“தவறாக நடந்து கொண்டதாக” கூறிய பெண், சீருடையில் இருந்த ஒரு போலீசாரை செருப்பால் அடித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் தான் இப்படி ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி இருக்கிறது.
உத்தரப் பிரதேசம் மாநிலம் லக்னோவில் இருக்கும் சார் பாக் ரயில் நிலையத்தில் நடைபெற்ற இந்த சம்பவம் தொடர்பான வீடியோ காட்சி தான், தற்போது சமூக வலைதளங்களில் பெரும் வைரலாகிக்கொண்டு இருக்கிறது.
இது தொடர்பான அந்த வீடியோவில், குறிப்பிட்ட சார் பாக் ரயில் நிலையத்தில் அங்கிருந்த ஒரு பெண்ணும், அங்கு சீருடையில் பாதுகாப்பு பணியில் இருந்த ஒரு போலீசாருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டு உள்ளது.
இந்த வாக்குவாதத்தின் போது, சீருடையில் இருநத அந்த போலீசார் குடிபோதையில் இருந்ததாகவும் கூறப்படுகிறது.
அப்போது, அந்த பெண்ணுக்கும் - போலீசாருக்கும் இடையே திடீரென்று வாக்குவாதம் முற்றிய நிலையில், அது கைகலப்பாக மாறி உள்ளது.
அப்போது, மிகவும் ஆவேசமாக காணப்பட்ட அந்த பெண், தனது காலில் அணிந்திருந்த செருப்பை கழட்டி, சீருடையில் இருந்த அந்த போலீசாரை சரமாரியாக தாக்கத் தொடங்கி உள்ளார். அந்த போலீசாரை அடித்துக்கொண்டே, “இந்த போலீசார், என்னிடம் தவறாக நடந்து கொண்டதாக” அந்த பெண் பகிரங்கமாக குற்றம் சாட்டி உள்ளார்.
அந்த பெண் செருப்பால் அடித்ததும், அந்த போலீசார் இன்னும் மூர்க்கத்தனமாக அந்த பெண்ணை பதிலுக்கு தாக்குகிறார்.
இதனைப் பார்த்த அங்கிருந்த பல பயணிகள் இதனை சுற்றி நின்று வேடிக்கைப் பார்த்த நிலையில், அவர்களில் ஒருவர் இதனை வீடியோவாக பதிவு செய்து உள்ளார்.
அத்துடன், அங்கிருந்த மற்றொருவர் அந்த போலீசாரின் கையில் இருந்த லத்தியை பிடிங்கி, அவருடன் மல்லுக்கட்டி வாக்குவாதம் செய்கிறார்.
மேலும், இந்த சம்பவத்தால் அந்த ரயில் நிலையத்தில் கூட்டம் கூடிய நிலையில், அங்கு சீருடையில் வந்த ஒரு பெண் போலீசார், பிரச்சனைக்குறிய அந்த ஆண் போலீசாரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபடுகிறார்.
இதனையடுத்து, இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பகிரப்பட்ட நிலையில், இந்த வீடியோவானது தற்போது தீயாக பரவிக்கொண்டு இருக்கிறது.
குறிப்பாக, உத்தரப் பிரதேசம் மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு மற்றும் பெண்களின் பாதுகாப்பு இவை இரண்டுமே ஒரே வீடியோவில் தெரிகிறது” என்று, பதிவிட்டு, இந்த வீடியோவை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து உள்ளார். இந்த வீடியோவுக்கு பதில் அளிக்கும் பலரும், அந்த போலீசாரை கண்டித்து, கடும் தண்டனை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.
இதனால், அந்த வீடியோவில் உள்ள போலீசாருக்கு பெரும் பிரச்சனை எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.