N95 மாஸ்க் இருமலின் ஆரம்ப வேகத்தை 10 மடங்குகள் வரை குறைத்து, அதன் பரவலை 0.1 முதல் 0.25 மீட்டர் வரை மட்டுப்படுத்தியதாக செயல்படுவதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். N95 மாஸ்க் வைரஸ் பரவுவதைத் தடுக்காது என்றும் கோவிட் -19 தொற்றுநோயைத் தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகளுக்கு 'முரணானது' என்றும் கூறியுள்ளது. 
 
இது தொடர்பாக, இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள் கூறுகையில், காற்றின் மூலம் பரவும் கொரோனா துளிகளை தடுக்கும் ஆற்றல் N95 மாஸ்க்குகளுக்கே உள்ளது என்று தெரிவித்துள்ளனர்.
இஸ்ரோவைச் சேர்ந்த பத்மனாப பிரசன்ன சிம்ஹா , பிரசன்ன சிம்ஹா மோகன் ராவோ இணைந்து திரவத் துளிகளாக காற்றில் இருக்கும் கொரோனாவின் வேகம் எப்படி இருக்கிறது என்பதை ஆய்வு செய்துள்ளனர். அதை தடுக்கும் ஆற்றல் எவ்வகையான மாஸ்க்குகளுக்கு உண்டு என்று கண்டறியப்பட்ட சோதனையில் N95 மாஸ்குகள்தான் எதிர்த்து தடுக்கும் ஆற்றல் கொண்டதாக இருந்துள்ளது. அதேபோல் இருமல், தும்மல் மூலம் அதிவேகமாக பரவும் கொரோனாவுக்கும் இந்த N95 மாஸ்குகள் சிறந்தது என்கின்றனர்.

இது தொடர்பாக நடத்தப்பட்ட ஆய்வானது, journal Physics of Fluids என்ற இதழில் வெளியிடப்பட்டுள்ளது.  N95 மாஸ்க் இருமலின் ஆரம்ப வேகத்தை 10 மடங்குகள் வரை குறைத்து, அதன் பரவலை 0.1 முதல் 0.25 மீட்டர் வரை மட்டுப்படுத்தியதாக  செயல்படுவதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் மாஸ்க் அணியாமல் தும்மினால் அல்லது இருமினால் 3 மீட்டர் வேகம் வரை பரவும். மற்ற மாஸ்குகள் இதன் வேகத்தை 0.5 மீட்டர் வரை பரவும். தூக்கி எறியக் கூடிய சர்ஜிகல் மாஸ்க் 0.5 முதல் 1.5 மீட்டர் தூரம் வரை கட்டுப்படுத்தும் என்கின்றனர். அதேபோல் இந்த ஆய்வில் முழங்கைகளை மூடி தும்முவதும், இருமவதும் கூட பயனற்றது என கூறுகின்றனர்.