இந்தியாவில் மீண்டும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. புதிதாக 17,921 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் மீண்டும் ஒரு ஊரடங்கு அமல்படுத்தப்பட வாய்ப்பு உள்ளதா என்று மக்கள் அச்சத்தில் இருக்கிறார்கள். 


இந்நிலையில் குணமடைந்தோர் விகிதம் 96.96% ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தோர் விகிதம் 1.40% ஆக குறைந்துள்ளது. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,58,063 ஆக உயர்ந்ததுள்ளது. இதில் புதிதாக 133 பேர் இறந்துள்ளனர். இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 1,84,598 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.


மேலும் தமிழக சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வருவதால், சுகாதாரத்துறை முன்
னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது.