சாதாரண விவசாயக் குடும்பத்தில் பிறந்து வேளாண்த்துறை அமைச்சராக உயர்ந்த  ஆர்.துரைக்கண்ணு .கொரோனா தொற்றால் நுரையீரல் கடுமையாக பாதிக்கப்பட்டு,  அக்டோபர் 13 தேதி முதல்  தீவிர சிகிச்சை பெற்று வந்த வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு , சிகிச்சை பலனின்றி நேற்று (அக்டோபர் 31) இரவு 11.10 அளவில் சென்னை காவேரி மருத்துவமனையில் காலமானார். 

72 வயதாக அமைச்சர் துரைக்கண்ணு அவர்கள் , 90 சதவீதம் வரை நுரையீரல் பாதிப்புக்குள்ளாகி மேலும் உடல்நிலை மோசமடையவே, முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையிலிருந்து சென்னைக்கு கொண்டுவரப்பட்டார். அப்போது அவருக்கு பல இணை நோய்கள் இருந்ததும் தெரியவந்தது. அதிகபட்ச பாதுகாப்பு கருவிகள் மூலமே சுவாசித்து வந்தவருக்கு சிகிச்சை பலனின்றி போனது. 

தஞ்சாவூர் மாவட்டத்தில் ராஜ்கிரியில் பிறந்தார் துரைக்கண்ணு. தஞ்சாவூர் மன்னர் சரபோஜி கல்லூரியில் பி.ஏ வரை படித்துவிடு, பின் கூட்டுறவு சொசைட்டியில் சில ஆண்டுகள் பணி புரிந்துள்ளார். 

1972 அதிமுக தொடங்கப்பட்ட காலத்திலிருந்தே கட்சி பணியில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டு மாணவரணி, இளைஞரின் போன்ற பொறுப்புகளில் எம். ஜி. ஆர்வுடன் அரசியல் பாதையில் பயணிக்க அரபித்தார்.  

இவர் மனைவி பானுமதி. இவருக்கு  நான்கு மகள்களும், இரண்டு மகன்களும் இருக்கிறார்கள். மூத்த மகன் சிவபாண்டியன் வேளாண்மைத் துறையிலும் மற்றொரு மகன் ஐய்யப்பன் (எ) சண்முகபிரபு மாவட்ட இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறையின் செயலாளராக பதவிவகின்றனர்.

மூன்று முறை  பாபநாசம் தொகுதி சட்டமன்ற உறுப்பினராகவும், தஞ்சாவூர் வடக்கு மாவட்ட கழக செயலாளராகவும், 15 வருடம் தொடர்ந்து பாபநாசம் ஒன்றிய கழக செயலாளராகவும் பணியாற்றி வந்தார் துறைக்கண்ணு. 2016ல் அமைச்சராக இருந்த வைத்திலிங்கம் ஒரத்தநாட்டில் போட்டியிட்டு வெற்றி பெறாமல் போகவே   தஞ்சாவூர் மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் துரைக்கண்ணுவை அமைச்சராக நியமனம் செய்தார் ஜெயலலிதா. 

பாபாநாசம் சட்டப்பேரவைத் தொகுதி 2006ம் ஆண்டு முதல் அதிமுக வசம் இருந்த முக்கிய காரணம் துரைக்கண்ணுவையே சேரும்.  2011, 2016 ஆண்டுகள் என தொடர்ந்து 3 முறை இதே தொகுதியில் வெற்றி பெற்றும் இருக்கிறார். ஆனால் 2016ல் தான் அமைச்சர் பதவி கிடைந்தது. 

அ.தி.மு.க கிளைக் கழக செயலாளராக தொடங்கி வேளாண்த்துறை அமைச்சர் என்று முன்னேறியவர். அமைச்சராக இருந்தாலும் அனைத்து மக்களிடம் எளிமையாக பழகு குணமும் தன்னடக்கமும் கொண்டவர். எல்லாரும் அணுகும் வகையில் செயல்பட்டு மக்களின் நன்மதிப்பை பெற்றவர் என அமைச்சர் மறைவிற்கு தஞ்சை மக்கள் வருத்தம் தெரிவிக்கிறார்கள்.

’’கட்சி மீது பற்றும், கழக கொள்கைகளில் உறுதியுடனும் இருந்தது வந்தவர். கழகம் அறிவித்த அனைத்து போராட்டங்களிலும் கலந்துக்கொண்டு பல முறை சிறை சென்றவர். தான் வகித்த பொறுப்புகளில் துடிப்புடன் பணியாற்றியவர் என்ற சிறப்புக்குரியவர். எண்ணியத்தை திரம்பட செய்து முடிக்கும் மனஉறுதிக்கொண்டவர்’’ என முதல்வர் பழனிசாமி அவர்கள் இரங்கல் அறிக்கையில் குறிப்பிட்டுயிருக்கிறார்.

 ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் அமைச்சரின் மறைவு ஈடு செய்யமுடியாத இழப்பு என்றும் மேலும் எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் , ‘’ சட்டமன்றத்தில் உறுப்பினர்களின் கேள்விகளுக்குப் பதில் அளிக்கும் போதும் , துறை சார்ந்த மானியங்களில் பதிலுரையாற்றுகின்ற போதும், அவை மரபுகளுக்கு உட்பட்டுச் செயல்படும் அமைச்சர். அவரது மறைவு அ.தி.மு.க.விற்கு பேரிழப்பாகும் ’’ என்று இரங்கல் தெரிவித்துள்ளனர்.   

அமைச்சர் துரைக்கண்ணு மறைவால் அதிர்ச்சியும், வேதனையும் அடைந்ததாகவும், அவரது குடும்பத்தினருக்கு தங்களது ஆழ்ந்த இரங்கலும், அனுதாபத்தையும் தெரிவித்து வருக்கிறார்கள் வைக்கோ , திமுக எம்.பி தமிழச்சி தங்கபாண்டியன், த.மா.க தலைவர் ஜி.கே.வாசன் உள்ளிட்ட பல அரசியல் தலைவர்கள். 

அமைச்சர் மறைவு காரணமாக தமிழ்நாடு அரசு சார்பில் துக்கம் அனுசரிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அமைச்சரின் உடல் சொந்த ஊரான தஞ்சை மாவட்டம் ராஜகிரியில் இறுதி சடங்கு நடைபெறவுள்ளது. 

மேலும் , அமைச்சர் துரைக்கண்ணு வகித்த பதவிக்கு அடுத்து யார் என்ற போட்டி சிலதினங்களுக்கு முன்பே ஆரம்பமாகிவிட்டது நிலையில் தற்போது சி.வி.சண்முகம் மற்றும் வைத்திலிங்கம் இடையே வேளாண் துறை யாருக்கு என்ற சர்ச்சை எழுத்துள்ளது.

 

- கே. அபிநயா