மதுபானம் கொடுத்து உலக சுகாதார நிறுவன ஊழியர்களே சுமார் 50 பெண்களை பாலியல் பலாத்காரம் செய்துள்ள சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ள நிலையில், இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டும் என்று உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளது.
காங்கோ நாட்டில் தான், இப்படி ஒரு அதிர்ச்சிகரமான சம்பவம் அரங்கேறி உள்ளது.
காங்கோ ஜனநாயகக் குடியரசில் எபோலா வெடிப்பைச் சமாளிப்பதற்காக உலக சுகாதார நிறுவன ஊழியர்கள் நியமிக்கப்பட்டனர். அப்போது, அந்நாட்டைச் சேர்ந்த சுமார் 50 க்கும் மேற்பட்ட பெண்களை மருத்துவமனையில் வைத்தே, அவர்களுக்கு மதுபானம் ஊற்றிக்கொடுத்து, அவர்கள் போதைக்குச் சென்றதும், அவர்களை பாலியல் பலாத்காரம் செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. இப்படியாக, அந்நாட்டில் மட்டும் உலக சுகாதார நிறுவன ஊழியர்களால் சுமார் 50 க்கும் மேற்பட்ட பெண்கள் பாலியல் பலாத்காரத்திற்கு ஆளானார்கள்.
இந்த பாலியல் பலாத்கார சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்கள் 2 பேர் கர்ப்பமாகி உள்ளனர். கடந்த 2018 ஆம் ஆண்டு மார்ச் முதல் இந்தாண்டு வரை இப்படியான பாலியல் பலாத்காரங்கள் மற்றும் பலாத்கார துன்புறுத்தல் சம்பவங்கள் அந்நாட்டில் நடந்துள்ளதாகக் குற்றஞ்சாட்டு எழுந்துள்ளது.
இது தொடர்பான குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக கடந்த ஓராண்டு காலமாக அந்நாட்டில் விசாரணை நடைபெற்று வந்த நிலையில், தற்போது இந்த பிரச்சனை பெரிய அளவில் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதனால், இந்த பாலியல் குற்றச்சாட்டுத் தொடர்பாக உறுதியான விசாரணை நடைபெறும் என்று, உலக சுகாதார நிறுவனம் தற்போது உறுதிப்படத் தெரிவித்து உள்ளது. ஆனால், இந்த பாலியல் பலாத்கார குற்றச்சாட்டு உலக நாடுகளில் இடையே கடும்
அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக, உலக சுகாதார நிறுவன ஊழியர்கள் மீது இருந்த மரியாதை மற்றும் நம்பிக்கைகள் அனைத்தும் தற்போது இல்லை என்றும், இதனால் அவர்கள் மீது தற்போது அவப்பெயர் ஏற்பட்டுள்ளது. இதனால், உலக சுகாதார நிறுவனம் தற்போது கடும் நெருக்கடியில் சிக்கி உள்ளது.
அதே போல், பிரான்ஸ் நாட்டில் இளம் பெண் ஒருவர், பிரான்ஸ் நாட்டுக்கான தூதர் மீது பரபரப்பு பாலியல் குற்றச்சாட்டை சுமத்தி உள்ளார்.
பிரான்ஸ் நாட்டுக்கான வெளிநாட்டுத் தூதர் 44 வயதான ஒரு அதிகாரிக்கும், பிரான்ஸ் நாட்டை சேர்ந்த இளம் பெண் ஒருவருக்கும் இணையதளம் மூலம் பழக்கம் ஏற்பட்டு உள்ளது. இதனையடுத்து, அந்த தூதர் குறிப்பிட்ட அந்த இளம் பெண்ணை நேரில் சந்தித்து நெருங்கிப் பழகி வந்துள்ளனர். இந்த நெருக்கமான பழக்கம், ஒரு கட்டத்தில் இருவரும் உடலுறவு வைத்துக் கொள்ளும் அளவுக்கு வளர்ந்தது. அதன்படி, இருவரும் முழு சம்மதத்துடன் உறவும் வைத்துக்கொண்டனர்.
இதனையடுத்து, இந்த சம்பவம் நடத்த அடுத்த 3 வது நாள் அந்த இளம் பெண், அந்நாட்டின் காவல் நிலையத்தில் ஒரு பரபரப்பு புகார் ஒன்றை அளித்தார். அந்த புகாரில், “எங்கள் இருவரும் முழு சம்மதத்துடன் தான் உறவு வைத்துக்கொண்டோம். ஆனால், அந்த தூதர் பாதுகாப்பற்ற முறையில் என்னுடன் உறவு வைத்துக் கொண்டார்” என்று, குற்றம்சாட்டி உள்ளார். ஆனால், பாதுகாப்பு முறைகளை மேற்கொள்வேன் என்று அவர் உறுதி அளித்தும், அவர் திருட்டுத் தனத்தில் ஈடுபட்டு தன்னுடன் உறவு வைத்துக்கொண்டார்” என்று, அந்த இளம் பெண் குற்றம்சாட்டி உள்ளார்.
இந்த சம்பவம், அந்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. குற்றம் சாட்டப்பட்ட தூதர் மத்திய கிழக்கு நாடுகளைச் சேர்ந்தவர் என்றும் கூறப்படுகிறது.
அதே நேரத்தில், பிரான்ஸ் நாட்டு சட்டத்தின் படி ஒரு பெண்ணை கட்டாயப்படுத்துதல், மிரட்டிப் பணிய வைத்தல், எதிர்பாராத வகையில் உறவு வைத்தல் உள்ளிட்டவை பலாத்காரம் என்றே கருதப்படுகிறது. இதனால், குற்றச்சாட்டுக்கு ஆளான தூதருக்கு பெரும் சிக்கல் ஏற்பட்டு உள்ளது. இந்த சம்பவம், அந்நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.