவசர அவசரமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமித்தனர். அங்கு, உயிருக்கு ஆபத்தான நிலையில், சிறுமிக்கு தீவிரமாகச் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
நிர்பயா பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுத் தாக்கப்பட்டது போலவே, 12 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு அதே போல் தாக்குதலுக்கு ஆளாகி உள்ள தகவல், டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு தெரிவிக்கப்பட்ட நிலையில், கடும் அதிர்ச்சியடைந்த கெஜ்ரிவால், உடனடியாக பாதிக்கப்பட்ட சிறுமியை, எய்ம்ஸ் மருத்துவமனைக்கு நேரில் சென்று பார்த்தார். அத்துடன், சிறுமிக்குத் தேவையான அனைத்து விதமான மருத்துவ உதவிகளையும் செய்ய உத்தரவிட்டார்.
இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், அந்த பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்து குற்றவாளியைத் தேடி வந்தனர். அதன்படி, சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து, கொடூரமாகத் தாக்கிய நபர் ஒருவரை போலீசார் கைது செய்து, தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வந்தனர். விசாரணைக்குப் பிறகு, அவனை சிறையில் அடைத்ததாகவும் கூறப்பட்டது.
இந்நிலையில், இந்த கொடூர சம்பவம் தொடர்பாகப் பேசிய டெல்லி மகளிர் ஆணையத் தலைவர் ஸ்வாதி மாலிவால், “டெல்லி காவல் துறை இந்த வழக்குத்
தொடர்பான விசாரணையில் தங்களுடன் ஒத்துழைக்க மறுக்கிறது” என்று பகிரங்கமாகக் குற்றம்சாட்டினார்.
மேலும், “மருத்துவர்கள் அளித்துள்ள அறிக்கையில் சிறுமி கொடூரமாகத் தாக்கப்பட்டது தெரிகிறது என்றும், அவரது பிறப்புறுப்புகள் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது” தெரிய வந்துள்ளது என்றும், குறிப்பிட்டுள்ளார்.
“ஆனால், போலீசார் இந்த வழக்கைக் கொலை முயற்சி சம்பவமாகச் சித்தரிக்க முயல்கின்றனர்” என்றும், குற்றம் சாட்டினார்.
“பாதிக்கப்பட்ட சிறுமியின் உடல் நிலை நாளுக்கு நாள் மிகவும் மோசமான நிலைக்குச் சென்று வருகிறது என்றும், இதனால் சிறுமிக்கு உடனே நியாயம் கிடைக்க வேண்டும்” என்றும், அவர் வலியுறுத்தினார்.
“சிறுமியை இந்த நிலைக்கு ஆளாக்கிய குற்றவாளிகளுக்கு வரும் 6 மாதத்திற்குள் மரண தண்டனை விதிக்கப்பட வேண்டும்” என்றும், அவர் கோரிக்கை விடுத்தார்.
குறிப்பாக, “சிறுமிக்கு நீதியைப் பெற்றுத் தருவதே போலீசாரின் கடமை” என்றும், டெல்லி மகளிர் ஆணையத் தலைவர் ஸ்வாதி மாலிவால் நினைவூட்டும் விதமாகத் தெரிவித்தார்.